தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in,www.dge.tn.gov.inஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும் sms மூலமாகவும் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதன்முறையாக வாட்ஸ்அப் மூலம் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு “Hi” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பிபினால் தேர்வு முடிவுகள் வாட்ஸ்அப்பிற்கே வந்துவிடும்.
தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் எழுதிய பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 97% பேரும், மாணவர்கள் 93.19% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்கள் 3.47 லட்சம் பேரும், மாணவிகள் 4.06 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகளே அதிகம் தேர்ச்சி:
12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாணவர்களைவிட மாணவிகளே 3.81 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் முதலிடம்:
மாவட்ட அளவில் 98.87% தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடம் சிவகங்கை 98.05%, 3ம் இடத்தில் கன்னியாகுமரி-97.63 சதவீதம், 4-ம் இடத்தில் திருநெல்வேலி – 97.84%, 5-ம் இடத்தில் திருச்சி – 97.50 % பெற்றுள்ளன.
கடைசி இடம் பிடித்த மாவட்டம்
+2 தேர்வு முடிவுகளில் 85.92% தேர்ச்சியுடன் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ராணிப்பேட்டை 88.20%, கிருஷ்ணகிரி 91.31%, அரியலூர் 91.70%, வேலூர் 90.73% என இந்த 5 மாவட்டங்களில் கடைசி 5 இடங்களில் உள்ளன. கடந்தாண்டு 98.82% தேர்ச்சியுடன் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருந்த நிலையில், இந்தாண்டு கடைசி பட்டியலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்கள் 92.16% தேர்ச்சி:
12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 92.16% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
489 அரசு பள்ளிகளில் 100-க்கு 100% தேர்ச்சி
489 அரசு பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், 95%-க்கு மேலான தேர்ச்சி விழுக்காட்டை 1,572 பள்ளிகள் பெற்றுள்ளன. அதேபோல், அரசு உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 96.14% ஆக உள்ளது.
முக்கிய பாடங்களில் 100% மதிப்பெண் பெற்ற மாணவர்கள்:
தமிழில் 83 பேர்
ஆங்கிலம் 21 பேர்
இயற்பியல் 105 பேர்
வேதியல் 632
இயற்பியல் 784
கணிதம் 732
தாவரவியல் 31
விலங்கியல் 18
கணித அறிவியல் 6945 பேர் 100% தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 13ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக துணைத் தேர்வு நடத்தப்படவுள்ளது.
தமிழ் மொழிப்பாடம் – 83 பேர் முழு மதிப்பெண்:
12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ் மொழிப்பாடத்தில் 83 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இதேபோல் ஆங்கிலம் மொழிப்பாடத்தில் 21 பேரும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 2,099 பேரும், கணிதப்பாடத்தில் 732 பேரும், இயற்பியல் மொழிப்பாடத்தில் 105 பேரும், வேதியியல் மொழிப்பாடத்தில் 632 பேரும், உயிரியல் மொழிப்பாடத்தில் 784 பேரும், விலங்கியல் பாடத்தில் 18 பேரும், தாவரவியல் மொழிப்பாடத்தில் 31 பேரும், வணிகவியல் பாடத்தில் 683 பேரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
எந்தெந்த பாடத்தில் எவ்வளவு மாணவர்கள் தேர்ச்சி?
கணினி அறிவியல் பாடத்தில் ஒட்டுமொத்தமாக 99.84% மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து, *உயிரியல் – 99.49% *கணிதம் – 99.12% *இயற்பியல் – 98.87% *வேதியியல் – 98.82% *விலங்கியல் – 98.69% *தாவரவியல் – 98.62 *கணக்கு பதிவியல் – 98.04% *வரலாறு – 97.90%, வணிகவியல் – 97.55% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
