Author: editor5
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் ஆடைத் தேர்வு, அவரது ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து பொதுமக்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. மே 10ஆம் தேதி பதவியேற்றபோது கருப்பு கோட் சூட்டில் தோன்றிய அவர், எளிமை மற்றும் நேர்மையின் அடையாளமாக அதைத் தேர்ந்தெடுத்ததாக விளக்கியிருந்தார். ஆனால், அதற்கு மாறாக, சில வெள்ளிக்கிழமைகளில் பட்டு வேட்டி-சட்டையுடன் தலைமைச் செயலகம் வருவது இப்போது தனி விவாதப் பொருளாக மாறியுள்ளது. முதல் முறையாக மே 29ஆம் தேதி, தனது நீண்டகால மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமியின் இல்ல விழாவில் கலந்துகொண்ட பிறகு, அதே ஆடையில் செயலகம் வந்தார். அன்று அதைத் தற்காலிக மாற்றமாகவே பார்த்தனர். ஆனால், பிறகு வாரத்தில் ஒருமுறை, பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில், அவர் பட்டு வேட்டி-சட்டையில் தோன்றுவது வழக்கமாகிவிட்டது. ஜூலை 17ஆம் தேதி சென்னை சமூக நீதி விடுதியில் ஆய்வு செய்தபோதும், இன்று (ஜூலை 31) முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தபோதும் அதே பாணியில் காணப்பட்டார். புத்தம் புதிய…
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவின் புறநகர் பகுதியில் இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 34 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள சோக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் சுரங்கத்தின் பெரும் பகுதி இடிந்து விழுந்ததால் தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த மீட்புக் குழுக்கள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டன. இதுவரை 34 உடல்களை மீட்க முடிந்துள்ளது. சுமார் 4,000 அடி ஆழத்தில் இன்னும் 22 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடினமான சூழ்நிலையிலும் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இருள், புகை மற்றும் இடிபாடுகளுக்கு இடையே மீட்புக் குழுவினர் தங்களது உயிரைப் பணயம் வைத்து செயல்பட்டு வருவதாக பலுசிஸ்தான் மாகாண சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் ஷோயப் நோஷர்வானி தெரிவித்தார். சுரங்க வாயிலில் உயிரிழந்த தொழிலாளர்களின்…
வாஷிங்டன்: அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று, பட்டம் பெற்ற பிறகு அங்கேயே தங்கி வேலைவாய்ப்பு தேடும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் ஒரு புதிய முன்மொழிவை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.95 லட்சம்) கட்டணம் வசூலிக்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்டணத்தை மாணவர்களே நேரடியாகச் செலுத்த வேண்டுமா அல்லது அவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இந்த முன்மொழிவு, H1B விசாக்களுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் விதிக்கும் முந்தைய திட்டத்தை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து வந்துள்ளது. F-1 விசா மூலம் படிப்பை முடிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் Optional Practical Training (OPT) திட்டத்துக்கு இந்தக் கட்டணம் பரிசீலிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் OPT திட்டத்தில் சுமார் 4.19 லட்சம் வெளிநாட்டு…
பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளரும், கடுமையான விவாதவீரருமான ஷேசாத் பூனவாலா கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் தொடங்கிய அவரது அரசியல் பயணம் 2017-ல் கட்சியின் தேசியத் தலைவர் தேர்தல் சர்ச்சையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது. அதன்பின் பா.ஜ.க.வில் இணைந்த ஷேசாத், விரைவில் கட்சியின் முக்கிய முகமாக உருவெடுத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளராக அவர் அடையாளம் காணப்பட்டார். சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வந்த அவர், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பா.ஜ.க. சார்பில் உடனடி பதிலளிக்கும் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். எனினும், சமீப நாட்களில் அவரது நடவடிக்கைகள் வேறு திசையில் செல்வதாகக் கருதப்பட்டது. தனது எக்ஸ் (ட்விட்டர்) பயோவில் ‘பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர்’ என்பதை நீக்கியது அவரது விலகலை உறுதிப்படுத்தியது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில்,…
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி விவகாரம் குறித்து மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது; தமிழகத்திற்கு நாம் ஏற்கெனவே திறந்துவிட்ட தண்ணீர் கடலில் கலந்துள்ளது. 177 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில், 400 டிஎம்சி தண்ணீருக்கும் மேல் நாம் தமிழகத்துக்கு வழங்கி இருக்கிறோம். கடந்த ஆண்டு கர்நாடகாவில் நல்ல மழை பெய்ததால் தமிழகத்துக்கு போதிய அளவு தண்ணீர் வழங்கப்பட்டது. தமிழகத்துக்கு தண்ணீர் விட மாட்டோம் கர்நாடக அணைகளுக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 3,500 கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. போதிய அளவு நீர் இல்லை என கூறியபோதும் காவிரி மேலாண்மை ஆணையம் அதனை ஏற்கவில்லை. கடுமையான சூழ்நிலையில் தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வேதனையளிக்கிறது. தமிழகத்துக்கு தண்ணீர் விட மாட்டோம் என காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கூறிவிட்டோம். தமிழ்நாட்டுக்கு…
புதுடெல்லி: பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆகஸ்ட் 1) ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், சிலவற்றைத் திறந்து வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள போகபுரத்தில் காலை 11 மணியளவில் பிரதமர் வருகை தர உள்ளார். அங்கு அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தை பார்வையிட்ட பின்னர், காலை 11.30 மணிக்கு விமான நிலையத்தை முறையாகத் திறந்து வைக்கிறார். ரூ.5,640 கோடி மதிப்பில் ‘கிரீன்பீல்ட்’ அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன விமான நிலையம், பிராந்திய விமானப் போக்குவரத்தை பெரிதும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையத்தின் வடிவமைப்பு ஆந்திரப் பிரதேசத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ‘சுட்டிலு’ குடிசைகள், அரக்கு பள்ளத்தாக்கின் இயற்கை…
சென்னை: பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக நாளை (ஆகஸ்ட் 1) சென்னை வருகிறார். மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 23-ம் தேதி தொடங்கிய இந்த முகாமில் மாநிலம் முழுவதும் இருந்து 77 மாவட்டத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். முக்கிய தலைவர்களின் உரைகள், தொகுப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகள் இதுவரை நடைபெற்றுள்ளன. நாளை முகாம் நிறைவு பெற உள்ள நிலையில், ராகுல் காந்தியின் வருகை முகாமுக்கு முக்கியத்துவம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் இருந்து பயணிகள் விமானம் மூலம் காலை 10.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் ராகுலுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் மாநிலத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். வரவேற்புக்குப் பின்னர், நீட் தேர்வு தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்த கோவை மற்றும் சேலம் பகுதிகளைச் சேர்ந்த நான்கு மாணவ-மாணவிகளின் பெற்றோர்களை…
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான நீண்டகால பிரச்சினை மீண்டும் உச்சம் பெற்றுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் பெங்களூரு செல்லத் திட்டமிட்டுள்ளார். இதற்கு கர்நாடக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கன்னட சாலுவாலி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது, “தமிழக முதலமைச்சர் விஜய் பெங்களூருக்கு வந்தால் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம். தமிழகத்துக்கு தண்ணீர் தேவையில்லை என அவர் கூறினால் மட்டுமே வரவேற்போம்” என்று எச்சரிக்கை விடுத்தார். தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்குவதை எதிர்த்து ஆகஸ்டு 13-ம் தேதி கர்நாடகா முழுவதும் முழு அடைப்பு (பந்த்) நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும். இந்த ஆண்டு கர்நாடகத்தில் போதிய மழை பெய்யாததால் அணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே காவிரி ஆற்றின் குறுக்கே…
திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக விளங்கும் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், கோவில் நிர்வாகம் திடீரென தரிசன நேரத்துக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் சிறப்பு வரிசை ஆகியவற்றின் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி முருகப் பெருமானை தரிசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், சண்முக விலாச மண்டபத்தை இரும்பு கிரில் கேட் அமைத்து முழுமையாக அடைத்து வைத்திருப்பது பக்தர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொது மற்றும் கட்டண வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இதுவரை சாதாரண நாட்களில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனத்துக்கு அனுமதித்து வந்த கோவில் நிர்வாகம், எந்த…
யூடியூபர் விஜே சித்து தனது அலுவலக மின் கட்டணம் ரூ.62,000 என்ற அளவுக்கு அதிகமாக வந்ததாக வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சியான திமுக இதை பெரிதாக்கி தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக தீவிர விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ஜூலை மாத மின் கட்டணங்கள் வழக்கத்தை விட கணிசமாக உயர்ந்துள்ளதாக சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் சமூக வலைதளங்கள் மற்றும் நேரடியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் புகார் அளித்து வருகின்றனர். இந்தப் பிரச்சினை மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் முதல்வர் விஜய் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, மின் நுகர்வு கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை உடனடியாக ஆய்வு செய்ய தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, கடந்த மே மாத கட்டணத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் நுகர்வு அளவில் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்பட்ட 3.70 லட்சம்…