Close Menu
    What's Hot

    எகிறும் டீசல் விலை..!! லாரி கட்டணம் அதிரடி உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..??

    தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!. ஆளுநருக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!

    பெண்கள் பாதுகாப்பு!. ‘சிங்கப்பெண்’ படைக்கு தேவைப்பட்டால் துப்பாக்கி! ஐ.ஜி. பவானீஸ்வரி விளக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»HOLLYWOOD WALK OF FAME தேர்வாகியுள்ள தீபிகா… முதல் இந்திய நடிகை என்ற கவுரம்…
    சினிமா

    HOLLYWOOD WALK OF FAME தேர்வாகியுள்ள தீபிகா… முதல் இந்திய நடிகை என்ற கவுரம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    HOLLYWOOD WALK OF FAME என்பது அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் நகரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலம். இது ஹாலிவுட் வுல்வார்ட் மற்றும் வைன் ஸ்ட்ரீட் ஆகியவற்றில் உள்ள நடைபாதையில், திரைப்படம், தொலைக்காட்சி, இசை, வானொலி, நாடகம் போன்ற பொழுதுபோக்குத் துறைகளில் சிறந்து விளங்கிய பிரபலங்களை கவுரவிக்கும் வகையில் நட்சத்திர வடிவிலான பதக்கங்கள் பதிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிரபலத்தின் பெயர் மற்றும் அவர்கள் சாதனை புரிந்த துறையைக் குறிக்கும் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். 1960ல் தொடங்கப்பட்டு, ஹாலிவுட் சேம்பர் ஆப் காமர்ஸால் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், புதிய பிரபலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு நட்சத்திரம் வழங்கப்படுகிறது. இது உலகளவில் புகழ்பெற்ற ஒரு கவுரவமாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள இந்த HOLLYWOOD WALK OF FAME-க்கு இந்தியாவிலிருந்து தீபிகா படுகோனே தேர்வாகியுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா, நடிகர் ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு துவா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் பிசியாக வலம் வருகிறார் தீபிகா.

    HOLLYWOOD WALK OF FAME-ல் தீபிகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஹாலிவுட்டின் வர்த்தக சபை நேற்று அறிவித்தது. இதன்மூலம் மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை தீபிகா பெற்றுள்ளார். பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார பிரிவில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக இந்த கவுரவம் தீபிகாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு… பாதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்…
    Next Article அஜீத்குமாரை சித்திரவதை செய்ய உத்தரவிட்டது யார்? – அன்புமணி கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    பாரதிராஜா உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம்

    June 11, 2026

    `இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம்  – சீமான் அஞ்சலி

    June 10, 2026

    தமிழ் சினிமாவை வெட்டவெளிகளில் சிறகடிக்க வைத்தவர் இயக்குநர் இமயம் – தமுஎகச அஞ்சலி

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எகிறும் டீசல் விலை..!! லாரி கட்டணம் அதிரடி உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..??

    தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!. ஆளுநருக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!

    பெண்கள் பாதுகாப்பு!. ‘சிங்கப்பெண்’ படைக்கு தேவைப்பட்டால் துப்பாக்கி! ஐ.ஜி. பவானீஸ்வரி விளக்கம்!

    தமிழ்நாட்டின் மீது தொடர்ந்து பாரபட்சம் ; ஒன்றிய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கண்டனம்

    தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் ஆயத்தம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.