Close Menu
    What's Hot

    டெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து!. 20 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

    ஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!

    7 வயது மகனைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை? – நெய்வேலியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»கேப்டன விஜயகாந்த் வழியில் மகன் சண்முகபாண்டியன்…
    சினிமா

    கேப்டன விஜயகாந்த் வழியில் மகன் சண்முகபாண்டியன்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TRPL1392
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘டிஎஸ்பி’ என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது அடுத்த படைப்பாக ‘கொம்புசீவி’ படத்தை உருவாக்கி வருகிறார்.

    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்திற்காக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் பொன்ராம் முதல் முறையாக கை கோர்த்துள்ளார்.

    கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த, நகைச்சுவையும் சண்டை காட்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் திருவிழாவாக உருவாகும் இப்படத்தை பெரும் பொருட்செலவில் புதிய நிறுவனமான ஸ்டார் சினிமாஸ் பேனரில் முகேஷ் டி. செல்லையா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கப்பட்டது சென்னையில் இன்று நிறைவுற்றது.

    புதுமுகம் தார்னிகா நாயகியாக நடிக்கிறார். சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்தை சரவண அபிராம் கவனிக்க, ஃபீனிக்ஸ் பிரபு மற்றும் சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ஸ்டில்ஸ்: சி.எச். பாலு; நடன இயக்கம்: ஷெரிப், அசார்.

    தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி சுற்றி இருக்கும் கிராமங்களையும், அங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையையும் இப்படம் பேசுகிறது. இயக்குநர் பொன்ராமுக்கே உரிய நகைச்சுவையும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் நிரம்பி இருக்கும்.

    ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் ‘கொம்புசீவி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைந்து முடித்து திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    கேப்டன் என்று ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். முன்னணி நடிகராக திகழ்ந்த அவர், தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளின் போதும் படக்குழுவினர் அனைவருக்கும் அறுசுவை உணவும், புது உடைகளும் வழங்குவதை வாடிக்கையாக கொண்டவர்.

    தற்போது, சின்ன கேப்டன் என்று அழைக்கும் விதத்தில் சிறப்பான செயல் ஒன்றை செய்துள்ளார் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். தான் நடிக்கும் ‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள் மற்றும் பிரியாணி வழங்கி அவர் கௌரவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய சண்முகபாண்டியன், “இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு அனைவருக்கும் அள்ளி கொடுத்தவர் எனது தந்தையார். அவரது அடிச்சுவற்றை பின்பற்றி ‘கொம்புசீவி’ படம் உருவாக கடுமையாக உழைத்த குழுவினருக்கு என்னால் முடிந்த சிறிய அன்பளிப்பாக இன்று உணவையும், உடைகளையும் பகிர்ந்து கொண்டேன்,” என்றார்.

    DMDK leadership news Shanmugapandian joins DMDK Shanmugapandian political entry Vijayakanth legacy continues Vijayakanth son in politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஏர் இந்தியாவில் இனி பயணிக்கவே மாட்டேன்… டேவிட் வார்னர் அதிரடி அறிவிப்பு…
    Next Article மதுபான மனமகிழ் மன்றம் குறித்து புகார் வந்தால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் .. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு…
    Editor TN Talks

    Related Posts

    முதல்வருக்கு மகளின் திருமண அழைப்பிதழ் தந்த சுந்தர் சி- குஷ்பு!

    June 3, 2026

    நயன்தாராவை ஓவர்டேக் செய்த ராஷ்மிகா மந்தனா..! ஒரே படத்திற்கு ரூ.15கோடியா?

    June 3, 2026

    தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரின் நினைவுநாள் இன்று

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து!. 20 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

    ஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!

    7 வயது மகனைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை? – நெய்வேலியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

    நோ பெட்ரோல்… நோ பொல்யூஷன்… இன்று உலக சைக்கிள் தின ஸ்பெஷல்!

    போதை பொருட்களுக்கு ஃபுல் ஸ்டாப்..!! மாஸ் காட்டும் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.