Close Menu
    What's Hot

    ரூ.50 கோடியாம்..!! தவெக MLA-க்களை இழுக்க பேரம்.. ஆதாரம் இருக்கு என நிர்மல் குமார் அதிரடி..!!

    ஸ்டாலின் கூறிய ஆட்சி மாற்றத்தின் பின்னணி இதுதானா? – பெ.சண்முகம் விமர்சனம்

    வடக்கில் யூஸ் பண்ண ‘வாஷிங் மெஷின்’ தமிழ்நாட்டுக்கும் வந்துடுச்சாமே..!! கலாய்த்த கனிமொழி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு» வாக்கெடுப்பில் 2 பிரிவாக செயல்பட்ட அதிமுக!. வேலுமணியின் காரசார விவாதம்!
    தமிழ்நாடு

     வாக்கெடுப்பில் 2 பிரிவாக செயல்பட்ட அதிமுக!. வேலுமணியின் காரசார விவாதம்!

    Editor web3By Editor web3May 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps vs velumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச சபாநாயகர் அனுமதி அளித்ததிற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்

    இதற்கிடையில் இன்று தவெக தலைவர் விஜயின் அரசு மீது தமிழ் நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

    இதில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக பொதுச்செயலாளராக நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அரசியல் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. அப்படி வருகின்ற சூழலில், ஒரு தரப்புக்கு முதலமைச்சர் ஆதரவு தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்…? இது குதிரை பேரத்திற்கு வழிவகுத்துவிடும்” என்று தெரிவித்தார். இபிஎஸ் பேசிக்கொண்டிருக்கும்போதே, சி.வி.சண்முகமும், சி. விஜயபாஸ்கரும் ஆலோசனை செய்ததும், வீடியோவில் பதிவாகியுள்ளது.

    இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச சபாநாயகர் அனுமதி அளித்தார். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள், வேலுமணிக்கு எந்த அடிப்படையில் அனுமதி கொடுத்தீர்கள், ஒரு கட்சியில் ஒருவருக்கு மட்டுமே பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. இதனால் அவையில் யார் பேசவேண்டும் என்பது எனது உரிமை அதனடிப்படையிலேயே எஸ்.பி.வேலுமணிக்கு அனுமதி வழங்கியதாக சபாநாயகர் விளக்கமளித்தார்.

    இதற்கு மத்தியில் பேசிய எஸ்.பி. வேலுமணி, “மக்களின் உணர்வுகளை, எண்ணங்களை மதித்து முதல்வர் விஜய் கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவளிக்கிறது. நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் கிடையாது. பெரும்பான்மை மக்களின் தீர்ப்புக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்” கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபேரவையில் இபிஎஸ் ஆவேசம்!. தவெக அரசுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு!. குதிரை பேரப் புகார்!
    Next Article நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அமோக வெற்றி!. 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு!
    Editor web3
    • Website

    Related Posts

    ரூ.50 கோடியாம்..!! தவெக MLA-க்களை இழுக்க பேரம்.. ஆதாரம் இருக்கு என நிர்மல் குமார் அதிரடி..!!

    July 2, 2026

    ஸ்டாலின் கூறிய ஆட்சி மாற்றத்தின் பின்னணி இதுதானா? – பெ.சண்முகம் விமர்சனம்

    July 2, 2026

    வடக்கில் யூஸ் பண்ண ‘வாஷிங் மெஷின்’ தமிழ்நாட்டுக்கும் வந்துடுச்சாமே..!! கலாய்த்த கனிமொழி..!!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.50 கோடியாம்..!! தவெக MLA-க்களை இழுக்க பேரம்.. ஆதாரம் இருக்கு என நிர்மல் குமார் அதிரடி..!!

    ஸ்டாலின் கூறிய ஆட்சி மாற்றத்தின் பின்னணி இதுதானா? – பெ.சண்முகம் விமர்சனம்

    வடக்கில் யூஸ் பண்ண ‘வாஷிங் மெஷின்’ தமிழ்நாட்டுக்கும் வந்துடுச்சாமே..!! கலாய்த்த கனிமொழி..!!

    பொன்முடி தொடர்ந்த  வழக்கு தள்ளுபடி – உயர்நீதிமன்றம் அதிரடி

    வீட்டில் மூட்டை மூட்டையாக லெட்டர்கள் பதுக்கல்..!! போஸ்ட்மேன் அதிரடி பணியிடை நீக்கம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.