Author: Editor web3
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, சி.ஜோசப் விஜய் இன்று முதல்முறையாக சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். கோட்டைக்கு வருகை தந்த முதலமைச்சரை தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, காவல் துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். ஒரு கட்சியின் தலைவராக இருந்து மாநிலத்தின் முதல் குடிமகனாகக் கோட்டைக்குள் அவர் நுழைந்த அந்தத் தருணம், தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பதவியேற்பு விழா நடைபெற்ற இடத்திலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழிநெடுகிலும், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு நின்று முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர்களைத் தூவியும், முழக்கங்களை எழுப்பியும் மக்கள் காட்டிய அன்பு மழையில் நனைந்தபடி, கைகளைக் கூப்பி நன்றி தெரிவித்தவாறே அவர் கோட்டைக்குச் சென்றடைந்தார். தலைமைச் செயலகத்தில் தனது பணிகளைத் தொடங்கிய அவர், அங்குள்ள முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, உணர்ச்சிப்பூர்வமான உரை நிகழ்த்திய சி.ஜோசப் விஜய், தனது உரையை “நல்லாருப்போம்… நல்லாருப்போம்… எல்லாரும் நல்லாருப்போம்” என்ற நேர்மறையான வாசகத்துடன் தொடங்கினார். “நான் தேவதூதன் அல்ல, உங்களைப் போன்ற ஒரு சாமானிய மனிதன்; மன்னர் பரம்பரையில் இருந்து நான் வரவில்லை. பசி என்றால் என்ன என்பது எனக்கு நன்றாகவே தெரியும்” எனக் குறிப்பிட்ட அவர், இந்த அரசியல் பயணத்தில் சந்தித்த கஷ்டங்களையும், அவமானங்களையும் நினைவு கூர்ந்தார். “ஜோசப் விஜய் எனும் நான்” என்ற வாக்கியம் இன்று நிஜமாகியுள்ளது என்றும், சாமானிய மனிதனாகத் தன்னை ஏற்றுக்கொண்ட 8 கோடி மக்களின் நம்பிக்கைக்கு உண்மையாக இருப்பேன் என்றும் அவர் உறுதி அளித்தார். அரசின் நிதிநிலை குறித்துப் பேசிய அவர், முந்தைய அரசு கடன் சுமையை ஏற்றி வைத்துச் சென்றுள்ளதைச் சுட்டிக்காட்டினார். “அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வெள்ளை அறிக்கை வெளியிட்ட பிறகே பணிகளைத் தொடங்குவேன். எனக்குச் சற்று அவகாசம்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் இன்று தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். விழா மேடைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை, பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் விஜய் இன்முகத்தோடு வரவேற்றார். தேசபக்தி முழக்கமிடும் வகையில் ‘வந்தே மாதரம்’ பாடலுடன் விழா இனிதே தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கம்பீரமான இசையுடன் தேசிய கீதம் மற்றும் மாநிலத்தின் அடையாளமான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க, ஈடுஇணையற்ற மக்கள் ஆதரவுக்கு மத்தியில் விஜய் முறைப்படி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, முன்னெப்போதும் இல்லாத ஒரு வரலாற்று நிகழ்வாக, விழா மேடையிலேயே தனது முதல் முக்கியக் கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். மக்கள் நலனை முன்னிறுத்தி அவர் இட்ட முதல் கையெழுத்து, தமிழக மக்களுக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று தொடங்கியது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய், இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். “சி.ஜோசப் விஜய் என்னும் நான்…” என அவர் உறுதிமொழி எடுக்க, அவருக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் முறைப்படி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முன்னதாக, விழா மேடைக்கு வருகை தந்த ஆளுநரை, விஜய் அவர்கள் பொன்னாடை போர்த்தி, மலர்க்கொத்து வழங்கி மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து முழக்கமிட்டது மைதானத்தையே அதிரச் செய்தது. தேசபக்தி மற்றும் கலாச்சார உணர்வுடன் தொடங்கிய இந்த விழாவில், முதலில் ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கம்பீரமான இசைக்கு நடுவே தேசிய கீதம் மற்றும் மாநிலத்தின் பெருமைமிகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், விஜய்க்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அவருடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்க உள்ளனர். அமைச்சர்கள் பொறுப்பேற்பு பட்டியல் ஆளுநர் மாளிகை தரப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியீடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தி.நகர் – புஸ்ஸி ஆனந்த், வில்லிவாக்கம் – ஆதவ் அர்ஜுனா, திருச்செங்கோடு – அருண்ராஜ், கோபிசெட்டிபாளையம் – செங்கோட்டையன், மயிலாப்பூர் – வெங்கட்ரமணன், திருப்பரங்குன்றம் – CTR நிர்மல்குமார், எழும்பூர் – ராஜ்மோகன், காரைக்குடி – பிரபு, சிவகாசி – கீர்த்தனா ஆகியோர் பதவியேற்க உள்ளனர்.
தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, நடிகை த்ரிஷா சென்னை நேரு விளையாட்டு அரங்கிற்கு வருகை தந்துள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள தனது இல்லத்திலிருந்து நேரு விளையாட்டு அரங்கிற்குப் புறப்பட்ட அவர், வெளிர் நீல நிறப் புடவையில் காரில் அமர்ந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரங்கிற்கு வந்தடைந்த த்ரிஷா, அங்கிருந்த ரசிகர்களையும் கட்சித் தொண்டர்களையும் பார்த்து உற்சாகத்துடன் கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சமீபகாலமாக விஜய்யுடன் இணைந்து த்ரிஷாவின் பெயர் பல்வேறு சர்ச்சைகளிலும் கிசுகிசுக்களிலும் சிக்கி வந்த நிலையில், இந்த முக்கிய அரசியல் நிகழ்வில் அவர் கலந்து கொள்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காலை 10 மணியளவில் நடைபெறவுள்ள இந்த விழாவில், ஆளுநர் அர்லேக்கர் விஜய்க்கு முறைப்படி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தொண்டர்களுக்கு மத்தியில், த்ரிஷாவின் வருகை இந்த விழாவிற்கு கூடுதல்…
இன்னும் சற்றுநேரத்தில் தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், நேரு விளையாட்டு அரங்கத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்துள்ளனர். தமிழ்நாடு அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் தவெக 116 எம்.எல்.ஏ.க்கள் பலத்தை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை உள்ளது. இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது. இந்த நிலையில் தவெகவின் பலம் 118-ஆக உயர்ந்த நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக IUML-லும் நிபந்தனையற்ற ஆதரவை தவெகவிற்கு தெரிவித்துள்ளது. இதனால் த.வெ.க.வின் பலம் 120…
தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதற்கான பெரும்பான்மையை நோக்கிய பயணத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-விற்குத் தங்களது ஆதரவை உறுதி செய்துள்ளன. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாகக் கடலில் மூழ்கினர். பட்டாசுகள் முழங்க, இனிப்புகள் பரிமாறப்பட்டு, வெற்றிக் கோஷங்களுடன் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து தற்போது இடதுசாரிகளும் கைகோர்த்துள்ளதால், தவெக-வின் பலம் 116 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. தனது அரசியல் பயணத்தில் கைகொடுத்த கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குத் தொலைபேசி வாயிலாக மட்டும் நன்றி கூறாமல், ஒரு படி மேலே சென்று அவர்களது கட்சி அலுவலகங்களுக்கே நேரில் சென்று நன்றி தெரிவிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதேபோல் விசிகவும் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது மறுபுறம், ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கான இறுதிக்கட்டப் பணிகள்…
பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காமல் தவித்து வந்த தவெகவுக்கு தற்போது இடதுசாரி கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. விசிகவும் ஆதரவை தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாநிலத்தில் புதிய அரசு அமைவது காலத்தின் கட்டாயம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். https://x.com/i/status/2052719645053050948 இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி! இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய…
தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் நிலவி வந்த முட்டுக்கட்டையை உடைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக இடதுசாரி கட்சிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக சிபிஐ மற்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். தவெக-விடம் போதிய பெரும்பான்மை இல்லாததால் அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஆலோசித்து இந்த ஆதரவை வழங்குகிறோம்,” எனத் தெரிவித்தனர். வெளியில் இருந்து ஆதரவு – அமைச்சரவையில் பங்கில்லை: தவெக அமைக்கும் அமைச்சரவையில் இடதுசாரி கட்சிகள் நேரடியாகப் பங்கேற்காது என்றும், கொள்கை அடிப்படையில் வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளிக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மே 10-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் புதிய அரசு அமையாவிட்டால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படும் அபாயம் உள்ளதைச் சுட்டிக்காட்டிய தலைவர்கள், அந்தச் சூழலைத் தவிர்க்கவே இந்த ஜனநாயகக்…