Close Menu
    What's Hot

    ஊராட்சி பயிற்சி முகாம்: பெண் தலைவர்களுக்கு பதில் கணவர்கள் பங்கேற்பு..!! ஸ்ரீபெரும்புதூரில் அரங்கேறிய அவலம்..!!

    பெட்ரோல்-டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..!! இன்று முதல் முழு சுதந்திரம்..!!

    ஈரான்-அமெரிக்கா உறவில் புதிய திருப்பமா? ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!
    தமிழ்நாடு

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!

    Editor web3By Editor web3May 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    iuml Leaders vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக  தலைவர் விஜய், நேற்று முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்ததைத் தொடர்ந்து, இன்றும் தனது அரசியல் பயணத்தில் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். அந்தவகையில், சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

    தவெக அரசு அமைவதற்கு ஐயூஎம்எல்-இன் 2 எம்.எல்.ஏ-க்கள் ஏற்கனவே நிபந்தனையற்ற ஆதரவு கடிதம் வழங்கியிருந்தனர். இந்த ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், தனது புதிய பணிக்காக வாழ்த்துப் பெறவும் இந்தச் சந்திப்பு அமைந்தது.

    பதவியேற்ற கையோடு, நேற்று முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துக் கட்டித்தழுவி வாழ்த்துப் பெற்றார். இது தமிழக அரசியலில் பல தசாப்தங்களுக்குப் பிறகு காணப்படும் ஒரு ஆரோக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இவரை தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை அவர்களது இல்லத்திற்கே சென்று விஜய் சந்தித்தார்.

    இதேபோல், இன்றும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார் (காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களும் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர்). இதனை தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறவுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article நாளை மறுநாள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
    Next Article மீனவர்கள் சிறைபிடிப்பு!. ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்!.
    Editor web3
    • Website

    Related Posts

    ஊராட்சி பயிற்சி முகாம்: பெண் தலைவர்களுக்கு பதில் கணவர்கள் பங்கேற்பு..!! ஸ்ரீபெரும்புதூரில் அரங்கேறிய அவலம்..!!

    July 1, 2026

    பெட்ரோல்-டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..!! இன்று முதல் முழு சுதந்திரம்..!!

    July 1, 2026

    ஈரான்-அமெரிக்கா உறவில் புதிய திருப்பமா? ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு..!!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊராட்சி பயிற்சி முகாம்: பெண் தலைவர்களுக்கு பதில் கணவர்கள் பங்கேற்பு..!! ஸ்ரீபெரும்புதூரில் அரங்கேறிய அவலம்..!!

    பெட்ரோல்-டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..!! இன்று முதல் முழு சுதந்திரம்..!!

    ஈரான்-அமெரிக்கா உறவில் புதிய திருப்பமா? ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு..!!

    ஜூலை 20-ல் கூடுகிறது நாடாளுமன்றம்..?? மழைக்காலக் கூட்டத்தொடருக்கு வாய்ப்பு..!!

    ஆதரவு தரும் கட்சிகளுடன் இன்று முதல்வர் விஜய் ஆலோசனை..!! விலகி நின்ற இடதுசாரிகள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.