Author: Editor web3

நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், சர்க்கரை விலையைக் கட்டுக்குள் வைக்கவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகம் (DGFT) வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்தத் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், செப்டம்பர் 30, 2026 வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சா சர்க்கரை (Raw sugar), வெள்ளை சர்க்கரை  மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை என மூன்று வகைகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://x.com/ANI/status/2054736874582028706? உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதைத் தடுக்கவும், தட்டுப்பாடின்றி சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கான சி.எக்ஸ்.எல் (CXL) மற்றும் டி.ஆர்.க்யூ (TRQ) ஒதுக்கீட்டின் கீழான ஏற்றுமதிக்குத் தடை இல்லை என்றும் மேலும், மற்ற நாடுகளின்…

Read More

நேற்று நடைபெற்ற கே.கே.ஆர் அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஐபிஎல் போட்டியில், விராட் கோலி டி20 கிரிக்கெட் வரலாற்றில் 14,000 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தனது 78-வது ரன்னை எடுத்தபோது அவர் இந்தச் சாதனையை எட்டினார். மேலும், உலக அளவில் டி20 போட்டிகளில் அதிவேகமாக (வெறும் 409 இன்னிங்ஸ்களில்) 14,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய உலக சாதனையையும் படைத்து, ‘ரன் மெஷின்’ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 423 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னர் (431 இன்னிங்ஸ்), ஜாஸ் பட்லர் (468 இன்னிங்ஸ்), மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் (505 இன்னிங்ஸ்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். நேற்றைய போட்டியில் கோலி வெறும் சாதனையோடு நிறுத்தாமல், 60 பந்துகளில்…

Read More

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனையை நடத்துகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10:30 மணியளவில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தேர்தலில் திமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியதுடன், கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலினே தோல்வியைத் தழுவியது கட்சிக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், தோல்விக்கான காரணங்கள் மற்றும் கள நிலவரம் குறித்து மாவட்ட வாரியாக அவர் கேட்டறிய உள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் தேர்தல் பணி மற்றும் சில மாவட்டங்களில் நிலவிய உட்கட்சிப் பூசல்கள் குறித்தும் தேர்தல் தோல்வி, எதிர்க்கட்சியாக செயல்படுவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாம். இதுமட்டுமல்லாமல் தேர்தலில் சரியாக வேலை பார்க்காத நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”…

Read More

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், கோடிக்கணக்கான பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘மகளிர் உரிமைத் தொகை’ குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முந்தைய திமுக ஆட்சியில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ கீழ் தகுதியுள்ள 1.31 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. தேர்தல் கால சிறப்பு அறிவிப்பாக பிப்ரவரி மாதமே மூன்று மாதத் தொகையுடன் கூடுதல் நிதியும் வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நாளை மே 15-ம் தேதி என்பதால், இந்த மாதத்திற்கான தொகை தடையின்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தமிழகத்தின் நிதி நிலைமை மற்றும் ரூ.10 லட்சம் கோடி கடன் சுமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். இருப்பினும், சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் போது, “முந்தைய…

Read More

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 15) முதல் மே 20-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் முதல் கட்டமாக நாளை அமீரகம் செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்துப் பேசுகிறார். குறிப்பாக, போர் நெருக்கடியால் சர்வதேச அளவில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனைகளை நடத்த உள்ளனர். அமீரகப் பயணத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அடுத்தடுத்துச் செல்கிறார். இப்பயணத்தின் முக்கிய அங்கமாக, மே 19-ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெறும் 3-வது இந்தியா-நார்டிக் (India-Nordic) உச்சி மாநாட்டில் அவர்…

Read More

குதிரை பேரம் செய்து எங்கள் கட்சியினரை மயக்கிவிட்டீர்கள். நான்காம் தர அரசியல்வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி? என முதல்வர் விஜய்க்கு கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இரட்டை இலை சின்னத்தால் வெற்றி பெற்றவர்களில் சிலர், தலைமை நிலைப்பாட்டிற்கு எதிராக, ஆளுங்கட்சி தரப்பில் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி, ஆளுங்கட்சி நடத்தும் பொம்மலாட்டத்திற்கு இரையாகி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளனர். அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இட்ட தங்களின் சொந்த கையெழுத்தை மறுக்கும் அளவிற்கு பதவி ஆசை முற்றிவிட்டதா? விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முதலமைச்சராக்கி, இவர்கள் எல்லாம் அமைச்சர்கள் ஆக திமுக ஒப்புக்கொண்டதாகவும், அதற்கு இவர்களும் ஒப்புக்கொண்டார்களாம். இல்லை எனக்குப் புரியவில்லை. இப்போ அது மட்டும் திமுக ஆதரவு கூட்டணி எல்லாம் இல்லையா?. இவர்கள் இப்படி என்றால், இவர்களை…

Read More

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின் தமிழகத்தில் தவெக அரசு அமைந்துள்ளது. இருப்பினும் அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது, சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு பிரிவினரும், இபிஎஸ் தரப்பில் ஒரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக சி.வி.சண்முகம் தலைமையிலான தரப்பினர் வாக்களத்தனர். இதனையடுத்து, அதிமுகவில் 26 மாவட்ட செயலாளர்களை பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று இரவு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம் தரப்பினர், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு அதிமுக தொடர் தோல்விகளையே சந்தித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஜெயலலிதா அவர்கள் அனைவரையும் அரவணைத்துச் சென்று கூட்டணி அமைப்பார். ஆனால், இன்று 1% வாக்கு வைத்திருப்பவர்கள் கூடத் தேவையில்லை என அகங்காரத்துடன் எடப்பாடி செயல்படுவதாகச் சாடினர். “200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்” என ஏசி அறையில்…

Read More

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்திருந்தார். அந்தவகையில்,  தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிப்படி, மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு, வரும் மே 15-ஆம் தேதி முதல் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை குறித்துக் கேள்வி எழுப்பினார். கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உரிமைத்தொகையைத் தடையின்றி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.  இத்திட்டம் குறித்து முதலமைச்சர் விஜய் உரிய உறுதியை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, வருகிற மே 15ஆம் தேதி தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்குகளில் 2,500 ரூபாய் வரவு வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிதிகாரப்பூர்வ அரசாணை மற்றும் வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தேர்வு முடிவுகள், வரும் மே மாதம் 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலம் முழுவதும் நடைபெற்ற விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றும் பணிகளும், சரிபார்க்கும் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான தொழில்நுட்பத் தயாரிப்புகள் தயார் நிலையில் உள்ளதால், பள்ளிக் கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமான தேதி மற்றும் நேரம் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnresults.nic.in/ என்ற தளத்தைப் பயன்படுத்தலாம். மேலும், மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்களுக்கும் குறுஞ்செய்தி (SMS) மூலம் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது.

Read More

வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க் உளவுப்பிரிவு ஐஜியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் நிர்வாக ரீதியாகப் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழக காவல்துறையின் மிக முக்கியமான பிரிவான உளவுத்துறை (Intelligence Bureau) ஐ.ஜி-யாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கரூர் துயர வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தலைமை தாங்கினார். அதாவது, இதுவரை வடக்கு மண்டல ஐ.ஜி-யாகப் பணியாற்றி வந்த அஸ்ரா கார்க், ஐபிஎஸ், தற்போது தமிழக உளவுத்துறை ஐ.ஜி-யாக மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக தேர்தல் ஆணையத்தால் உளவுத்துறை ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டிருந்த அவினாஷ் குமார், ஐபிஎஸ் தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதாவது, தேர்தல் விதிகள் நடைமுறையில் இருந்த போதும் அப்பதவியில் இருந்த செந்தில் நாதன் மாற்றப்பட்டு அவினாஷ் குமார் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More