Author: Editor web3

: தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழலில், அதிமுக-வின் முக்கியத் தலைவர்களான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்னை எம்.ஆர்.சி நகரில் செய்தியாளர்களைச் சந்தித்து, எடப்பாடி பழனிசாமி மீதும் திமுகவின் ரகசியத் திட்டங்கள் குறித்தும் பல அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்கலாம் என திமுக ஒரு திட்டத்தை முன்மொழிந்தது. மற்ற அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் அதிமுக எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திருமாவளவனை முதலமைச்சராக ஏற்க எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை. “நான்தான் முதலமைச்சராகவோ அல்லது எதிர்க்கட்சித் தலைவராகவோ இருப்பேன்” என்பதில் அவர் பிடிவாதமாக இருந்தார். ஒருகட்டத்தில் திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க இபிஎஸ் முயன்றார். இதற்கு கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் பச்சைக்கொடி காட்டினர். “திமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர் எங்களை அழைத்து, நல்ல பதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆசை காட்டினர். ஆனால், திமுகவுடன் இணைவதை எனது குடும்பத்தினரே ஏற்க மாட்டார்கள்” என சி.வி.சண்முகம் தெரிவித்தார். எஸ்.பி.வேலுமணி பேசியதாவது,…

Read More

தவெக அரசுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முதலமைச்சர் விஜய் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறிச் செயல்பட்ட உறுப்பினர்கள், “அதிமுகவிற்குத் துரோகம் விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி, தமிழக வெற்றிக் கழகம் தனது கூட்டணியில் இணைத்துள்ளது. தூய்மையான அரசியல் என்று பேசிவிட்டு, ஆரம்ப காலத்திலேயே முதலமைச்சர் விஜய் தவறான பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டார்” எனச் சாடினார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகம் வெறும் 106 இடங்களை மட்டுமே வைத்துள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் இந்த அரசு தப்பித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், 66% வாக்காளர்கள் இந்த அரசுக்கு எதிராகவே உள்ளனர். சட்டப்படி பொதுச்செயலாளர் நியமிக்கும் சட்டமன்றக் குழுத் தலைவரும், கொறடாவும் பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானது. ஆனால், அந்த விதிகளை…

Read More

புதுச்சேரி மாநிலத்தின் 16-வது சட்டமன்ற முதலமைச்சராக என்,ஆர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பதவி ஏற்றார். லோக் நிவாசில் (ஆளுநர் மாளிகை) நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து பாஜகவின் நமச்சிவாயம் மற்றும் என்.ஆர்.காங்கிரஸின் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கலந்து கொண்டார். அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்ட நமச்சிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோருக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. புதிய அமைச்சர்கள் வரும் 18- ஆம் தேதி பதவி ஏற்கும் போது மற்ற அமைச்சர்களுடன் சேர்த்து இலாகா ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள  என். ரங்கசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான நிர்வாகியாகப் பெயர் பெற்ற…

Read More

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான புகார்களுக்கு முதலமைச்சர் விஜய் மிகுந்த நிதானத்துடனும் பதிலளித்துப் பேசினார். 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்த பின் உரையாற்றிய அவர், தமிழக அரசியலில் நிலவும் பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். “சோபா செட் புகார்களுக்குப் பதிலடி”: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த ‘குதிரை பேரம்’ மற்றும் ‘சோபா செட்’ விமர்சனங்களுக்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், “எனது அரசு நிர்வாகத்தில் ‘குதிரை வேகத்தை’க் கொண்டிருக்கும்; மக்கள் பணிகளை மின்னல் வேகத்தில் முடிப்பதிலேயே எங்கள் கவனம் இருக்கும். ஆனால், ஒருபோதும் ‘குதிரை பேரத்தில்’ ஈடுபடாது. தார்மீக அடிப்படையிலும், ஜனநாயக முறையிலுமே ஆதரவைத் திரட்டியுள்ளோம். இதில் மறைமுக பேரங்களுக்கு இடமில்லை. அடிப்படை ஆதாரமற்ற புகார்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.” பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும் போது முந்தைய அரசின் திட்டங்கள் கிடப்பில் போடப்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில்…

Read More

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும்…

Read More

தமிழகச் சட்டப்பேரவையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் முன்வைத்த காரசாரமான விமர்சனங்களைத் தொடர்ந்து, முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரதன் பண்டிட் நியமிக்கப்பட்ட உத்தரவைத் தமிழ்நாடு அரசு அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. முன்னதாக, முதலமைச்சர் விஜய்யின் ‘ராஜகுரு’ மற்றும் ஆஸ்தான ஜோதிடராகப் பார்க்கப்படும் ஒருவருக்கு அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டதற்குத் தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. “மக்களாட்சியில் ஜோதிடருக்கு என்ன வேலை?” என பிரேமலதா விஜயகாந்த் சபையில் கேள்வி எழுப்பிய நிலையில், தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் கூட்டணிக் கட்சிகளும் இந்த நியமனத்திற்குத் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தின. பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த அழுத்தங்கள் மற்றும் விமர்சனங்களுக்குப் பணிந்த முதலமைச்சர் விஜய், ரதன் பண்டிட்டின் நியமன உத்தரவை வாபஸ் பெற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆட்சியின் தொடக்கத்திலேயே எழுந்த இந்தச் சிக்கலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More

தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். “மாற்றம் (CHANGE) என்று கூறிவிட்டு, திரைமறைவில் பரிமாற்றம் (EXCHANGE) செய்து கொண்டிருக்கிறீர்கள்” எனச் சாடிய அவர், ஆட்சியைத் தக்கவைக்க கூவத்தூரை மிஞ்சும் அளவிற்கு அவலங்கள் நடப்பதாகவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பாணியில் ஆட்சி நடத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அதிமுக-வின் ஒரு தரப்பு ஆதரவு குறித்துப் பேசிய உதயநிதி, “அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், ஒரு தரப்பினர் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். அதன் பிறகு தான் பெரிய ட்விஸ்ட் நடக்கிறது. அந்தப் பிரிவில் இருப்பவர் வீட்டிற்குப் புதிய சோஃபா செல்கிறது, பின்னாடியே புதிய முதலமைச்சரும் போகிறார். இதெல்லாம் பார்க்கும்போது புஷ்பா பட பாணியில் ‘சோஃபா’ ஆட்சி நடைபெறுவது போலத் தெரிகிறது” என சாடினார். “65% மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி”:  தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின்,…

Read More

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று, தவெக அரசு தனது பெரும்பான்மையை வெற்றிகரமாக நிரூபித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த மே 10-ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், இன்று சட்டப்பேரவையில் தனது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை அவர் முன்மொழிந்தார். கூட்டணி கட்சிகளின் ஆதரவும் வாக்கெடுப்பு நிலவரமும்: இந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில், காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகள் மற்றும் ஐயுஎம்எல் உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்தனர். ஒரு முக்கிய திருப்பமாக, அதிமுகவின் எஸ்.பி.…

Read More

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச சபாநாயகர் அனுமதி அளித்ததிற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர் இதற்கிடையில் இன்று தவெக தலைவர் விஜயின் அரசு மீது தமிழ் நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக பொதுச்செயலாளராக நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அரசியல் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. அப்படி வருகின்ற சூழலில், ஒரு தரப்புக்கு முதலமைச்சர் ஆதரவு தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்…? இது குதிரை பேரத்திற்கு வழிவகுத்துவிடும்” என்று தெரிவித்தார். இபிஎஸ் பேசிக்கொண்டிருக்கும்போதே, சி.வி.சண்முகமும், சி. விஜயபாஸ்கரும் ஆலோசனை செய்ததும், வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி…

Read More

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, தவெக அரசுக்கு எதிராகப் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்தபோது அதை யாரும் வழிமொழியவில்லை என்றும், இது அவை மரபுகளை மீறிய செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், அரசின் தீர்மானம் என்பதால் வழிமொழியத் தேவையில்லை என விளக்கம் அளித்தார். முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த இபிஎஸ் பேசியதாவது, “தூய்மையான ஆட்சி என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் விஜய், அதிமுகவில் ஒரு தரப்பை மட்டும் ரகசியமாகச் சந்திப்பது ஏன்? இது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். அதிமுகவின் 47 எம்.எல்.ஏ-க்களும் இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்கள். அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் வாக்களித்த நிலையில், ஒரு பிரிவினருக்கு மட்டும் முதலமைச்சர் ஆதரவளிப்பது எந்த விதத்தில் நியாயம்? ஒரு சிலருக்கு அமைச்சர் பதவி மற்றும் வாரியத்…

Read More