தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், விஜய்க்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அவருடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்க உள்ளனர். அமைச்சர்கள் பொறுப்பேற்பு பட்டியல் ஆளுநர் மாளிகை தரப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியீடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தி.நகர் – புஸ்ஸி ஆனந்த், வில்லிவாக்கம் – ஆதவ் அர்ஜுனா, திருச்செங்கோடு – அருண்ராஜ், கோபிசெட்டிபாளையம் – செங்கோட்டையன், மயிலாப்பூர் – வெங்கட்ரமணன், திருப்பரங்குன்றம் – CTR நிர்மல்குமார், எழும்பூர் – ராஜ்மோகன், காரைக்குடி – பிரபு, சிவகாசி – கீர்த்தனா ஆகியோர் பதவியேற்க உள்ளனர்.
