Author: Editor web3
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் விஜய்க்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முதலமைச்சருடன் சேர்த்து கே.ஏ. செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 9 அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இந்தத் தேர்தலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலுமே அமோக வெற்றி பெற்றார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறும் ஒரு வேட்பாளர் 14 நாட்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய், தனது கோட்டையாகக் கருதப்படும்…
முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவில் தனிப் பெரும் கட்சியாக வந்த தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் இழுத்தடித்து வந்தார். குறுக்கு வழியில் ஆட்சியமைக்க பல்வேறு வழிகளில் நடந்த முயற்சிகளை முறியடிக்க, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் வெற்றி பெற்ற, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் கலந்தாலோசித்து வழங்கிய ஆதரவின் அடிப்படையில் இன்று (10.05.2026) தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அரசின் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு, வந்தேமாதரம், நாட்டுப் பண் முதல் இரு நிலைகளுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாடு அரசு…
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு சுவாரஸ்யமான ‘ஆட்சி மாற்ற சென்டிமென்ட்’ விவாதம் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், ஐ.பி.எல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது என்பதுதான் அதற்கு காரணம் கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், 2011-ம் ஆண்டு திமுக ஆட்சியை அகற்றிவிட்டு அதிமுக அரியணை ஏறியபோது, தோனி தலைமையிலான சிஎஸ்கே தனது 2-வது கோப்பையை உச்சி முகர்ந்தது. அதேபோல், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ல் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, துபாயில் நடைபெற்ற தொடரில் சிஎஸ்கே தனது 5-வது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்த ‘ஆட்சி மாற்ற மேஜிக்’ இப்போது 2026-லும் நடக்குமா என்பதே ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு. தற்போதைய ஐ.பி.எல் 2026 நிலவரம்: தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் 2026 தொடரில்,…
தமிழக அரசியல் வரலாற்றில் 51 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய், மிக குறைந்த வயதில் மாநிலத்தின் உயரிய பொறுப்பை ஏற்றவர்கள் வரிசையில் 5-வது இடத்தைப் பிடித்துப் புதிய சாதனை படைத்துள்ளார். சினிமாத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்து குறுகிய காலத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அவர், தற்போதைய தலைமுறையின் செல்வாக்கு மிக்க இளம் தலைவராகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். தமிழகத்தில் மிக குறைந்த வயதில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர்கள் பட்டியலில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதலிடத்தில் உள்ளார். அவர் 1991-ம் ஆண்டு தனது 43-வது வயதில் முதன்முதலாகப் பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து கருணாநிதி (44 வயது) இரண்டாம் இடத்திலும், ஓ. பன்னீர்செல்வம் (50 வயது) மூன்றாம் இடத்திலும் உள்ளனர். பெருந்தலைவர் காமராஜர் தனது 51-வது வயதில் முதலமைச்சரான நிலையில், தற்போது அதே 51 வயதில் முதலமைச்சராகி அவரோடு 4 மற்றும் 5-வது இடங்களைப் பகிர்ந்துகொள்கிறார் விஜய். இந்த வரிசையில் அதிக வயதில்…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சி.ஜோசப் விஜய், பதவிப் பிரமாணம் முடிந்த கையோடு மக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் மூன்று மிக முக்கியமான அரசாணைக் கோப்புகளில் கையெழுத்திட்டார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அதிரடி அறிவிப்பு சாமானிய மக்களுக்குப் பெரும் பொருளாதார விடுதலையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும் என அவர் உத்தரவிட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது எவ்விதத் தாமதமும் இன்றி விரைந்து நடவடிக்கை எடுப்பதே இந்தப் படையின் முதன்மை நோக்கமாகும். அதேபோல், தமிழகத்தை அச்சுறுத்தும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க, மாநிலம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைக்கப்பட…
தமிழக முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று முதல் கோப்பில் கையெழுத்திடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் முகப்புப் படமாக மாற்றப்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தின் புதிய தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்த மாற்றம் உடனடியாகச் செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் தனது பணிகளைத் தொடங்கிய முதலமைச்சரின் கம்பீரமான தோற்றம் மற்றும் அவர் மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திடும் காட்சிகள் தற்போது அரசு இணையதளங்களிலும் பதிவேற்றப்பட்டு வருகின்றன. புதிய அரசு பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே டிஜிட்டல் தளங்களிலும் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது,
தமிழக முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவரது நிர்வாகக் குழுவை வலுப்படுத்தும் வகையில் முக்கிய அதிகாரிகளை நியமித்துத் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலமைச்சரின் பணிகளை ஒருங்கிணைக்கவும், நிர்வாக ரீதியிலான ஆலோசனைகளை வழங்கவும் தனிச் செயலாளர்கள் முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, முதல்வரின் முதன்மை செயலாளராக இருந்த உதய் சந்திரன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, முதலமைச்சரின் தனி செயலாளர்களாக செந்தில் குமார், லட்சுமி பிரியா ஆகியோரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் நிலை தனிச்செயலாளராக செந்தில் குமாரும், 2ம் நிலை தனிச்செயலாளராக லட்சுமி பிரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் குமார் சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பு வகித்தவர். லட்சும் பிரியாவும் ஆதி திராவிட நலத்துறை செயலாளராக பதவி வகித்தவர் ஆவார். முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில் தனிச்செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சராகப் பதவியேற்ற முதல் நாளிலேயே, தற்காலிக சபாநாயகர் நியமனம் மற்றும் தனிச் செயலாளர்கள் நியமனம் எனத் அடுத்தடுத்த…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். ‘ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு’ – என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க…
தலைமைச் செயலகத்தில் தனது பணிகளைத் தொடங்கிய முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், நிர்வாக ரீதியிலான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்கினார்.. அதன் ஒரு பகுதியாக, தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்களை நியமிப்பதற்கான கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டார். புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரை வழிநடத்தவும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவும் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வானவர்களுக்கு நாளை காலை 9:30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா, புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். மேலும், தமிழக சட்டமன்றத்தின் நிரந்தர சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் முதலமைச்சர் விஜய்யை நேரில்…
சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, இடதுசாரிக் கட்சிகள், விசிக, ஐ.யு.எம்.எல், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்து, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையுடன் இன்று பதவியேற்றிருக்கிறார் தவெக தலைவர் விஜய். இவரை தொடர்ந்து அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர். தமிழகத்தில் புதிய ஆட்சி தொடங்கியிருக்கும் நிலையில் அரசியல் பிரபலங்கள் பலரும் நல்லாட்சி அமைந்திட தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜய்க்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர், “தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “மதிப்பிற்குரிய விஜய் அவர்களுக்கு, ராகுல் காந்தி முன்னிலையில், தமிழ்நாடு…