Close Menu
    What's Hot

    3 இடங்களில் ரேடார் கருவிகள்.. தொடர் கண்காணிப்பு..!! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா..!

    சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு –  இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – ஆதார் கட்டாயம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருவள்ளூர் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமன் கைது.. சஸ்பெண்ட் செய்ய காவல்துறை பரிந்துரை!
    தமிழ்நாடு

    திருவள்ளூர் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமன் கைது.. சஸ்பெண்ட் செய்ய காவல்துறை பரிந்துரை!

    Editor TN TalksBy Editor TN TalksJune 17, 2025Updated:June 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250617 WA0002
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் அந்த இளைஞரின் சகோதரர் கடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் கடத்தல் வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட ஐந்து பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த பூவை ஜெகன்மூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சிறுவன் கடத்தல் சம்பவத்தில் ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

    நேற்று பிற்பகல் ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, இந்தக் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய முகாந்திரம் இருப்பதால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சீருடையில் இருந்த ஏடிஜிபி ஜெயராமனை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனிடம் திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. ஏடிஜிபி ஜெயராமன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    adgp Crime jayaraman police tamil nadu ஏடிஜிபி தமிழகம் போலீஸ் ஜெயராமன்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு: உலகத் தலைவர்களுடன் சந்திப்பு!
    Next Article கோவளம் புதிய நீர்த்தேக்கத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி மறுப்பு: மாற்று வழியைப் பரிந்துரைத்த நிபுணர் குழு!
    Editor TN Talks

    Related Posts

    3 இடங்களில் ரேடார் கருவிகள்.. தொடர் கண்காணிப்பு..!! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    June 2, 2026

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா..!

    June 2, 2026

    சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு –  இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – ஆதார் கட்டாயம்

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    3 இடங்களில் ரேடார் கருவிகள்.. தொடர் கண்காணிப்பு..!! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா..!

    சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு –  இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – ஆதார் கட்டாயம்

    MAGICAL MAY..! நடிகை திரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்..!

    திடீர் வாயுக்கசிவு..!! பொதுமக்களுக்கு மூச்சு திணறல்..!! சென்னையில் பரபரப்பு..!!

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.