Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாளை 15-ம் தேதி… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500?. பெண்கள் எதிர்பார்ப்பு!
    தமிழ்நாடு

    நாளை 15-ம் தேதி… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500?. பெண்கள் எதிர்பார்ப்பு!

    Editor web3By Editor web3May 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    urimai thogai 2500
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், கோடிக்கணக்கான பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘மகளிர் உரிமைத் தொகை’ குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    முந்தைய திமுக ஆட்சியில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ கீழ் தகுதியுள்ள 1.31 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. தேர்தல் கால சிறப்பு அறிவிப்பாக பிப்ரவரி மாதமே மூன்று மாதத் தொகையுடன் கூடுதல் நிதியும் வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நாளை மே 15-ம் தேதி என்பதால், இந்த மாதத்திற்கான தொகை தடையின்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தமிழகத்தின் நிதி நிலைமை மற்றும் ரூ.10 லட்சம் கோடி கடன் சுமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். இருப்பினும், சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் போது, “முந்தைய அரசுகளின் நல்ல மக்கள் நலத்திட்டங்கள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது” என உறுதி அளித்திருந்தார்.

    இதன் அடிப்படையில், தற்போதைய 1.31 கோடி பயனாளிகளுக்கும் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 உரிமைத் தொகை மே மாதமும் தடையின்றி நாளை (மே 15) அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தெரிகிறது.

    ரூ.2,500 எப்போது? புதிய தகவல்:

    தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் ‘மதிப்புமிக்க மகளிர் திட்டம்’ மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. நிதி நிர்வாகத்தை சீரமைத்த பிறகு, அடுத்த 6 மாதங்களுக்குள் இந்த ரூ.2,500 வழங்கும் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவரை தற்போதைய ரூ.1,000 வழங்கும் முறை தொடரும் என்றும், புதிய பயனாளிகளைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் விரைவில் வரவேற்கப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோர் நெருக்கடி!. பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம்!
    Next Article இன்று திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!
    Editor web3
    • Website

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.