Close Menu
    What's Hot

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பெரியார், அண்ணாவை விமர்சித்து முருக பக்தர்கள் மாநாட்டில் வீடியோ.. தனக்கு அதுபற்றி தெரியாது என பாஜக தலைவர் நயினார் விளக்கம்..
    தமிழ்நாடு

    பெரியார், அண்ணாவை விமர்சித்து முருக பக்தர்கள் மாநாட்டில் வீடியோ.. தனக்கு அதுபற்றி தெரியாது என பாஜக தலைவர் நயினார் விளக்கம்..

    Editor TN TalksBy Editor TN TalksJune 23, 2025Updated:June 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    02 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடத்தை ஒழிப்போம் என்று அண்ணா பெரியார் படங்களுடன் வீடியோ வெளியானது குறித்து தான் இன்னும் பார்க்கவில்லை என்றும் அதனை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    கோவைவிமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு யாரும் வர மாட்டார்கள் என திமுக கூறிய நிலையில் முதல் நாள் மூன்று லட்சம் பேரும் மாநாட்டின் போது 5 லட்சம் பேரும் வந்திருந்தார்கள் என்றார். சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் மாநாடு நடந்து முடிந்து இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் காவல்துறையினர் ஒருவர் கூட அந்த வளாகத்தில் இல்லை எனவும் அனைவரும் கட்டுப்பாட்டுடன் இருந்து மாநாட்டில் பங்கேற்று திரும்பினர் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    தோல்வி பயத்தில் திமுகவினர் தற்பொழுது பேசிக் கொண்டு இருக்கின்றனர் எனவும் அவர் விமர்சித்தார். திருமாவளவன் திருநீற்றை அழித்தது குறித்து திருமாவளவன் அளித்த விளக்கம் தொடர்பான கேள்விக்கு அதை நீங்கள் நம்புகின்றீர்களா? எனவும் நம்புவது போன்று பதிலளிக்க வேண்டும் எனவும் கூறினார்.

    பெரியார்,அண்ணா குறித்து மாநாட்டில் வீடியோ வெளியிட்டது வருத்தம் அளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது அவர்கள் கருத்து என்றார். நீதிமன்ற அவமதிப்பு என திமுக வினர் தெரிவித்திருபது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,திமுகவினர் நாங்கள் செய்யாததை தான் பேசிக்கொண்டு இருப்பார்கள் என்றும் நேற்றைய மாநாட்டில் பக்தி பாடல்கள், நடனம், பரத நாட்டியம் போன்றவை தான் நடந்ததாகவும் குறிப்பிட்டார்.

    இதேபோல் அதிமுகவின் வருத்தத்தை சாதாரணமாக பாஜக எடுத்து கொள்கின்றதா? என்ற கேள்விக்கு, அதை நான் இன்னும் பார்க்கவில்லை பார்த்துவிட்டு கண்டிப்பாக பேசுகிறேன் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ போடுவது சரியா என்ற கேள்விக்கு,நேற்று நிகழ்ச்சி முடிந்தவுடன் நேற்று இரவே புறப்பட்டு கோவை வந்து விட்டோம். அது என்னவென்று பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் எனவும் மழுப்பலாக பதிலளித்தார். அதே வேளையில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்வில் அதிமுக கலந்து கொண்டது குறித்த கேள்விக்கும் நயினார் நாகேந்திரன் பதில் அளிக்காமல் தவிர்த்து சென்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெரியார், அண்ணா குறித்த வீடியோவை துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது… கடும் கண்டனம் தெரிவிப்பதாக அஇஅதிமுக அறிக்கை..
    Next Article சீமானுக்கு எதிராக புதிய தமிழகம் கட்சி போராட்டம்… சட்டவிரோதமாக கள் இறக்கியதாக குற்றச்சாட்டு…
    Editor TN Talks

    Related Posts

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    June 21, 2026

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    June 21, 2026

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.