Author: Editor web3
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், முக்கிய கட்சிகள் சில தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. தவெக அரசுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அறிவித்த மனிதநேய ஜனநாயகக் கட்சி (மஜக) சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதாகத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் (கொமதேக) சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தனும் தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்ப்பதாகச் சபையில் அறிவித்தார். அதேபோல், கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சித் (மமக) தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். சிறுபான்மையினக் கட்சிகள் மற்றும் பிராந்தியக் கட்சிகளின் இந்தத் தொடர் எதிர்ப்பு, சட்டப்பேரவை விவாதத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும்,…
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற தவெக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்தன. இதில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பாரதிய ஜனதா கட்சி நடுநிலை வகிப்பதாக பாஜக உறுப்பினர் போஜராஜன் தெரிவித்தார். அதேவேளையில், பாமக சார்பில் உரையாற்றிய சவுமியா அன்புமணி, மதுக்கடைகளை மூடும் முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கையைத் தாங்கள் வரவேற்பதாகக் குறிப்பிட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் பாமக பங்கேற்காது என செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார். தவெக-வின் தேர்தல் அறிக்கை பாமக-வின் பல வாக்குறுதிகளுடன் ஒத்துப்போவதைச் சுட்டிக்காட்டிய அவர், மதுப்பழக்கம் இல்லாத, போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவதே பாமக-வின் அடிப்படை நிலைப்பாடு எனத் தெரிவித்தார். குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் மது விற்பனை அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மதுக்கடைகளை மூடினால் சந்துக்கடைகள் உருவாவதைத் தடுக்க வேண்டும் என்றும், மது அரக்கனால் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் வேதனை தெரிவித்தார். நிர்வாக ரீதியான கோரிக்கைகளை முன்வைத்த…
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான அரசியல் நகர்வுகளுக்கு இடையே, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தனது பெரும்பான்மையை உறுதி செய்துள்ளது. சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள இடங்களில், ஆட்சி தொடர்வதற்குத் தேவையான 118 என்ற மேஜிக் எண்களைக் கடந்து, தவெக அரசுக்கு ஆதரவு கிடைத்துள்ளது. தவெக-வின் 106 சட்டமன்ற உறுப்பினர்களுடன், கூட்டணிக் கட்சிகள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவும் சேர்ந்ததால், முதலமைச்சர் விஜய்யின் தீர்மானம் வலுவான நிலையை எட்டியுள்ளது. ஆதரவு நிலவரப்படி, காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) 2 உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 உறுப்பினர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியின் 2 உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இவர்களுடன் அமமுக-வில் இருந்து அதிருப்தி உறுப்பினராகச் செயல்படும் காமராஜ் ஒரு வாக்கு அளிக்க, மொத்த ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நிலவி…
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்து பேசியநிலையில், தனது ஆதரவை தெரிவிக்கவில்லை. அவர் பேசியதாவது, விஜய்யின் ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும் என்றும், அவர் பதவியேற்றவுடன் மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்த உத்தரவு வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்ட பிரேமலதா, அதே வேளையில் அடுக்கடுக்கான கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தார். குறிப்பாக, இந்த ஆட்சியைத் தக்கவைக்க குதிரை பேரம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் புகார்கள் தமக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதாக அவர் சபையில் பதிவு செய்தார். தொடர்ந்து பேசிய அவர், ரதன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “முதலமைச்சர் விஜய்யின் ராஜகுருவாகப் பார்க்கப்படும் ஒருவரை, அரசு பதவிக்கு கொண்டு வந்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பிய அவர், நிர்வாக ரீதியான முடிவுகளில் வெளிப்படைத்தன்மை அவசியம்…
தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து காங்கிரஸ், விசிக , சிபிஐ , சிபிஎம் , ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்தன. இதனால் பெரும்பான்மை பெற்ற தவெக கட்சியின் தலைவர் விஜய் கடந்த 10 ஆம் தேதி தமிழ் நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து இன்று சட்டமன்றத்தில் தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அதன் படி இன்று தொடங்கியுள்ள தமிழ் நாடு சட்டமன்றக் கூட்டத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்துள்ளார். இதனை தொடர்ந்து தீர்மானம் மீது சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாக்கெடுப்பு நடத்துகிறார். ஏன் ஆதரவு என்பதற்கான காரணத்தை உறுப்பினர்கள் தெரிவிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், காங்கிரஸ்(5), மார்க்சிஸ் கம்யூனிஸ் (2) விசிக(2), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (2), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(2) உறுப்பினர்கள் தவெக அரசுக்கு…
தமிழகத்தில் தங்கம் விலை இதுவரை கண்டிராத வகையில் ஒரே நாளில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிரடியாக உயர்த்தியுள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். இதன் விளைவாக, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400-க்கும், சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி மாற்றத்தால் நகை வாங்குவோர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,330-க்கும், சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,640-க்கும் விற்பனையானது. தங்கத்தை போல் வெள்ளியும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையானது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கவும், நடப்பு கணக்கு…
சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் தவெக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்து வருகிறது.இதில், தற்போதுள்ள 232 எம்.எல்.ஏக்களில் 116 பேரின் ஆதரவை பெற்று விஜய்யின் ஆட்சி தப்புமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவை தொடங்கியதும் நம்பிக்கை வாக்கெடுப்பில், தமிழக வெற்றிக் கழக அரசு தொடர்வதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். இதனை தொடர்ந்து இந்த வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ் குமார் அறிவித்துள்ளார். அவர் பேசியதாவது, நிலையான மதசார்பற்ற ஆட்சி வேண்டும் எனக் குறிப்பிட்டார். மக்களின் தீர்ப்பை மதித்து இந்த முடிவை காங்கிரஸ் தலைமை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மற்ற காங்கிரஸ் உறுப்பினர்களும் தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் எனவும் கூறினார். இதனை தொடர்ந்து நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் மாநிலம் முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று நடைபெற்ற ஒரு சந்திப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சி.வி. சண்முகத்தின் அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றபோது, அங்கு அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கட்சிகளுக்கு இடையிலான அரசியல் போட்டிகள் ஒருபுறம் இருந்தாலும், முதலமைச்சர் விஜய்க்கு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் திரண்டு வந்து பூங்கொத்து வழங்கி மிக உற்சாகமாக வரவேற்றனர். இந்தச் சந்திப்பே ஒரு அரசியல் திருப்பமாகக் கருதப்பட்ட நிலையில், அங்கு நடந்த எதிர்பாராத சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ், முதலமைச்சர் விஜய்யை வரவேற்க முன்வந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் முதலமைச்சரின் கைகளைப் பிடித்து, ரஜினியின் பாட்ஷா படம்…
தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். முதலமைச்சர் விஜய் அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் சாலைகளில் பேனர்கள் வைக்கக் கூடாது. வாகனப் பேரணிகளின் போது எக்காரணம் கொண்டும் விதிகளை மீறக் கூடாது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது தொண்டர்களின் கடமை. ஆர்ப்பாட்டங்களை விடுத்து, மக்கள் பாராட்டும் வகையிலான நலத்திட்டப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். நமது இயக்கம் மக்களுக்காகத் தொடங்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு சிறு தொந்தரவு கூட நம்மால் ஏற்படக்கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் மிக உறுதியாக இருக்கிறார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் உடனடியாகக் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவார்கள்.” தமிழகம்…
தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்த பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை முடிவடைகிறது. இதனால் நாளை காலை கூடும் சட்டமன்றக் கூட்டத்தொடர் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் அவர்கள் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் தனது கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சி எம்.எல்.ஏ-க்களை ஒருங்கிணைக்கவும், கட்சித் தலைமையின் உத்தரவை முறைப்படி அமல்படுத்தவும் விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ சபரிநாதன் அவர்கள் அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கொறடா நியமனமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட சபரிநாதன், 76092 வாக்குகளை பெற்று வென்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர்…