Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»ரஷ்யா, ஜப்பான் கடலோர பகுதிகளில் சுனாமி… இந்தியர்களுக்கு எச்சரிக்கை…
    உலகம்

    ரஷ்யா, ஜப்பான் கடலோர பகுதிகளில் சுனாமி… இந்தியர்களுக்கு எச்சரிக்கை…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2025Updated:July 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 21
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரஷ்யா, ஜப்பான் கடலோர பகுதிகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், 3 அடி உயரத்திற்கு சுனிஆமி அலைகள் எழும்பியுள்ளன.

    ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த நிலநசுக்கம் ஏர்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 8.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    இது குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட செய்தியில், ”19.3 கி.மீ ஆழத்தில், 1.65லட்சம் பேர் வசிக்கக் கூடிய அவச்சா என்ற கடலோர நகரத்தில், கம்சாத்ஸ்கை நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 125 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

    எனினும், பின்னர் அது 8.0 என திருத்தி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கம்சத்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் பதிவாகின. இதனால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
    அடுத்த 3 மணிநேரத்தில் தீவிர சுனாமி அலைகள் எழும்ப கூடும் என அமெரிக்காவும் எச்சரித்து உள்ளது. இதனால், பிலிப்பைன்ஸ், பலாவ், மார்ஷல் தீவுகள், சூக், கொஸ்ரே பகுதிகளில் ஒன்று முதல் 3.3 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்ப கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்கொரியா, வடகொரியா மற்றும் தைவானில் ஓரடிக்கு மேல் உயரத்த்தில் அலைகள் எழும்பும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜப்பான் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்து உள்ளது. சுனாமி அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பியுள்ளன. ரஷியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்க தாக்கங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிலநடுக்கம் பற்றிய வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

    ஜப்பானின் பசிபிக் கடலோரம் காலை 10 மணி முதல் 11.30 மணிக்குள் சுனாமி அலைகள் தாக்க கூடும் என ஜப்பானிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சுனாமி எச்சரிக்கை குறித்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்காணித்து வருகிறது. ”அமெரிக்க அவசரநிலை மேலாண்மை மையத்தின் எச்சரிக்கைகளை இந்தியர்கள் பின்பற்ற வேண்டும். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். சான் பிரான்சிஸ்கோ துணை தூதரகத்தின் +1-415-483-6629 என்ற உதவி எண்ணை இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் 12 லட்சம் வடமாநில தொழிலாளர்கள்… அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…
    Next Article சென்னை : காதல் தகராறில் மாணவர் கார் ஏற்றி கொலை… மேலும் ஒருவர் கைது…
    Editor TN Talks

    Related Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    June 1, 2026

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

    June 1, 2026

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.