Close Menu
    What's Hot

    புறப்பட்ட சில நிமிடங்களில்.. கீழே விழுந்து நொறுங்கிய B-52 ரக போர் விமானம்..!! 8 பேர் உயிரிழப்பு..!!

    மூடப்பட்ட பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளை..!! ஒருவருக்கு கத்திக்குத்து..!! சிக்கிய தவெகவினர்..!!

    61 நாட்களுக்குப் பிறகு.. கொத்து கொத்தாக கிடைத்த மீன்கள்..!! மகிழ்ச்சியில் மீனவர்கள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»அரசியல்»நான் என்ன செத்தா போய்விட்டேன், கூட்டுப் பிரார்த்தனை செய்ய? அன்புமணியை நக்கல் செய்த பாமக எம்எல்ஏ அருள்..
    அரசியல்

    நான் என்ன செத்தா போய்விட்டேன், கூட்டுப் பிரார்த்தனை செய்ய? அன்புமணியை நக்கல் செய்த பாமக எம்எல்ஏ அருள்..

    Editor TN TalksBy Editor TN TalksJune 25, 2025Updated:June 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Anbumani Arul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நான் என்ன செத்தா போய்விட்டேன், எனக்கு எற்கு கூட்டுப் பிரார்த்தனை என்று சேலம் பாமக எம்எல்ஏ அருள் விமர்சித்துள்ளார்.

    பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய நியமனங்கள் குறித்த அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சட்டமன்ற உறுப்பினர் அருள், இனி கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளராகப் பணியாற்றுவார் என பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    இந்த நியமனம், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கட்சிக்குள் முக்கியத்துவம் அளிக்கும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அருள், சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அண்மைக்காலமாக பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதல்கள் குறித்து செய்திகள் வெளியான நிலையில், இந்த புதிய நியமனங்கள் கட்சிக்குள் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இருப்பினும், இந்த நியமனம் கட்சியின் ஒட்டுமொத்த செயல்பாட்டிலும், குறிப்பாக வரவிருக்கும் தேர்தல்களிலும் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    மாநில பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து பெறுவதற்காக சேலம் அருள் இன்று தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் அன்புமணியின் கூட்டுப்பிரார்த்தனை குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், நான் என்ன செத்தா போய்விட்டேன், எனக்கு எற்கு கூட்டுப் பிரார்த்தனை என்று நக்கலாக பதிலளித்தார்.

    Anbumani Ramadoss MLA Arul Party Restructuring Pattali Makkal Katchi PMK Political Appointment ramadoss salem State Joint General Secretary அரசியல் நியமனம் அன்புமணி ராமதாஸ் எம்.எல்.ஏ. அருள் கட்சி மறுசீரமைப்பு சேலம் பாட்டாளி மக்கள் கட்சி பாமக மாநில இணை பொதுச் செயலாளர் ராமதாஸ்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலீவு போட்டு வெளிநாட்டுக்கு போனது ஒரு குத்தமா?..
    Next Article மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன்…
    Editor TN Talks

    Related Posts

    தமிழகத்தில் மூடப்பட்ட 717 மதுக் கடைகள் எவையெவை? டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை

    June 15, 2026

    சி.வி.சண்முகம் நாடாளுமன்ற உறுப்பினரானது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை – அட்டாக் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி

    June 15, 2026

    சபரிமலையில் அன்புமணி-சௌமியா!. குடும்பத்துடன் சாமி தரிசனம்!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புறப்பட்ட சில நிமிடங்களில்.. கீழே விழுந்து நொறுங்கிய B-52 ரக போர் விமானம்..!! 8 பேர் உயிரிழப்பு..!!

    மூடப்பட்ட பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளை..!! ஒருவருக்கு கத்திக்குத்து..!! சிக்கிய தவெகவினர்..!!

    61 நாட்களுக்குப் பிறகு.. கொத்து கொத்தாக கிடைத்த மீன்கள்..!! மகிழ்ச்சியில் மீனவர்கள்..!!

    பவிஷ் நாராயணின் புதிய அவதாரம்..! ’லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீடு..!

    வெளியானது UPSC முதல்நிலைத் தேர்வு முடிவுகள்..!! 13,343 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.