Close Menu
    What's Hot

    பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!. ஏற்காடு அருகே சோகம்!

    ஜூன் 21, 22ம் தேதி வண்டலூர் பூங்கா போறீங்களா..!! அப்போ முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க..!!

    இளைஞர்களின் நலன் காக்க ரூ.2400 கோடி நிதி ஒதுக்கீடு..!! மோடி அரசுக்கு நயினார் நன்றி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»திருப்பதியில் இனி ஈசியா லட்டு வாங்கலாம்… தேவஸ்தானத்தின் புதிய ஏற்பாடு…
    இந்தியா

    திருப்பதியில் இனி ஈசியா லட்டு வாங்கலாம்… தேவஸ்தானத்தின் புதிய ஏற்பாடு…

    Editor TN TalksBy Editor TN TalksJune 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்து வருகிறார்கள். குறிப்பாக வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இலவச தரிசனத்திற்காக இரண்டு நாட்கள் பக்தர்கள் காத்திருக்கும் சூழலும் ஏற்படும். திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும் தேவைப்படுவோர் காசு கொடுத்து லட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.

    சாமி தரிசனம் செய்ய எப்படி காத்திருக்க வேண்டுமோ, அதேப் போல லட்டினை வாங்கவும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பர். இதனால் பக்தர்கள் அவதியடைகின்றனர். லட்டு வாங்கும் நேரத்த குறைக்கும் பொருட்டு, நடவடிக்கை எடுக்க வெண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதாவது லட்டு டோக்கன் பெற க்யூ ஆர் கோடு முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கான பிரத்யேக எந்திரத்தில் க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்து விரைவாக பணம் செலுத்தி லட்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    டச் ஸ்கீரினுடன் கூடிய இந்த பிரத்யேக எந்திரத்தில், தரிசன டிக்கெட் எண், எத்தனை லட்டு தேவை, மொபைல் எண்ணை உள்ளீடாக வழங்க வேண்டும். திரையில் தோன்றும் க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்து, நாம் லட்டுக்கான பணத்தை யுபிஐ அல்லது பிற டிஜிட்டல் முறை மூலம் பணம் செலுத்தலாம். பின்னர், அந்த டோக்கனை கவுண்டரில் வழங்கி லட்டுகளை பெற முடியும். மேலும், தரிசன டிக்கெட் இல்லாமல் திருமலைக்கு வரும் பக்தர்களும் லட்டு பெறும் வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு!
    Next Article இஸ்ரேல் – ஈரான் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!
    Editor TN Talks

    Related Posts

    ராகுல் காந்தி பிறந்தநாள்!. மணக்குள விநாயகர் கோயிலில் தங்க தேர் இழுத்து காங். கட்சியினர் கொண்டாட்டம்!

    June 19, 2026

    டெலிகிராம் தற்காலிக தடை..!! மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஹைகோர்ட் அதிரடி..!!

    June 19, 2026

    குதிரை பேரம் வழக்கு..!! தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!. ஏற்காடு அருகே சோகம்!

    ஜூன் 21, 22ம் தேதி வண்டலூர் பூங்கா போறீங்களா..!! அப்போ முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க..!!

    இளைஞர்களின் நலன் காக்க ரூ.2400 கோடி நிதி ஒதுக்கீடு..!! மோடி அரசுக்கு நயினார் நன்றி..!!

    ஜூன் 29-ல் முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் மாநாடு!

    வால்பாறை குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை!. பொதுமக்கள் அச்சம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.