Close Menu
    What's Hot

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இன்னும் சற்றுநேரத்தில்… தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்!
    தமிழ்நாடு

    இன்னும் சற்றுநேரத்தில்… தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்!

    Editor web3By Editor web3May 10, 2026Updated:May 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay takes oath Nehru Stadium
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்னும் சற்றுநேரத்தில் தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், நேரு விளையாட்டு அரங்கத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

    தமிழ்நாடு அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன.

    இதன் மூலம் தவெக 116 எம்.எல்.ஏ.க்கள் பலத்தை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை உள்ளது. இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது. இந்த நிலையில் தவெகவின் பலம் 118-ஆக உயர்ந்த நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக IUML-லும் நிபந்தனையற்ற ஆதரவை தவெகவிற்கு தெரிவித்துள்ளது. இதனால் த.வெ.க.வின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், தவெக தலைவர் விஜய் நேற்று மாலை தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்..

    அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பு ஆளுநர், தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

    இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ள விழாவில், தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

    இதனை தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்க உள்ளனர். மேலும் வரும் 13ம் தேதிக்குள் விஜய் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மக்கள் மாளிகை தெரிவித்துள்ளது.

    பதவியேற்பு விழாவிற்காக   விஜய் புதிய கெட்டப்பில் வந்துள்ளார். வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து Tucked-in செய்துள்ள அவருக்கு உயரதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.  ராகுல் காந்தி, விஜய்யின் பெற்றோர்,  தவெக தொண்டர்கள், ஆதரவு தெரிவித்த கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் நேரு உள் விளையாட்டு அரங்கில் குவிந்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஞாயிற்றுக்கிழமை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்!
    Next Article விஜய் பதவியேற்பு விழாவில் நடிகை த்ரிஷா பங்கேற்பு!.
    Editor web3
    • Website

    Related Posts

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    May 16, 2026

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.