Close Menu
    What's Hot

    பெங்களூரு விமான நிலையத்தில் பகீர்!. ஒரு மணி நேரத்தில் 2 மோசடிக்காரர்கள்!. பயணியின் எச்சரிக்கை வீடியோ!

    கத்தாரில் பயங்கரம்!. வெடித்து சிதறிய எரிவாயு ஆலை!. 18 பேர் மாயம்; 54 பேர் காயம்!

    பிஃபா உலகக்கோப்பை 2026!. நியூசிலாந்தை வீழ்த்தி எகிப்து வரலாற்று சாதனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»வடிவேலு தொடர்ந்த வழக்கு… சிங்கமுத்து ரூ.2,500 அபராதம் செலுத்த உத்தரவு
    சினிமா

    வடிவேலு தொடர்ந்த வழக்கு… சிங்கமுத்து ரூ.2,500 அபராதம் செலுத்த உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJune 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    16 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கிய சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ.2,500அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

    சமூக வலைதளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்க சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தன்னை பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, நடிகர் வடிவேலுவுக்கு எதிராக இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ, எழுத்துபூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ வெளியிடப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது, இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி இடைக்கால மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில் பிரதான சிவில் வழக்கு விசாரணையில் சிங்கமுத்து தரப்பில் ஆஜராகி பதிலரை தாக்கல் செய்யப்படாத நிலையில், அவருக்கு எதிராக ஒரு தலைப் பட்ச தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து , நடிகர் சிங்கமுத்து சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனக்கு 67 வயதாகி விட்டதாகவும், உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அதனால் வழக்கில் பதிலுரை தாக்கல் செய்ய முடியவில்லை என்றும், எனவே தனக்கு வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. குமரேஷ் பாபு, பிரதான வழக்கில் விதிக்கப்பட்டிருந்த உத்தரவை நீக்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் சிங்கமுத்து தரப்புக்கு ரூ.2,500 அபராதம் விதித்து அதை வடிவேலு தரப்புக்கு செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பிரதான சிவில் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவியர்வை இருந்ததால் துடைத்தேன்.. வேறு காரணம் இல்லை.. விபூதியை அழித்தது தொடர்பாக திருமா விளக்கம்…
    Next Article 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    June 21, 2026

    சமூக ஊடகங்களுக்கு கயாடுலோஹர் இடைவெளி? இதுதான் காரணமா?

    June 20, 2026

    ஆக்‌ஷனில் கலெக்‌ஷனை அள்ளிய சமந்தாவின் ’எங்கள் தங்கம்’..!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெங்களூரு விமான நிலையத்தில் பகீர்!. ஒரு மணி நேரத்தில் 2 மோசடிக்காரர்கள்!. பயணியின் எச்சரிக்கை வீடியோ!

    கத்தாரில் பயங்கரம்!. வெடித்து சிதறிய எரிவாயு ஆலை!. 18 பேர் மாயம்; 54 பேர் காயம்!

    பிஃபா உலகக்கோப்பை 2026!. நியூசிலாந்தை வீழ்த்தி எகிப்து வரலாற்று சாதனை!

    அதிமுக, திமுகவால் முடியாத மேஜிக்!. தமிழக அரசியலில் விஜய் செய்த அரிய சாதனை!

    உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்: செல்போனில் ஆபாச படம்.. வெறியில் 9 மாத குழந்தையை சீரழித்த 12 வயது சிறுவன்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.