Close Menu
    What's Hot

    ரூ.50 கோடியாம்..!! தவெக MLA-க்களை இழுக்க பேரம்.. ஆதாரம் இருக்கு என நிர்மல் குமார் அதிரடி..!!

    ஸ்டாலின் கூறிய ஆட்சி மாற்றத்தின் பின்னணி இதுதானா? – பெ.சண்முகம் விமர்சனம்

    வடக்கில் யூஸ் பண்ண ‘வாஷிங் மெஷின்’ தமிழ்நாட்டுக்கும் வந்துடுச்சாமே..!! கலாய்த்த கனிமொழி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பேரவையில் இபிஎஸ் ஆவேசம்!. தவெக அரசுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு!. குதிரை பேரப் புகார்!
    தமிழ்நாடு

    பேரவையில் இபிஎஸ் ஆவேசம்!. தவெக அரசுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு!. குதிரை பேரப் புகார்!

    Editor web3By Editor web3May 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    assembly eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, தவெக அரசுக்கு எதிராகப் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்தபோது அதை யாரும் வழிமொழியவில்லை என்றும், இது அவை மரபுகளை மீறிய செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், அரசின் தீர்மானம் என்பதால் வழிமொழியத் தேவையில்லை என விளக்கம் அளித்தார்.

    முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த இபிஎஸ் பேசியதாவது, “தூய்மையான ஆட்சி என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் விஜய், அதிமுகவில் ஒரு தரப்பை மட்டும் ரகசியமாகச் சந்திப்பது ஏன்? இது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். அதிமுகவின் 47 எம்.எல்.ஏ-க்களும் இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்கள். அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் வாக்களித்த நிலையில், ஒரு பிரிவினருக்கு மட்டும் முதலமைச்சர் ஆதரவளிப்பது எந்த விதத்தில் நியாயம்? ஒரு சிலருக்கு அமைச்சர் பதவி மற்றும் வாரியத் தலைவர் பதவிகள் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறப்படுவதாகத் தகவல் வருகிறது. இது முற்றிலும் ஜனநாயக விரோதமானது.”

    தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 66% வாக்காளர்கள் தவெகவிற்கு வாக்களிக்கவில்லை என்பதை நினைவுபடுத்தினார். 7.5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல திட்டங்களைக் கொண்டு வந்து அதிமுக பொற்கால ஆட்சியை வழங்கியதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசியல் சூழலில் அதிமுகவின் 47 சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு எதிராகவே வாக்களிப்போம் என்று அதிரடியாக அறிவித்தார். கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு, ஆனால் அதைச் சாதகமாக்கி ஒரு பிரிவுக்கு மட்டும் முதல்வர் ஆதரவளிப்பது ஏற்புடையதல்ல எனத் தனது உரையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பதிவு செய்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாக்கெடுப்பு!. தவெக அரசுக்கு மஜக, கொமதேக மற்றும் ஜவாஹிருல்லா எதிர்ப்பு! 
    Next Article  வாக்கெடுப்பில் 2 பிரிவாக செயல்பட்ட அதிமுக!. வேலுமணியின் காரசார விவாதம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ரூ.50 கோடியாம்..!! தவெக MLA-க்களை இழுக்க பேரம்.. ஆதாரம் இருக்கு என நிர்மல் குமார் அதிரடி..!!

    July 2, 2026

    ஸ்டாலின் கூறிய ஆட்சி மாற்றத்தின் பின்னணி இதுதானா? – பெ.சண்முகம் விமர்சனம்

    July 2, 2026

    வடக்கில் யூஸ் பண்ண ‘வாஷிங் மெஷின்’ தமிழ்நாட்டுக்கும் வந்துடுச்சாமே..!! கலாய்த்த கனிமொழி..!!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.50 கோடியாம்..!! தவெக MLA-க்களை இழுக்க பேரம்.. ஆதாரம் இருக்கு என நிர்மல் குமார் அதிரடி..!!

    ஸ்டாலின் கூறிய ஆட்சி மாற்றத்தின் பின்னணி இதுதானா? – பெ.சண்முகம் விமர்சனம்

    வடக்கில் யூஸ் பண்ண ‘வாஷிங் மெஷின்’ தமிழ்நாட்டுக்கும் வந்துடுச்சாமே..!! கலாய்த்த கனிமொழி..!!

    பொன்முடி தொடர்ந்த  வழக்கு தள்ளுபடி – உயர்நீதிமன்றம் அதிரடி

    வீட்டில் மூட்டை மூட்டையாக லெட்டர்கள் பதுக்கல்..!! போஸ்ட்மேன் அதிரடி பணியிடை நீக்கம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.