Close Menu
    What's Hot

    தமிழ் சினிமாவை வெட்டவெளிகளில் சிறகடிக்க வைத்தவர் இயக்குநர் இமயம் – தமுஎகச அஞ்சலி

    உலகத் தலைவர்களின் வாழ்த்து மழையில் பிரதமர் மோடி!.

    பாரதிராஜா மறைவு; டீசர் வெளியீட்டை தள்ளி வைத்த விஷால்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»மனுஷி திரைப்படம்: “ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் குறித்து பரிசீலனை..” சென்சார் போர்டு!
    சினிமா

    மனுஷி திரைப்படம்: “ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் குறித்து பரிசீலனை..” சென்சார் போர்டு!

    Editor TN TalksBy Editor TN TalksJune 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250617 WA0010
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் உருவாகியுள்ள மனுஷி திரைப்படத்தில் உள்ள ஆட்சேபகரமான காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கினால், படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என சென்சார் போர்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டதை எதிர்த்தும், நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்டும் சென்சார் செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரியும், படத் தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, படத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் எவை என்பது குறித்து மனுதாரருக்கு (வெற்றிமாறன்) தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை நீக்கினால் சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், வெற்றிமாறன் தரப்பில், சென்சார் போர்டின் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் தொடர்பான தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, சென்சார் போர்டின் ஆட்சேபனையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்ய படத் தயாரிப்பாளர் வெற்றிமாறனுக்கு அனுமதி அளித்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். இதன்மூலம், மனுஷி திரைப்படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை வெற்றிமாறன் எடுக்கும் வழக்கின் முடிவைப் பொறுத்தே அமையும்.

    Andrea Manushi Tamil Cinema Vetrimaaran
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஸ்தம்பித்தது திருவண்ணாமலை… பேருந்து நிலையம் செல்லவே படாத பாடு… கடும் நெரிசலில் பக்தர்கள்…
    Next Article டாஸ்மாக் முறைகேடு: ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தொடர்புக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
    Editor TN Talks

    Related Posts

    தமிழ் சினிமாவை வெட்டவெளிகளில் சிறகடிக்க வைத்தவர் இயக்குநர் இமயம் – தமுஎகச அஞ்சலி

    June 10, 2026

    பாரதிராஜா மறைவு; டீசர் வெளியீட்டை தள்ளி வைத்த விஷால்

    June 10, 2026

    மயிலை படைத்தவர், குயிலை அழைத்தவர், சிவப்பு ரோஜாக்களை விதைத்தவர் – பாரதிராஜா மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல்!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ் சினிமாவை வெட்டவெளிகளில் சிறகடிக்க வைத்தவர் இயக்குநர் இமயம் – தமுஎகச அஞ்சலி

    உலகத் தலைவர்களின் வாழ்த்து மழையில் பிரதமர் மோடி!.

    பாரதிராஜா மறைவு; டீசர் வெளியீட்டை தள்ளி வைத்த விஷால்

    ஹர்திக் பாண்டியா திடீர் விலகல்!. பிசிசிஐ (CoE) மையத்தில் நடந்தது என்ன?. இந்திய அணிக்கு அதிர்ச்சி!

    பிரதமர் மோடிக்கு சிறப்பு கௌரவம்!! எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டிய மத்திய அமைச்சரவை!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.