Author: Editor web3

தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு குழுவினர் அவரைத் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது, அதிமுக சட்டமன்றக் குழு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தனர். அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக  எஸ்.பி. வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் சட்டமன்றக் கொறடாவாக  சி. விஜயபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சபாநாயகரிடம் சி.வி. சண்முகம் தரப்பு தெரிவித்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதத்தையும் அவர்கள் தற்காலிக சபாநாயகரிடம் நேற்று நேரில் வழங்கினர். நேற்று தற்காலிக சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட கடிதத்தைத் தொடர்ந்து, இன்றும் முறைப்படி சபாநாயகரைச் சந்தித்த சி.வி. சண்முகம் தரப்பினர், தங்களுக்கு 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். பெரும்பான்மையான உறுப்பினர்கள் எஸ்.பி. வேலுமணி பக்கமே இருப்பதால், அவரையே சட்டமன்றக் குழுத் தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை…

Read More

பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை வாழ்த்தி அனைத்து கட்சிகளின் சார்பில் உள்ள உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். அந்தவகையில், புதிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை வாழ்த்திப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது உரையைத் தொடங்கும் முன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தனது உரையில் ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்த உதயநிதி, “சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், முதல்வர் விஜய் மற்றும் நான் என மூவருமே ஒரே கல்லூரியில்   பயின்றவர்கள்” என்று குறிப்பிட்டார். இந்தத் தகவல் அவையில் ஒரு கலகலப்பான சூழலை உருவாக்கியது. “நாங்கள் அனைவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்களாக இருக்கலாம், ஆனால் இந்தப் பேரவையைப் பொறுத்தவரை நான் சார்ந்திருக்கும் திமுக தான் மிகவும் சீனியர்” என்று அவர் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், “அரசியல் அனுபவமும், அறிவும் அதிகம் கொண்டவர்கள் திமுகவினர். மாநிலத்தின் நலனே மிக முக்கியம்…

Read More

தமிழக சட்டப்பேரவையில் நாளை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், தவெக தரப்புக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவாச சேதுபதி, நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கும், திமுக வேட்பாளர் பெரியகருப்பனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து திமுக வேட்பாளர் பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தனது மனுவில், வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், எனவே தேர்தல் ஆவணங்களை மறுஆய்வு செய்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கை ஆவணங்களை ஆய்வு…

Read More

தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-க்களுக்கான இருக்கைகள் இன்று முறைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின்  ஆட்சி அமைய ஆதரவு அளித்த காங்கிரஸ், விசிக, சிபிஐ (CPI) மற்றும் சிபிஎம் (CPM) ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுங்கட்சி வரிசையிலேயே இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நேற்று அனைவரும் பதவியேற்ற நிலையில், இன்று புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து புதிய சபாநாயகரை வாழ்த்திப் பேசிய முதல்வர் விஜய், ஜனநாயக மாண்புகளை வலியுறுத்தி உரையாற்றினார். “சட்டப்பேரவையில் அனைவரும் சமம். ஒரு கட்சியில் ஒரே ஒரு உறுப்பினர் இருந்தாலும், அவரது கருத்துக்கும் உரிய மதிப்பளிக்கப்படும்” என உறுதியளித்தார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி சிறு மற்றும் பெரிய கட்சிகளின் கருத்துக்கள் சமமாக எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். பேரவையின் மாண்பையும், கண்ணியத்தையும் காக்கும் மிகப்பெரிய பொறுப்பு சபாநாயகருக்கு இருப்பதாகவும், சட்டமன்ற நடவடிக்கைகள் சீராகவும் செம்மையாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குவோம் என்றும் விஜய்…

Read More

சென்னையில் இன்று (மே 12) ஆபரணத் தங்கத்தின் விலை  அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1,840 அதிகரித்து ரூ.1,14,640 என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக மந்த நிலையில் இருந்த சந்தையில், நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில், இன்று அதற்கு நேர்மாறாக விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்திருப்பது நடுத்தர மக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையே இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் விலை குறைந்து வந்ததால் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்தவர்கள், இன்றைய அதிரடி ஏற்றத்தைக் கண்டு நகைக்கடைகளுக்குச் செல்லத் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும், இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் மற்றும்…

Read More

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் அமர்வு இன்று கோட்டை வளாகத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கியது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, இரண்டாவது நாளாக இன்றும் முதல்வர் விஜய் அவர்கள் ஸ்டைலான கோட்-சூட் உடையில் பேரவைக்கு வருகை தந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நடிகர் என்பதையும் தாண்டி, ஒரு மாநிலத்தின் முதல்வராகத் தனது தனித்துவமான தோற்றத்தின் மூலம் அவர் சட்டமன்றத்தில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தைப் பதிவு செய்து வருகிறார். இன்றைய கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த நிர்வாகியும் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான JCD பிரபாகர் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் துணை தலைவராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வாகினர். சபாநாயகர் பதவியை அலங்கரிக்கும் JCD பிரபாகர், தனது நீண்டகால அரசியல் அனுபவத்தின் மூலம் அவையை நடுநிலையோடு…

Read More

தேர்தல் முடிவுகளுக்கு பின் அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இபிஎஸ் – எஸ்.பி.வேலுமணி என மீண்டும் இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் சி.வி.சண்முகம், இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக ஆட்சி அமைக்க த.வெ.க-வுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்.  தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில முன்மொழிவுகளை வைத்தார். இந்த இயக்கம் தி.மு.க.வை எதிர்த்து தான் தொடங்கப்பட்டது. இந்த 53 ஆண்டுகாலம் தி.மு.க.வை எதிர்த்து தான் அரசியல் செய்கிறோம். 3, 4 தலைமுறைகளாக தி.மு.க.வை எதிர்த்து தான் அரசியல் செய்து வருகிறோம். இந்த சூழலில், எந்த தி.மு.க-வை எதிர்த்தோமோ அந்த தி.மு.க வின் ஆதரவோடு அ.தி.மு.க…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், தற்போது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை அடுத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். புதிய அமைச்சரவையில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். அமைச்சராகப் பதவியேற்ற பின் பேசிய செங்கோட்டையன், இது ஒரு இமாலய வெற்றி என்றும், விஜய்யின் செயல்பாடு தனக்கு எம்.ஜி.ஆரை நினைவூட்டுவதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த அரசுக்கு தனது வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருப்பேன் என்றும் அவர் உறுதிபடக் கூறினார். தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தேர்தலுக்குப் பிந்தைய பலமான கூட்டணியை அமைத்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்…

Read More

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்த விவகாரத்தில் எழுந்துள்ள விமர்சனங்களுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடி விளக்கம் அளித்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார். விழா நிறைவடைந்து அவர் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவரை வழியனுப்பி வைத்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விரைவில் அமையவுள்ள தவெக அமைச்சரவையில் காங்கிரஸும் இடம்பெறப் போகிறது என்றார். மேலும், காங்கிரஸ் கட்சி திமுகவின் முதுகில் குத்திவிட்டுச் சென்றுவிட்டதாகச் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் விமர்சனங்கள் வலுத்து வந்த நிலையில், அதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “நாங்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை; அனைத்துத் தகவல்களையும் முறையாகத் தெரிவித்துவிட்டுத்தான் தவெக கூட்டணிக்கு வந்தோம்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதாவது, தவெக-வுடன் கூட்டணி வைக்கும் முன்பே டெல்லி…

Read More

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், இன்று தனது முதல் அரசுமுறைப் பயணமாக சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராகப் பெரியாரை விஜய் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், முதல்வராகப் பொறுப்பேற்ற உடனேயே இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களை விஜய் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, கி. வீரமணி, அவருக்குப் பெரியார் தொடர்பான புத்தகங்களை நினைவுப் பரிசாக வழங்கினார். பிரசாரத்தின்போது விஜய்யை வீரமணி கடுமையாக விமர்சித்த நிலையில், இச்சந்திப்பு அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

Read More