Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»இந்தியா என்ன முடிவு எடுக்க வேண்டும் என யாரும் கூற முடியாது… துணை குடியரசுத் தலைவர் ஆவேசம்…
    இந்தியா

    இந்தியா என்ன முடிவு எடுக்க வேண்டும் என யாரும் கூற முடியாது… துணை குடியரசுத் தலைவர் ஆவேசம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் இந்திய பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பயிற்சி பெறும் அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றி துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் பேசிய அவர், ”வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கூறும் விசயங்களை கேட்டு, அவர்களுடைய வழிகாட்டுதலின்படி நாம் நடக்க வேண்டியதில்லை. இறையாண்மை வாய்ந்த இந்த நாட்டில், அனைத்து முடிவுகளும் அதன் தலைமையால் எடுக்கப்படுகின்றன என்றார்.

    நம்முடைய உள்நாட்டு விவகாரங்களை எப்படி கையாள வேண்டும் என இந்தியாவுக்கு அறிவுரை கூற பூமியில் வேறு எந்த சக்தியும் இல்லை. பிற நாடுகளுடன் இணக்கத்துடன் உள்ள நாட்டில் நாம் வாழ்கிறோம். ஒன்றாக வேலை செய்கிறோம். பரஸ்பர மதிப்பு மற்றும் தூதரக பேச்சுகளில் ஈடுபடுகிறோம்.

    அமித்ஷாவுக்கு ஜார்கண்ட் முதலமைச்சர் கடிதம் ஆனால், நாம் இறையாண்மை கொண்டவர்கள். நம்முடைய சொந்த முடிவுகளை நாமே எடுப்பவர்கள் என்று பேசியுள்ளார். பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம், பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது.

    9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. எனினும், 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது.

    ஆனால், அமெரிக்காவின் தலையீட்டாலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடைபெறாமல் முடிவுக்கு வந்தது என அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையின் முடிவாகவே போர் நிறுத்தம் ஏற்பட்டது என இந்தியா கூறியது.

    3-ம் நாட்டின் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில், டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும்போது, வான்வெளியில் 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என நினைக்கிறேன்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர்: மருத்துவமனையில் மனைவி குத்திக் கொலை… கணவருக்கு வலைவீச்சு…
    Next Article திருப்பதி : வேற்று மதத்தை சேர்ந்த 4 பேர் பணியிடை நீக்கம்… தேவஸ்தானத்தின் விளக்கம்…
    Editor TN Talks

    Related Posts

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    August 9, 2026

    புதுச்சேரி காவல் துறைக்குச் சிறப்பு சேர்த்த குடியரசுத் தலைவர் வண்ணக் கொடி விருது!. மத்திய அமைச்சர் அமித்ஷா வழங்கினார்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.