Close Menu
    What's Hot

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சொத்துக்குவிப்பு வழக்கு: ஜூலை 23-ல் ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
    தமிழ்நாடு

    சொத்துக்குவிப்பு வழக்கு: ஜூலை 23-ல் ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJune 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250617 WA0013
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், வருகிற ஜூலை 23 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    வழக்கின் பின்னணி:

    திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாகக் குற்றம்சாட்டி, கடந்த 2015 ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப்பின், ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி என நான்கு நபர்கள் மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டில் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    குற்றப்பத்திரிகையில், குற்றம் சாட்டப்பட்ட காலகட்டத்தில் ஆ.ராசா தனது வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக, அதாவது 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ தெரிவித்திருந்தது.

    இந்த வழக்கு பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஆ.ராசாவின் மனு தள்ளுபடி:

    இந்த வழக்கில் ஆ.ராசா தரப்பில் கடந்த ஆண்டு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனது வருமான வரி கணக்கு தாக்கல் விபரம் மற்றும் வழக்கின் சில ஆவணங்கள் வழங்க வேண்டும் என அவர் கோரியிருந்தார். இதற்கு சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ராஜாவின் வருமான வரி கணக்கு தொடர்பான விபரங்கள் அவரிடமே இருக்கும் என்றும், சாட்சி விசாரணையின் போது அதனை அவர் சரிபார்த்துக்கொள்ளலாம் என்றும் வாதிடப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி என். வேங்கடவரதன், இன்று உத்தரவு பிறப்பித்தார். அதில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்த விபரங்களை கோரிய ஆ.ராசாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    அடுத்தகட்ட விசாரணை:

    மேலும், வழக்கில் ஜூலை 23 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி, அன்றைய தினம் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    CBI Chennai Special Court Court Order Disproportionate Assets Case Framing of Charges Nilgiris MP ஆ.ராசா குற்றச்சாட்டு பதிவு சிபிஐ சென்னை சிறப்பு நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்ற உத்தரவு நீலகிரி எம்.பி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை!-MK stalin
    Next Article தக் லைஃப் வெளியிட அனுமதிக்க வேண்டும்… கமல்ஹாசன் சொன்னதில் என்ன தவறு? உச்சநீதிமன்றம் காட்டம்…
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    February 18, 2026

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    Trending Posts

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    February 18, 2026

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    February 18, 2026

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    February 18, 2026

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.