Close Menu
    What's Hot

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»பெரியார், அண்ணா குறித்த வீடியோவை துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது… கடும் கண்டனம் தெரிவிப்பதாக அஇஅதிமுக அறிக்கை..
    அரசியல்

    பெரியார், அண்ணா குறித்த வீடியோவை துளியும் ஏற்றுக்கொள்ள முடியாது… கடும் கண்டனம் தெரிவிப்பதாக அஇஅதிமுக அறிக்கை..

    Editor TN TalksBy Editor TN TalksJune 23, 2025Updated:June 23, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    23 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சர்த்தில் எங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அதிமுக சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையின் விவரம் வருமாறு..

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும்!

    பெரியாரையே இழிவுபடுத்திய கருணாநிதியின் திமுக, அஇஅதிமுக-வுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை!

    அவலமே உருவான ஒரு ஆட்சியை நடத்தும் ஸ்டாலினின் திமுக, அதைப்பற்றி நாங்கள் நாள்தோறும் தெரிவிக்கும் மக்களின் குரலான விமர்சனங்ககளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், “Take Diversion” என்ற தனது வழக்கமான பாணியில், முருக பக்தர்கள் மாநாட்டை வைத்து, அஇஅதிமுக மீது அவதூறான கருத்துகளை அள்ளித் தெளித்து, மக்களின் கவனத்தை திசைதிருப்பிவிடலாம் என எண்ணுகிறது.

    திமுகவின் அமைச்சர் அடிபொடிகள் வரிசையாக செய்தியாளர் சந்திப்பு கொடுக்க, அறிவாலய Gatekeeper ஆர்.எஸ்.பாரதி பெயரில் வழக்கம் போலவே அறிக்கை வாந்தியையும் கக்கியுள்ளது திமுக.

    “திராவிடத்தை அழிக்க முருகா வா” என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா? திராவிடம் என்ற கொள்கையைத் தான் யாராவது அழித்துவிட முடியுமா?

    திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலான, ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டை செலுத்திக் கொண்டிருக்கும் உயரிய கொள்கை நெறி! மக்களுக்கான ஒரு கொள்கையை யாரால் வீழ்த்த முடியும்?

    திமுக-வின் இந்த விஷமப் பிரச்சாரம், நம் திராவிடக் கொள்கையையே Insecure-ஆக காட்டக் கூடிய ஒரு மோசமான Narrative. இதை செய்வதற்கு திமுக வெட்கித் தலைகுனிய வேண்டும்.

    அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் திராவிடத்தை வலுவற்ற கொள்கை போல கட்டமைக்க முயலும் திமுக-வின் சதிச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    பெரியார், அண்ணாவின் வாழ்வியல் உரத்தில் தழைத்தோங்கி நிற்கும் கொள்கையை, ஒரு மாநாடு சிதைத்து விடுமா என்ன? இல்லை, அப்படி நடக்க தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுவிடுமா?

    திராவிடக் கொள்கை எங்கள் குருதியில் கலந்த ஒன்று. “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்ற பேரறிஞர் அண்ணாவின் நெறிப்படி வாழ்பவர்கள் நாங்கள்.

    ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கக் கூடிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதால் தான், கடவுள் பக்தியை பறைசாற்ற, அமைப்பு ரீதியாக நடத்தப்பட்ட மாநாட்டிற்கு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள் ஜனநாயக ரீதியாக வாழ்த்து தெரிவித்தார்கள்.

    எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், தனிப்பட்ட முறையில் முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே அந்த மாநாட்டில் கலந்துகொண்டனரே தவிர எந்தவித அரசியல் நோக்கத்திலும் அல்ல. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த யாரும் ஏற்கவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.

    அதே போல், அந்த மாநாட்டில், தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சர்த்தில் எங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

    உண்மையில் அப்படிப்பட்ட வீடியோ வெளியிட்டதாக எங்கள் கவனத்திற்கு வரவோ, நாங்கள் யாரும் பார்க்கவோ இல்லை. மாநாடு முடித்து வந்த பிறகே இதுபற்றிய செய்திகள் வாயிலாக தான் நாங்களும் அறிந்து கொண்டோம்.

    ஜாதியின் பெயரால் மக்கள் பிரிவுண்டு இருக்க, அந்த ஜாதிக்கு மூலமாக கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்ய, அந்த அரசியலை எதிர்க்கவே “கடவுள் மறுப்பு” கொள்கையை ஆயுதமாக ஏந்தினார் தந்தைப் பெரியார். பெரியாரின் கோபம் எப்போதும் கடவுள் மீது அல்ல; மாறாக, கடவுளின் பெயரைச் சொல்லி சிலரின் தவறான அரசியலால் ஏற்பட்ட கொடும் ஜாதிய பேதங்கள் மீது தான்!

    “நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்; பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்” என அரசையும் மதத்தையும் தெளிவாக வேறுபடுத்தி, Secularist அரசியலை முன்னெடுத்தவர், நாங்கள் பெயரில் மட்டுமல்ல, எங்கள் நெஞ்சங்களிலும் தாங்கும் இதயதெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

    பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைப் பார்வையைத் தன்னகத்தே கொண்டு, வழுவாமல் இயங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, அவதூறும் ஆபாசமும் மட்டுமே கொள்கையாகக் கொண்ட திமுக பாடமெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

    அதேபோல், கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்கள், தனது தொகுதிக்கு உட்பட்ட மிகவும் பழமைவாய்ந்த, மதிப்பிற்குரிய பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி அளிக்கப்பட்ட அழைப்பினை ஏற்று கலந்துகொண்டதாகவும், ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்துகொள்ளவில்லை எனவும் செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்திவிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபட்டியலினத்தைச் சேர்ந்த புகார்தாரர் அவமானப்படுத்தப்பட்ட விவகாரம்.. 2 வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதி..
    Next Article பெரியார், அண்ணாவை விமர்சித்து முருக பக்தர்கள் மாநாட்டில் வீடியோ.. தனக்கு அதுபற்றி தெரியாது என பாஜக தலைவர் நயினார் விளக்கம்..
    Editor TN Talks

    Related Posts

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    June 21, 2026

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    June 21, 2026

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.