Author: editor5

தி.மு.க. ஆட்சியில் அவதூறு வழக்கில் யாரும் கைது செய்யப்பட்டது இல்லை. அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 20-ம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் விஜய்யை அவதூறாக பேசியதாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, “ஒரு எம்எல்ஏவாக இருக்கும் நபர் இப்படி பேசலாமா?” என்று கேள்வி எழுப்பியதோடு, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவதூறு வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முன்னாள்…

Read More

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற ஆய்வுப் பணியின்போது திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும் ஒருமையில் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சில மணி நேரங்களிலேயே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 20 அன்று ஆத்தூரில் நடைபெற்ற ஒரு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வரின் சட்டமன்ற உரைகள், முகபாவனை மற்றும் திரைப்படத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தது குறித்து இரட்டை அர்த்தம் கொண்ட கிராமத்துப் பழமொழிகளைப் பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தார். “கடைக்கு வரும் வாடிக்கையாளரைப் பார்த்தே அவரது நோக்கத்தைப் புரிந்துகொள்வேன்; அதுபோல் முதல்வரின் முகத்தில் தெரியும் தவிப்பைப் பார்த்தால் அவர் சிக்கிக்கொண்டதை உணர முடிகிறது”…

Read More

முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜூன் 20 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நகரச் செயலாளர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார் அனிதா ராதாகிருஷ்ணன். மனுவில், “எதிர்க்கட்சி என்ற முறையில் ஆளும் கட்சியினர் மீது பொதுமக்களிடையே உள்ள அதிருப்தியை விமர்சித்துப் பேசினேன். இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று வாதிட்டார். இன்று…

Read More

கரூரில் நிகழ்ந்த பெருந்துயரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் ஆவேசமான பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட திமுக முடிவு செய்துள்ளது. தவெக இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. நேற்று நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு இருக்கிறது. அதை முடிக்காமல் விடமாட்டோம்” என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், “காவல்துறையைப் பயன்படுத்தி கரூர் மக்களை கொன்று குவித்தீர்களே ஸ்டாலின் சார்” என முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரடியாக விமர்சித்தார். திமுகவின் செயல்பாடுகளால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அப்பாவி மக்கள் பலியானதாகக் குற்றம்சாட்டிய அவர், அந்தச் சம்பவத்துக்கான பொறுப்பை திமுக ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “கரூர் மக்களின் கண்ணீரால்தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வியை சந்தித்தார்” எனக் கூறிய ஆதவ் அர்ஜூனா, வரவிருக்கும் தேர்தல்…

Read More

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள், லஞ்சம் மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய முயற்சியை அறிவித்துள்ளார் அமைச்சர் ரமேஷ். இதுதொடர்பாக எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட சிறப்பு பதிவில் அமைச்சர், “அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு” என்று தொடங்கி, துறை சார்ந்த கோவில்களில் நிகழும் பல்வேறு குற்றச் செயல்களுக்கு எதிராக நேரடியாகத் தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அளிக்கலாம் என்று அழைப்பு விடுத்தார். முறைகேடுகள், சிறப்பு தரிசனம் உள்ளிட்டவற்றுக்காக பணம் கேட்பது, திருப்பணிகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் லஞ்சம் வாங்குதல் உள்ளிட்ட புகார்களை விரிவான விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் minister_hrce@tn.gov.in (mailto:minister_hrce@tn.gov.in) என்ற முகவரிக்கு அனுப்பலாம். அமைச்சரும் அவரது அலுவலகமும் இத்தகைய புகார்களை நேரடியாகப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார். இந்த அறிவிப்பு வெளியான சூழலில், அமைச்சர் ரமேஷ் அண்மையில்…

Read More

மதுரையில் வைகை ஆற்றின் நிலையைப் பார்வையிட்டு, மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்திய தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் செயலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஆளுநரின் பேச்சையும் நடவடிக்கையையும் விமர்சித்தார். மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், “வைகை ஆற்றைப் பார்த்தேன். ஆறு இருக்கிறது, ஆனால் நீர் எங்கே? துப்பாக்கியுடன் போருக்குச் செல்வது மட்டுமல்ல, நதிகளை மீட்பதும் தேசப்பற்று. இளைஞர்கள் முன்வர வேண்டும். யாரும் சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகையே களமிறங்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கேரள ஆளுநராக இருக்கும் அர்லேகர், கடந்த மார்ச் 12ஆம் தேதி தமிழ்நாட்டின் கூடுதல் பொறுப்பு ஆளுநராகப் பொறுப்பேற்றார். இவரது செயல்பாடுகள்,…

Read More

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராயும் வகையில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் விரிவான விவாதத்தில் ஈடுபட்டார். மாலை 4.30 மணிக்கு வேலூர் மாவட்ட அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாட உள்ளார். ஏற்கெனவே காஞ்சிபுரம், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நாளை திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்கவுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் இந்தச் சந்திப்புகளில் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளனர். கோவை, கரூர், விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்ட அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் வளர்ச்சி உத்திகள், அமைப்பு ரீதியான பலவீனங்கள், தொகுதி வாரியான செயல்பாடுகள் உள்ளிட்ட…

Read More

பெரம்பூர் மக்களுக்கான இந்த பிரத்யேக செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரும், பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜய், தனது தொகுதி மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை நேரடியாகத் தெரிவித்து தீர்வு காணும் வகையில் பிரத்யேக மொபைல் செயலியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளார். இந்தப் புதுமையான முயற்சி மக்களின் குரலை மக்களாட்சி நிர்வாகத்துடன் நேரடியாக இணைக்கும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. முதலமைச்சர் விஜய்யின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் தயாரிக்கப்படும் இந்த செயலி, பெரம்பூர் தொகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள சாலைப் பிரச்சனை, குடிநீர் பற்றாக்குறை, மின்விநியோகக் கோளாறு, வடிகால் திட்டப் பிரச்சனைகள், குப்பை அகற்றல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்களை உடனடியாகப் பதிவு செய்ய உதவும். புகார் அளித்தவுடன் அதன் நிலை குறித்த தகவல், தீர்வு காணப்பட்ட பிறகு உறுதிப்படுத்தல் போன்ற அம்சங்களும் இந்த செயலியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக்…

Read More

எ.வ.வேலுவின் வீடு உள்பட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். கரூர் மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் பெரும் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில் திமுகவின் முன்னாள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வி.வேலு மீதான லஞ்ச ஒழிப்பு விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022-ம் ஆண்டு அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாரில், அப்போது நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எ.வி.வேலு உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடையவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, ரூ.3.23 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராகப் பொறுப்பேற்ற அருண், இந்தப் புகாரைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்படி, கடந்த மாதம் 23-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட உடனேயே…

Read More

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தனது புதிய அரசியல் இயக்கமான ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாட்டை ஜூலை 12-ம் தேதி பொள்ளாச்சியில் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். இது அவரது புதிய அரசியல் பயணத்தில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை, அதன் பின்னர் சமூக ஊடகங்கள் வாயிலாக நேரலை சந்திப்புகளை நடத்தி மக்களுடன் தொடர்பு கொண்டார். அந்தச் சந்திப்பின்போது, wetheleader.org என்ற இணையதளம் மூலம் புதிய இயக்கத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். இந்த இயக்கத்தை படிப்படியாக ஒரு முழு அரசியல் கட்சியாக உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார். இணையதளத்தில் பெயர், மொபைல் எண் ஆகியவற்றைப் பதிவு செய்து பொதுமக்கள் உறுப்பினர்களாக இணையலாம். இயக்கம் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பெரும் வரவேற்பு கிடைத்தது. அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணையதளம் வாயிலாக இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். இது…

Read More