Close Menu
    What's Hot

    ஃபிஃபா அப்டேட் : அதிரடி காட்டிய போர்ச்சுக்கல்..! தொடரில் இருந்து வெளியேறிய குரோஷியா..!

    தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம்..! 5 பேருக்கு நீதிமன்றக் காவல்..!

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
    தமிழ்நாடு

    தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

    Editor web3By Editor web3May 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay pm modi wishes
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.

    பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, இடதுசாரிக் கட்சிகள், விசிக, ஐ.யு.எம்.எல், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்து, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையுடன் இன்று பதவியேற்றிருக்கிறார் தவெக தலைவர் விஜய். இவரை தொடர்ந்து அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர்.

    தமிழகத்தில் புதிய ஆட்சி தொடங்கியிருக்கும் நிலையில் அரசியல் பிரபலங்கள் பலரும் நல்லாட்சி அமைந்திட தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜய்க்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

    அவர், “தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

    அவரைத் தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “மதிப்பிற்குரிய விஜய் அவர்களுக்கு, ராகுல் காந்தி முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக, ஏழை எளியோருக்கான நலத்திட்டங்களையும், அனைவருக்கும் சமமான நீதியையும் வழங்கி, உங்கள் மாநிலத்தை வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்!. காவல் துறையினரின் மரியாதையை ஏற்றார்!
    Next Article தற்காலிக சபாநாயகராக கருப்பையா நியமனம்!. நாளை புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    ஃபிஃபா அப்டேட் : அதிரடி காட்டிய போர்ச்சுக்கல்..! தொடரில் இருந்து வெளியேறிய குரோஷியா..!

    July 3, 2026

    தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம்..! 5 பேருக்கு நீதிமன்றக் காவல்..!

    July 3, 2026

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஃபிஃபா அப்டேட் : அதிரடி காட்டிய போர்ச்சுக்கல்..! தொடரில் இருந்து வெளியேறிய குரோஷியா..!

    தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம்..! 5 பேருக்கு நீதிமன்றக் காவல்..!

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.