Author: Editor web3

இந்திய கிரிக்கெட் உலகின் நட்சத்திர பேட்டர் சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது மனைவி தேவிஷா ஷெட்டி தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. ஐபிஎல் 2026 திருவிழா ஒருபுறம் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், சூர்யாவின் வீட்டில் மகிழ்ச்சி மழை பொழிந்து வருகிறது. 2016-ல் இல்லற வாழ்வில் இணைந்த இந்தத் தம்பதிக்கு, பத்து ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பிறகு தற்போது முதல் குழந்தை பிறந்துள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் பிஞ்சு கரங்களைப் பிடித்திருக்கும் நெகிழ்ச்சியான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள சூர்யா, “புன்னகைகள் மற்றும் கனவுகளுடன் எங்கள் மகளை வரவேற்கிறோம்” எனத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வரும் சூர்யகுமார், தனது மனைவியின் பிரசவத்திற்காக கடந்த சில நாட்களாகப் போட்டிகளில் இருந்து ஓய்வெடுத்துக் குடும்பத்துடன் இருந்து வருகிறார். இந்த சீசனில் மும்பை அணியின் செயல்பாடு சற்று சுமாராக இருக்கும் நிலையில், இந்த வாரிசின் வருகை சூர்யகுமாருக்குப் புதிய உத்வேகத்தைத்…

Read More

தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதற்கான சூழலில் பெரும் திருப்பமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழக வெற்றிக் கழகம்  ஆட்சி அமைக்கத் தங்களது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன. இன்று சென்னையில் நடைபெற்ற அந்தந்தக் கட்சிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளன. நிலையான மக்களுக்கான ஆட்சி தொடர்வதற்கான நிபந்தனையற்ற ஆதரவை நாங்கள் தவெகவிற்கு அளிக்கிறோம் என்று சிபிஎம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய கம்யூனிஸ்ட்டை தொடர்ந்து 2 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள சிபிஎம்-யும் தனது ஆதரவு தெரிவித்துள்ளதால், தவெகவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பெரும்பான்மைக்கு இன்னும் 2 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தவெகவிற்கு தேவைப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது இடதுசாரி கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.  இருப்பினும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டை பொறுத்து தனது முடிவு இருக்கும் என்று…

Read More

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில், தளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் ஐந்து இடங்களில் களம் கண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தளி தொகுதியில் ராமச்சந்திரன் மற்றும் திருத்துறைப்பூண்டி தொகுதியில் மாரிமுத்து என இரண்டு இடங்களில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழகத்தில் புதிய அரசு அமைவதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம்  ஆட்சி அமைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதற்கான ஆதரவு கடிதத்தை தவெகவின் நிர்மல் குமாரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராமச்சந்திரன் வழங்கினார். இன்னும் சற்றுநேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது ஆதரவை தெரிவிக்கவுள்ளதாக தகவல்…

Read More

பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழக மக்களின் பேராதரவை பெற்று, வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலதாமதம் செய்வது ஜனநாயக மரபுகளுக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரான செயல் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்துகிறது. மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, ஜனநாயகத்தின் அடிப்படை பெரும்பான்மை ஆதரவு பெற்ற தலைமையினரை ஆட்சி அமைக்க அழைப்பது ஆளுநரின் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பாகும். அந்த பொறுப்பில் ஆளுநர் அவர்கள் சரியான முறையில் செயல்பட வேண்டியது அவசியம். தமிழக மக்களின் ஜனநாயக உரிமையைப் புறக்கணிக்காமல், அரசியலமைப்புச் சட்ட மரபுகளையும், ஜனநாயக நெறிமுறைகளையும் உடனடியாக பின்பற்றி, மக்கள் விருப்பத்திற்கேற்ப ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்துகிறது. மக்களின் தீர்ப்பே உயர்ந்தது, அதனை மதிப்பதே ஜனநாயகத்திற்கு உண்மையான மரியாதையாகும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read More

தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் இன்று மாலை 4.30 மணியளவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவி வரும் அரசியல் இழுபறியில், தற்போது புதிய திருப்பமாக தமிழக வெற்றிக் கழகம் அரசு அமைக்க இடதுசாரி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது. ஆதரவு அளிப்பது தொடர்பான கடிதத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெகவிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கியது.  இதன் மூலம் தவெக ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தவெக-விற்குத் தனது ஆதரவை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பெரும்பான்மைக்கு இன்னும் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தவெக-விற்கு தேவைப்படுகிறது. ஆதரவு தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று விஜய் நன்றி தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின்…

Read More

தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் பாஜக வாக்களிக்காது என்று பாஜக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும் சட்டமன்றத் தேர்தலில் களம் கண்ட பாரதிய ஜனதா கட்சி, தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளை முழு மனதுடன் ஏற்பதாக அறிவித்துள்ளது. தமிழக மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை மதிக்கும் வகையில், இந்தத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான அதிகாரத்தையோ அல்லது வாய்ப்பையோ மக்கள் தங்களுக்கு வழங்கவில்லை என்பதை உணர்ந்திருப்பதாக அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது. மக்களின் விருப்பத்திற்கும், ஜனநாயகத் தீர்ப்புக்கும் தலைவணங்குவதாகத் தெரிவித்துள்ள தமிழக பாஜக, மாநிலத்தில் புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் கூறியுள்ளது. ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் எவ்விதமான நேரடிப் பங்களிப்பையும் அல்லது தலையீட்டையும் கட்சி மேற்கொள்ளாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ளும் எந்தவொரு கட்சிக்கும்…

Read More

நாடாளுமன்ற மக்களவையில் திராவிட முன்னேற்றக் கழக  உறுப்பினர்களுக்கான இருக்கை அமைப்பில் உரிய மாற்றங்களைச் செய்யக் கோரி, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களில் ஒருவரான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மக்களவை சபாநாயகருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தற்போதைய அரசியல் சூழல்களையும், கூட்டணிக் கணக்குகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி உறவு முடிவுக்கு வந்துள்ள நிலையில், சபையில் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களுடன் இணைந்தே அமர்வது தற்போதைய சூழலுக்கு உகந்ததாக இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக உறுப்பினர்கள் தங்களின் அரசியல் நிலைப்பாட்டைச் சுதந்திரமாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்த இந்த இடமாற்றம் அவசியம் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையில் தங்களது ஜனநாயகக் கடமைகளையும், தொகுதிப் பணிகளையும் எவ்விதத் தொய்வுமின்றிச் சிறப்பாக ஆற்ற ஏதுவாக, அவர்களுக்குத் தனியாக இருக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அக்கோரிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான முறையான…

Read More

கடந்த 2024-ஆம் ஆண்டு புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது. இந்த வழக்கில் கைதான 19 வயது இளைஞன் கருணாஸ் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து, புதுச்சேரி போக்சோ நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி கருணாஸுக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார். இதே வழக்கில் தொடர்புடைய விவேகானந்தன் (59) என்பவர் ஏற்கனவே சிறையில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது முக்கியக் குற்றவாளிக்கு உச்சகட்டத் தண்டனை கிடைத்துள்ளது. மரண தண்டனையுடன், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ruu.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பிஞ்சுச் சிறுமியின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போராடி வந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் புதுச்சேரி மக்கள், இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான கொடூரக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக அமையும் எனப்…

Read More

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். https://x.com/i/status/2052652213735157838 அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்! என்று பதிவிட்டுள்ளார்.

Read More

தமிழகத்தில் நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு விசிக தடையாக இருக்காது. என்றார். விசிக-வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், “கூட்டணி மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கட்சியின் உயர்நிலைக் குழு நிர்வாகிகளுடன் இன்று மாலை 5 மணியளவில் இணையதளம் வாயிலாக விரிவான ஆலோசனை நடத்த உள்ளோம். கட்சியின் தலைவர் என்ற அதிகாரம் எனக்கு இருந்தாலும், மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவை எடுப்பேன். இது ஒரு ஜனநாயக ரீதியான நடைமுறை. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, நாளை காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்து விசிக-வின் இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்,” என்று தெரிவித்தார். கூட்டணியில் இருக்கும் பட்சத்தில் நேற்று முன்னாள் முதலமைச்சரை சந்தித்து…

Read More