Close Menu
    What's Hot

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க முன்வந்தார் இபிஎஸ்!. சிவி சண்முகம் பரபரப்பு பேட்டி!.
    தமிழ்நாடு

    திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க முன்வந்தார் இபிஎஸ்!. சிவி சண்முகம் பரபரப்பு பேட்டி!.

    Editor web3By Editor web3May 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    c.v.shanmugam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தல் முடிவுகளுக்கு பின் அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இபிஎஸ் – எஸ்.பி.வேலுமணி என மீண்டும் இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் சி.வி.சண்முகம், இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக ஆட்சி அமைக்க த.வெ.க-வுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்.  தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில முன்மொழிவுகளை வைத்தார்.

    இந்த இயக்கம் தி.மு.க.வை எதிர்த்து தான் தொடங்கப்பட்டது. இந்த 53 ஆண்டுகாலம் தி.மு.க.வை எதிர்த்து தான் அரசியல் செய்கிறோம். 3, 4 தலைமுறைகளாக தி.மு.க.வை எதிர்த்து தான் அரசியல் செய்து வருகிறோம். இந்த சூழலில், எந்த தி.மு.க-வை எதிர்த்தோமோ அந்த தி.மு.க வின் ஆதரவோடு அ.தி.மு.க சார்பில் என்னை முதல்வராக தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டார்கள் என ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அதற்கு நாம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்.  அதனை பெரும்பாலான சட்டமன்ற உறுதிப்பினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் அனைவரும் பேரதிர்ச்சிக்கு உள்ளானோம். தி.மு.க-வோடு இணைந்தால் அ.தி.மு.க இல்லாமல் போய்விடும், இது தவறு என்றோம். அதனை ஏற்க மறுத்தார் எடப்பாடி பழனிசாமி.

    அதனால் பெரும்பான்மையான அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதன்படி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்துள்ளது. அதனால், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இப்போது இல்லை. மக்கள் தீர்ப்பை ஏற்று இன்று வெற்றிபெற்றுள்ள முதலமைச்சராக உள்ள விஜய்யின் த.வெ.க ஆட்சியை ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

    அ.தி.முக சட்டமன்ற குழுவின் தலைவராக எஸ்.பி வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொறடாவாக விஜயபாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக ஹரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயலராக காமராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முறைப்படி தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். நடந்து முடிந்த தேர்தலில் மட்டுமல்ல, தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அ.தி.மு.க-வுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனை பொதுச் செயலாளரிடம் கூறியுள்ளோம். விரைவில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் கோரிக்கை வைக்கிறோம். கட்சியை மேம்படுத்த எடப்பாடி பழனிசாமி விரைவில் அ.தி.மு.க பொதுக்குழுவை கூட்டுவார் என நம்புகிறோம்” என்று பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு..! மூடப்படுகிறது 717 டாஸ்மாக் கடைகள்..!
    Next Article புதிய சபாநாயகராக JCD பிரபாகர் தேர்வு!. துணைத் தலைவராக ரவிசங்கர் தேர்வு!
    Editor web3
    • Website

    Related Posts

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    July 1, 2026

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    July 1, 2026

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.