Author: Editor web3
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழகத்தின் அடுத்த அரசு எது என்பது குறித்துப் பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த திமுக எம்பி கனிமொழி, தேர்தல் முடிவுகள் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. “தமிழகத்தில் ஆட்சி அமைவது என்பது மக்களின் தீர்ப்பு. ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்புதான் மிக முக்கியமான விஷயம்; அதற்கு மதிப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். திராவிடக் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பது போன்ற சூழல் குறித்து அவர் பேசுகையில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதே ஜனநாயகத்தின் மாண்பு என்பதை வலியுறுத்தினார். குறிப்பாக, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் கூட்டணி அமைத்து “நிலையான அரசை” உருவாக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகும் தகவல்கள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கனிமொழி, “வெறும் யூகங்களின் அடிப்படையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவைத் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததால், காங்கிரஸை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெற தீவிர பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தவெக-விற்கு ஆதரவு அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசிக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) அவசர மாநிலச் செயற்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. மாநிலச் செயலாளர் கே. சண்முகம் தலைமையில் நடைபெற்று வரும் இந்த முக்கியமான கூட்டத்தில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் 15 செயற்குழு உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 18 பேர் பங்கேற்றுள்ளனர். தேர்தலில் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம், தவெக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக…
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெரும் திருப்பங்களை சந்தித்து வருகிறது. தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்ற விஜய்யின் தவெக, பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க முடியாத நிலையில் திணறி வருகிறது. மறுபுறம் விஜய்க்கு எதிராக, திராவிட கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியை பிடிக்க திட்டம் தீட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. அதற்காக அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் ஒருப்பகுதியாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் இன்று (மே 8) முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த தலைவர் தம்பிதுரை எம்.பி, “தமிழகம் முழுவதும் மக்களின் உணர்வுகளும் ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமிக்கே உள்ளது. சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் அளித்த அமோக ஆதரவே இதற்குச் சான்று என்றும் கூறினார். தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரும், எங்கள்…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக பரம எதிரிகளாகத் திகழ்ந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்கொள்ள ஒரே இரவில் ரகசியமாக ஒன்றிணைந்துள்ளதாக மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். இந்தத் திடீர் நெருக்கம் தமிழகத்தின் நலனுக்காகவோ அல்லது மதச்சார்பின்மை கொள்கைக்காகவோ ஏற்படவில்லை என்றும், விஜய் என்ற ஒற்றை மனிதனின் அரசியல் எழுச்சியைத் தடுப்பதற்காக மட்டுமே இந்த ‘பயந்த கட்சிகளின் கூட்டணி’ உருவாகியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். “நிலையான அரசு” என்ற முழக்கம், தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள இந்தக் கட்சிகள் பயன்படுத்தும் வெறும் அரசியல் மொழி மட்டுமே என அவர் விமர்சித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியது ஒரு சரியான முடிவு என மாணிக்கம் தாகூர் தனது பதிவில் நியாயப்படுத்தியுள்ளார். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின் ‘B-டீம்’ என்று விமர்சிக்கப்படும் தரப்புகளுடன் கைகோர்த்துக்கொண்டு, தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியாது என…
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, இன்று (மே 8) சற்று நிம்மதியளிக்கும் வகையில் மாற்றமின்றி காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படியே தொடர்கிறது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,150-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் டாலரின் மதிப்பு மாற்றங்கள் காரணமாக, இந்திய சந்தையில் தங்கத்தின் தேவை இன்று சமநிலையில் இருப்பதால் விலையில் பெரிய மாற்றம் ஏதும் நிகழவில்லை என சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர். வெள்ளி சந்தையைப் பொறுத்தவரை, இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை நிலையாக இருந்தாலும், வெள்ளியின் தேவை அதிகரிப்பால் அதன் மதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.280-க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,80,000 என்ற புதிய உச்சத்தை…
2026 டி20 உலகக்கோப்பையை சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி வென்று சாதனை படைத்திருந்தாலும், அவரது தற்போதைய பேட்டிங் ஃபார்ம் பிசிசிஐ-க்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 35 வயதாகும் சூர்யகுமார், உலகக்கோப்பை தொடரிலும் சில போட்டிகளில் ரன் குவிக்க சிரமப்பட்டதும், கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதிப்படுவதும் தேர்வாளர்களை மாற்றுச் சிந்தனைக்கு தள்ளியுள்ளது. இதனால், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மற்றும் அடுத்த உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு, ஒரு நீண்ட கால கேப்டனை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தற்போது முன்னிலையில் உள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற அவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்து தனது தலைமைப் பண்பை நிரூபித்துள்ளார். நடப்பு 2026 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக, அணியை புள்ளிப்பட்டியலில் முன்னிலைப்படுத்துவதோடு…
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in,www.dge.tn.gov.inஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும் sms மூலமாகவும் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதன்முறையாக வாட்ஸ்அப் மூலம் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு “Hi” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பிபினால் தேர்வு முடிவுகள் வாட்ஸ்அப்பிற்கே வந்துவிடும். தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் எழுதிய பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 97% பேரும், மாணவர்கள் 93.19% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்கள் 3.47 லட்சம் பேரும், மாணவிகள் 4.06 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளே அதிகம் தேர்ச்சி: 12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாணவர்களைவிட மாணவிகளே 3.81 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் முதலிடம்: மாவட்ட அளவில் 98.87% தேர்ச்சி…
இந்த ஆண்டு நடைபெற்று வரும் 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோஸ்டார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, நடப்புத் தொடரின் ஒட்டுமொத்தப் பார்வையாளர்களின் எண்ணிக்கை 1.04 பில்லியனை (104 கோடி) கடந்து வியக்கவைத்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 7.4 சதவீதம் கூடுதலாகும். குறிப்பாக, தொடக்க வாரத்திலேயே 51.5 கோடி பேர் நேரலையில் கண்டு களித்தது ஒரு தனி சாதனையாகப் பார்க்கப்படுகிறது. தொடரின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் 26 போட்டிகள் மீதமுள்ளன. தற்போது நிலவி வரும் கடும் போட்டி மற்றும் ப்ளே-ஆப் சுற்றுகள் தொடங்க உள்ளதால், இந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் பல கோடிகளைத் தாண்டி புதிய உலக சாதனையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் தளங்களில் இலவசமாகப் பார்க்கும் வசதி மற்றும் கனெக்டட் டிவி…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு அமைவதில் ஒருபுறம் ஆளுநர் மாளிகையில் அரசியல் பரபரப்பு நீடித்து வரும் வேளையில், மறுபுறம் தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 15-ஆம் தேதி முதல் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெறப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இனி அரசு நிர்வாகம் அதன் வழக்கமான வேகத்தில் இயங்கத் தொடங்கும் எனத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், தாசில்தார்கள் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரை அனைத்து அரசு அதிகாரிகளும் வழக்கமான மக்கள் நலப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, முழுமையாகத் தேர்தல் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். வாக்காளர் விழிப்புணர்வு, வாக்குப்பதிவு எந்திரங்களைப் பாதுகாத்தல் மற்றும் தேர்தல்…
தமிழக அரசியலில் நிலவும் இழுபறிக்கு இடையே, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகம் இன்று அவசரமாக டெல்லிக்கு மேற்கொண்ட பயணம் பெரும் அரசியல் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுகவின் இந்தத் திடீர் டெல்லி நகர்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. பாஜகவின் தேசியத் தலைமைக்கும் அதிமுகவுக்கும் இடையே ஒரு புதிய அரசியல் சமன்பாடு உருவாக வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், கட்சித் தலைமை வழங்கிய மிக முக்கியமான ரகசியப் பணிகளை முன்னெடுப்பதற்காகவே அவர் டெல்லி விரைந்துள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தேவையான பலத்தை நிரூபிக்கத் திணறி வரும் வேளையில், சி.வி. சண்முகம் டெல்லியில் பாஜக மேலிடத் தலைவர்களைச் சந்தித்துத் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது. ஒருபுறம் ஆளுநர் மாளிகையில் சட்ட ரீதியான ஆலோசனைகள் நடைபெற்று…