Close Menu
    What's Hot

    2 மாதங்களாக சம்பளம் இல்லை; Childline பணியாளர்களின் வாழ்வாதாரத்தை  பாதுகாத்திடுக!. உதயநிதி ஸ்டாலின்!

    “CBSE: 9-ஆம் வகுப்பில் 3-வது மொழி வேண்டாமே..!”- உச்சநீதிமன்றம் அறிவுரை

    “பாமக வாக்கு வங்கி சரிவு; அன்புமணியை தலைவராக ஏற்க முடியாது”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம்: வரலாற்று சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!
    இந்தியா

    பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம்: வரலாற்று சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 15, 2025Updated:July 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250715 WA0075
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியின் திபோர் கபு, மற்றும் போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் நேற்று பூமிக்குத் திரும்பினர்.

    ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் இந்த நான்கு விண்வெளி வீரர்களும் கடந்த மாதம் 25-ம் தேதி, புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் புறப்பட்டனர். 28 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, ஜூலை 26-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன் விண்கலம், அங்கு வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

     

    விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த காலத்தில், அவர்கள் 60 ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 7 சோதனைகளும் அடங்கும்.

     

    நேற்று மாலை 4:45 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பிய இவர்கள், சுமார் 22 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, இன்று (ஜூலை 15, 2025) மதியம் 2:55 மணிக்கு வளிமண்டலப் பகுதிக்குள் நுழைந்தனர். இந்திய நேரப்படி பகல் 3:01 மணியளவில், டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் உள்ள கலிபோர்னியா கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    இது இந்திய விண்வெளிப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். விண்கலம் தரையிறங்கியதும், ஸ்பேஸ்எக்ஸின் மீட்புப் படையினர் நான்கு விண்வெளி வீரர்களையும் பத்திரமாக மீட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் சென்றனர். நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகள், சுக்லாவின் இந்தப் பயணம் இஸ்ரோவின் ககன்யான் திட்டங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர். நான்கு விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக இருப்பதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.

    Axiom-4 Mission Falcon-9 Rocket Gaganyaan Mission International Space Station ISRO Pacific Ocean SpaceX Dragon Subhanshu Shukla ஆக்சியம்-4 திட்டம் இஸ்ரோ ககன்யான் திட்டம் சர்வதேச விண்வெளி நிலையம் சுபான்ஷு சுக்லா பசிபிக் பெருங்கடல் பால்கன்-9 ராக்கெட் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு ‘பொய்களுடன் ஸ்டாலின்’ என்பதே பொருந்தும்” – டி. ஜெயக்குமார் விமர்சனம்!
    Next Article பறிபோகும் கோயில் சொத்துகள்.. பதறிப்போய் ஒரு வழக்கு..
    Editor TN Talks

    Related Posts

    “CBSE: 9-ஆம் வகுப்பில் 3-வது மொழி வேண்டாமே..!”- உச்சநீதிமன்றம் அறிவுரை

    July 16, 2026

    “பாமக வாக்கு வங்கி சரிவு; அன்புமணியை தலைவராக ஏற்க முடியாது”

    July 16, 2026

    பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி: நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்த்தி நூற்பாலைகள் அதிரடி அறிவிப்பு!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2 மாதங்களாக சம்பளம் இல்லை; Childline பணியாளர்களின் வாழ்வாதாரத்தை  பாதுகாத்திடுக!. உதயநிதி ஸ்டாலின்!

    “CBSE: 9-ஆம் வகுப்பில் 3-வது மொழி வேண்டாமே..!”- உச்சநீதிமன்றம் அறிவுரை

    “பாமக வாக்கு வங்கி சரிவு; அன்புமணியை தலைவராக ஏற்க முடியாது”

    பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி: நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்த்தி நூற்பாலைகள் அதிரடி அறிவிப்பு!

    மத்திய அரசு விழாவில் மேயர் பிரியா… பாஜக – திமுக கூட்டணி  நிஜமாகிறதா?  

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.