Author: Editor web3
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே முக்கிய அதிரடி நடவடிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, சட்டம் ஒழுங்கு போன்ற விவகாரங்களில் கடுமையான முடிவுகளை எடுக்கப்போவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த வரிசையில் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார் முதல்வர் விஜய். இதன் அடிப்படையில் மொத்தமாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. அதற்கான பணிகளிலும் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்தநிலையில், அடுத்த அதிரடியாக ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் மேலாண் இயக்குனராக நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் முதலமைச்சரின் தனிச் செயலாளர் – 3 பதவிக்கு அண்ணாதுரை ஐஏஎஸ்…
தமிழக அரசியலில் கூட்டணி மற்றும் சந்திப்புகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய நகர்வாக அதிமுகவின் மூத்த தலைவர் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணியை நேரில் சந்தித்தார். சென்னை எம்.ஆர்.சி நகரில் அமைந்துள்ள சி.வி. சண்முகத்தின் அலுவலகத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக,எஸ்.பி. வேலுமணி,நத்தம் விஸ்வநாதன் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் வாசலுக்கே வந்து முதலமைச்சரை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலரும் முதலமைச்சருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்துகள் வழங்கியும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி. சண்முகம் அணி என இரு துருவங்களாகக் கட்சி பிளவுபட்டுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் நேரடியாக சி.வி. சண்முகத்தைச் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
முதலமைச்சர் விஜய், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர்களை சந்தித்தார். தமிழ் நாட்டின் முதலமைச்சரராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய் மாநிலத்தின் மூத்த அரசியல் கட்சி தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார். அந்த வகையில் இதுவரை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுசெயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐயுஎம்எல் கட்சி தலைவர் காதர் மொகிதீன், தி.க. தலைவர் கீ. வீரமணி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில் முதலமைச்சர் விஜய், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜயை, காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் இணைந்து சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மீனவர்களை விடுவிப்பதற்கும், அவர்களின் மீன்பிடி படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்து தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது. இராமநாதபுரம் மாெட்டம், மண்டபம் பகுதியை சேர்ந்த திருவாளர்கள் அசோக், அந்தோணி ராஜன், சந்தான ஆரோக்கியதாஸ், அருள் தே பிரிட்ஜோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய 6 மீனவர்கள் 10.05.2026 அன்று மீன்பிடிக்கச் சென்ற இவர்கள், எல்லை தாண்டியதாகக் கூறி இன்று (12.05.2026) கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இலங்கை கடற்பயடைால் ஏற்கனவே 54 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர். மேலும் 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி,…
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்ததைத் தொடர்ந்து, இன்றும் தனது அரசியல் பயணத்தில் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். அந்தவகையில், சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தவெக அரசு அமைவதற்கு ஐயூஎம்எல்-இன் 2 எம்.எல்.ஏ-க்கள் ஏற்கனவே நிபந்தனையற்ற ஆதரவு கடிதம் வழங்கியிருந்தனர். இந்த ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், தனது புதிய பணிக்காக வாழ்த்துப் பெறவும் இந்தச் சந்திப்பு அமைந்தது. பதவியேற்ற கையோடு, நேற்று முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துக் கட்டித்தழுவி வாழ்த்துப் பெற்றார். இது தமிழக அரசியலில் பல தசாப்தங்களுக்குப் பிறகு காணப்படும் ஒரு ஆரோக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இவரை தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளர் வைகோ,…
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வரும் வியாழக்கிழமை (14-05-26) அன்று காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த திமுக 59 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைத்துள்ளது. இத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் பல முன்னாள் அமைச்சர்களும் தோல்வியடைந்தனர். எனவே, தற்போது நடக்கவுள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும், எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய விதம் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள்…
தமிழக வெற்றி கழகம் அரசு தொடர்வதற்கு ஆதரவு அளிப்பதாக அமமுக எம்எல்ஏ காமராஜ் சட்டபேரவையில் தெரிவித்த நிலையில், அமமுக எம்.எல்.ஏ காமராஜை கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அறிவித்துள்ளார். நேற்றைய தினம் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் துவங்கிய நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பேற்று கொண்டனர். இதனையடுத்து இரண்டாவது நாளான இன்று சபாநாயகர் தேர்வு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்எல்ஏ தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அதாவது, தமிழக வெற்றி கழகம் அரசு தொடர்வதற்கு ஆதரவு அளிப்பதாக அமமுக எம்எல்ஏ காமராஜ் தெரிவித்துள்ளார். அரசியல் சூழலால் சில கசப்பான விஷயங்கள் நடந்தது. தமிழக இளைஞர்களும், நாங்களும் விஜய்யை நம்புகிறோம். அவர் நல்லாட்சியை தர வேண்டும் என பேசியுள்ளார். மேலும், ஐந்தாண்டுகள் தமிழக வெற்றி கழகம்…
தமிழக சட்டப்பேரவையில் நாளை நடைபெறவுள்ள தவெக அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் அறிவித்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின் தவெக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே சமயம் அதிமுக மீண்டும் பிளவுப்பட்டுள்ளது. ஒருபுறம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், மறுபுறம் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக 30க்கும் மேற்பட்டோரும் என 2 குழுக்களாக பிரிந்து இருக்கிறது. அதாவது, தேர்தலில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம், மேலும், சட்டமன்ற குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியை நியமிக்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.விஜய்பாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுதொடர்பான கடிதத்தையும் சபாநாயகரிடம் வழங்கினர். இந்தநிலையில், இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என்று அக்ரி…
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-27ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 80 சதவீதத்துக்கும் கூடுதலான வினாக்கள் தேர்வுக்கு பல நாள்கள் முன்பே ராஜஸ்தானில் வெளியாகி விட்டதாகவும், இது தொடர்பாக அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உத்தேச வினாக்கள் தொகுப்பு என்ற பெயரில் கைகளால் எழுதப்பட்ட 410 வினாக்கள் கொண்ட ஆவணம் நீட் தேர்வுக்கு 15 முதல் 30 நாள்களுக்கு முன்பாகவே மாணவர்களிடம் பரவியதாகவும், தேர்வுக்கு 42 மணி நேரம் முன்பாக வாட்ஸ்-அப் மூலம் ராஜஸ்தான் மற்றும் பிற வட மாநிலங்களில் மின்னல் வேகத்தில் பரவியதாகவும் கூறப்படுகிறது. அதில் உள்ள வினாக்களை மட்டும் படித்திருந்தால் நீட் தேர்வில் 720-க்கு குறைந்தது 600 மதிப்பெண்களை எடுக்க முடியும்…
அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் வெடித்துள்ளதையடுத்து, எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்துள்ளனர் என்று SP வேலுமணி, CV சண்முகம் தரப்புக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக சார்பாக வெளியிடப்பட்டுள்ள சமூகவலைதள பதவில், சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது! திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா? அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா? அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே? பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா? கழகம் யாரோடு…