Close Menu
    What's Hot

    பூட்டை உடைத்து உள்ளே புகுந்து…. கரூர் அதிமுக லகலகலக…

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு – காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற கட்சித் தலைவராக தளி ராமச்சந்திரன் தேர்வு!.
    தமிழ்நாடு

    இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற கட்சித் தலைவராக தளி ராமச்சந்திரன் தேர்வு!.

    Editor web3By Editor web3May 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thali ramachandran CPI
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில், தளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் ஐந்து இடங்களில் களம் கண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தளி தொகுதியில் ராமச்சந்திரன் மற்றும் திருத்துறைப்பூண்டி தொகுதியில் மாரிமுத்து என இரண்டு இடங்களில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தற்போது தமிழகத்தில் புதிய அரசு அமைவதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம்  ஆட்சி அமைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதற்கான ஆதரவு கடிதத்தை தவெகவின் நிர்மல் குமாரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராமச்சந்திரன் வழங்கினார். இன்னும் சற்றுநேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது ஆதரவை தெரிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெகவை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது!. பாமக!
    Next Article CPI-யை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் தவெகவுக்கு ஆதரவு!
    Editor web3
    • Website

    Related Posts

    பூட்டை உடைத்து உள்ளே புகுந்து…. கரூர் அதிமுக லகலகலக…

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 15, 2026

    சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு – காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பூட்டை உடைத்து உள்ளே புகுந்து…. கரூர் அதிமுக லகலகலக…

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு – காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.