Close Menu
    What's Hot

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!
    Featured

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    Editor web3By Editor web3July 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Khamenei funeral trump
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    ‘ஆக்சியோஸ்’ (Axios) ஊடகத்திற்கு பேட்டியளித்த டிரம்ப், கமேனியை ஈரானிய மக்கள் வெறுப்பார்கள் என்று தாம் கருதியதாகவும், ஆனால் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றது தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். சனிக்கிழமையன்று தெஹ்ரானில் தொடங்கிய இறுதிச் சடங்கில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, பழிவாங்குவோம் என்று முழக்கமிட்டதுடன், கமேனியின் உருவப்படங்களைத் தாங்கி ஊர்வலமாகச் சென்றனர்.

    ஈரானை 1989 முதல் வழிநடத்தி வந்த 86 வயதான கமேனி, கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான்-இஸ்ரேல் போர் தொடங்கிய முதல் நாளில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவருடன் இவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் உயிரிழந்தனர். கமேனியின் உடல் மூன்று நாட்கள் தெஹ்ரானில் வைக்கப்பட்டிருக்கும் என்றும், பின்னர் ஜூலை 7-ம் தேதி புனித நகரமான கோமுக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, புதன்கிழமையன்று ஈராக் வழியாக ஊர்வலம் நடைபெற்று, இறுதியாக வியாழக்கிழமை கமேனியின் சொந்த ஊரான மஷ்காத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.

    இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கமேனியுடன் அவரது பேத்தி, மகள், மருமகன் மற்றும் அவரது மகன் மொஜ்தபா கமேனியின் மனைவி ஆகியோரும் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், இஸ்ரேலின் அச்சுறுத்தல் மற்றும் கண்காணிப்பு அபாயங்களைக் கருத்தில் கொண்டும், ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி தனது தந்தையின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    தற்போது நடைபெற்று வரும் இறுதிச் சடங்குகள், ஈரானின் இறையாண்மைக்கும் அதன் புதிய தலைவருக்கும் வலுசேர்க்கும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது மற்றும் அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றில் ஈரான் கவனம் செலுத்தி வரும் சூழலில், போர் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டிருந்த இந்த இறுதி ஊர்வல நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. போர் முடிவுக்கு வரும் வரை இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    I was shocked Iranians crying Khamenei's funeral people hated him' Trump
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!
    Next Article “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்
    Editor web3
    • Website

    Related Posts

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    July 5, 2026

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    July 5, 2026

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.