Author: Editor web3
இந்த ஆண்டு நடைபெற்று வரும் 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோஸ்டார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, நடப்புத் தொடரின் ஒட்டுமொத்தப் பார்வையாளர்களின் எண்ணிக்கை 1.04 பில்லியனை (104 கோடி) கடந்து வியக்கவைத்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 7.4 சதவீதம் கூடுதலாகும். குறிப்பாக, தொடக்க வாரத்திலேயே 51.5 கோடி பேர் நேரலையில் கண்டு களித்தது ஒரு தனி சாதனையாகப் பார்க்கப்படுகிறது. தொடரின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் 26 போட்டிகள் மீதமுள்ளன. தற்போது நிலவி வரும் கடும் போட்டி மற்றும் ப்ளே-ஆப் சுற்றுகள் தொடங்க உள்ளதால், இந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் பல கோடிகளைத் தாண்டி புதிய உலக சாதனையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் தளங்களில் இலவசமாகப் பார்க்கும் வசதி மற்றும் கனெக்டட் டிவி…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு அமைவதில் ஒருபுறம் ஆளுநர் மாளிகையில் அரசியல் பரபரப்பு நீடித்து வரும் வேளையில், மறுபுறம் தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 15-ஆம் தேதி முதல் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெறப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இனி அரசு நிர்வாகம் அதன் வழக்கமான வேகத்தில் இயங்கத் தொடங்கும் எனத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், தாசில்தார்கள் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரை அனைத்து அரசு அதிகாரிகளும் வழக்கமான மக்கள் நலப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, முழுமையாகத் தேர்தல் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். வாக்காளர் விழிப்புணர்வு, வாக்குப்பதிவு எந்திரங்களைப் பாதுகாத்தல் மற்றும் தேர்தல்…
தமிழக அரசியலில் நிலவும் இழுபறிக்கு இடையே, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகம் இன்று அவசரமாக டெல்லிக்கு மேற்கொண்ட பயணம் பெரும் அரசியல் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுகவின் இந்தத் திடீர் டெல்லி நகர்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. பாஜகவின் தேசியத் தலைமைக்கும் அதிமுகவுக்கும் இடையே ஒரு புதிய அரசியல் சமன்பாடு உருவாக வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், கட்சித் தலைமை வழங்கிய மிக முக்கியமான ரகசியப் பணிகளை முன்னெடுப்பதற்காகவே அவர் டெல்லி விரைந்துள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தேவையான பலத்தை நிரூபிக்கத் திணறி வரும் வேளையில், சி.வி. சண்முகம் டெல்லியில் பாஜக மேலிடத் தலைவர்களைச் சந்தித்துத் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது. ஒருபுறம் ஆளுநர் மாளிகையில் சட்ட ரீதியான ஆலோசனைகள் நடைபெற்று…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 108 இடங்களைப் பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரை மாநிலத் தலைமைச் செயலாளர் சாய்குமார் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, மாநிலத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் இழுபறி மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சட்டம் ஒழுங்கு நிலவரங்கள் குறித்து ஆளுநரிடம் தலைமைச் செயலாளர் விரிவாக விளக்கமளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்கள் என்ற இலக்கை எட்ட தவெக-விற்கு இன்னும் சில இடங்கள் தேவைப்படுவதால், ஆளுநர் இதுவரை ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுக்கவில்லை. இந்த நிலையில், தவெக தொண்டர்கள் மத்தியில் நிலவும் எதிர்பார்ப்பு மற்றும் மாநிலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள்…
பெரும்பான்மை இல்லாததால் தவெக ஆட்சியமைக்க ஆளுநர் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இந்தநிலையில், பெரும்பான்மையைத் திரட்ட தமிழக வெற்றிக் கழகம் தற்போது இடதுசாரிகள் மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக தரப்பு, தாங்கள் என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளிடம் எந்தவித ஆதரவும் கோரவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. மாறாக, விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளதாகவும், அவர்களின் முடிவுக்காகத் தவெக தலைமை காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை, தவெக-வின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேரில் சந்தித்துப் பேசினார். ஏற்கனவே தவெக தலைவர் விஜய், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு கோரி அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியிருந்த நிலையில், இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார்,…
சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அதன் பலம் 113-ஆக அதிகரித்துள்ளது. இந்த பலத்துடன் நேற்று மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இருப்பினும், ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் வராதது தவெக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜனநாயக முறைப்படி தனிப்பெரும் கட்சியை அழைக்காத ஆளுநரின் முடிவிற்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, 2வது நாளாக இன்றும் தவெக தலைவர் விஜய் அல்லது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் காலை 11 மணியளவில் மீண்டும் ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது, 113 பேரின் ஆதரவு இருப்பதாக விஜய் கூறி உள்ள நிலையில் பெரும்பான்மை குறித்து கேட்டுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான 118 பேரின் ஆதரவு குறித்து ஆளுநர் சில விளக்கங்களை கேட்டதாக…
தமிழக ஆளுநர் மாளிகையான கிண்டி ராஜ் பவனில் இன்று காலை அரங்கேறிய நிகழ்வுகள், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்க முற்பகல் 11 மணிக்குத்தான் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே, அதாவது 10:45 மணிக்கே விஜய் ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்துள்ளார். ஆளுநர் அப்போது தனது சட்ட வல்லுநர்கள் மற்றும் தனிச் செயலாளருடன் மிக முக்கியமான ஆலோசனையில் இருந்ததால், விஜய் சுமார் 15 நிமிடங்கள் அங்கிருந்த விஐபி காத்திருப்பு அறையில் அமர வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சட்ட வல்லுநர்களுடனான ஆலோசனையை முடித்த பிறகே, ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், ஆளுநர் தரப்பிலிருந்து பல கடினமான கேள்விகள் முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களின் நம்பகத்தன்மை, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான காலக்கெடு மற்றும் கட்சித் தாவல்…
தமிழக அரசியலில் நிலவி வந்த பரபரப்பு தற்போது உச்சகட்ட குழப்பத்தை எட்டியுள்ளது. ஆளுநர் மாளிகையில் சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற ஆலோசனையின் முடிவில், விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் தரப்பில் சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக உடனடியாகப் பதவியேற்க ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, ஆதரவு அளிக்கும் கட்சிகளின் கடிதங்களில் உள்ள சட்ட நுணுக்கங்கள் மற்றும் பெரும்பான்மையை நிரூபிக்கும் விதம் குறித்து ஆளுநர் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதிலளித்த விஜய், “சட்டமன்றத்தில் எனது பெரும்பான்மையை நிச்சயம் நிரூபிப்பேன்” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள போதிலும், ஆளுநர் மாளிகையிலிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆளுநர் மாளிகையிலிருந்து விஜய் வெளியேறிய பின்னரும், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் கடிதம் இன்னும் கைக்கு வந்து சேராதது தவெக முகாமில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு குரல் கொடுத்து வரும் நிலையில்,…
ஆட்சியமைக்க விஜய்யை அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது. திமுக தலைவர் ஸ்டாலின் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன். இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம். ‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ்…
விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், பதவியேற்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த ஆட்சி அமைப்பதற்கான இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் மிகத் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின் போது, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையிலும், காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் சமர்ப்பித்து ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரினார். பேச்சுவார்த்தையின் முடிவில், ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியே வந்த விஜய்க்கு ஆளுநர் தரப்பில் ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “சட்டமன்றத்தில் எனது பெரும்பான்மையை நான் நிச்சயம் நிரூபிப்பேன்” என ஆளுநரிடம் விஜய் உறுதியளித்துள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடித் திருப்பத்திற்கு முக்கியக் காரணமாக,…