Close Menu
    What's Hot

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»வாக்கெடுப்பில் அதிமுக எதிராக வாக்களிக்கும்!. இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள்!
    தமிழ்நாடு

    வாக்கெடுப்பில் அதிமுக எதிராக வாக்களிக்கும்!. இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள்!

    Editor web3By Editor web3May 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    o.s.maniyan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டப்பேரவையில் நாளை நடைபெறவுள்ள தவெக அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் அறிவித்துள்ளனர்.

    சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின் தவெக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே சமயம் அதிமுக மீண்டும் பிளவுப்பட்டுள்ளது. ஒருபுறம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், மறுபுறம் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக 30க்கும் மேற்பட்டோரும் என 2 குழுக்களாக பிரிந்து இருக்கிறது. அதாவது, தேர்தலில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம், மேலும், சட்டமன்ற குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியை நியமிக்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.விஜய்பாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுதொடர்பான கடிதத்தையும் சபாநாயகரிடம் வழங்கினர்.

    இந்தநிலையில், இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதாவது, நாளை நடைபெறும் வாக்கெடுப்பின் போது, அரசின் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் சட்டமன்றக் குழுத் தலைவர் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், இதனை வலியுறுத்தி 47 எம்.எல்.ஏ-க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியுள்ளதாகவும் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். சி.வி. சண்முகம் கட்சியைத் தன் பக்கம் ஈர்க்கவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் இல்லாத செய்திகளைப் பரப்பி வருவதாக இபிஎஸ் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    அதிகாரப்பூர்வ கொறடா யார் என்பதில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படாததால், உறுப்பினர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்க முடியும் என ஒரு தரப்பு கூறுகிறது. உறுப்பினர்கள் எந்தத் தரப்புக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களித்தாலும், தற்போதைய நிலையில் கட்சி தாவல் தடைச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என பேரவை விதிகள் சுட்டிக்காட்டுகின்றன.

    இருப்பினும், சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி தரப்பினர், இரு அணிகளாகப் பிரிவதற்கு முன்பு இபிஎஸ்-க்கு ஆதரவாக எடுத்த முடிவுகள் செல்லாது என விளக்கம் அளித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாணவர்கள் வாழ்கையோடு விளையாடும் நீட்டுக்கு முடிவு – முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
    Next Article “முதல்வராக்க முயற்சியா”- நடந்ததை விளக்கும் திருமாவளவன்
    Editor web3
    • Website

    Related Posts

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    July 1, 2026

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    July 1, 2026

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.