Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் – எப்படி நிரப்பப்படுகிறது ஹைட்ரஜன்?…. சுவாரஸ்யத் தகவல்…
    இந்தியா

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் – எப்படி நிரப்பப்படுகிறது ஹைட்ரஜன்?…. சுவாரஸ்யத் தகவல்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 hydragon
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள்  மூலம் இயங்கும் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநிலம் ஜிந்தில் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்த வரலாற்றுச் சாதனையின் பின்னணியில், ரயிலுக்கு ஹைட்ரஜன் எரிபொருளை பாதுகாப்பாக நிரப்பும் ஹைட்ரஜன் ரீஃப்யூலிங் ஸ்டேஷன் (Hydrogen Refuelling Station – HRS) முக்கிய பங்கு வகித்துள்ளது.

    இந்த ஹைட்ரஜன் நிரப்பும் நிலையத்தை ஃப்ளூட்ரான் (Fluitron) நிறுவனம் வடிவமைத்து, தயாரித்து வழங்கியுள்ளது. ஜிந்த் நிலையத்தில் எலக்ட்ரோலைசர் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன், ஃப்ளூட்ரான் உருவாக்கிய HRS அமைப்பு மூலம் உயர் அழுத்தத்தில் பாதுகாப்பாக ரயிலின் எரிபொருள் தொட்டிக்கு அனுப்பப்படுகிறது.

    இந்த அமைப்பில்,  மணிக்கு 18 கிலோ ஹைட்ரஜன் நிரப்பும் திறன் கொண்ட, 500 பார் அழுத்த கம்ப்ரசர் அமைப்பு, 350 பார் அழுத்தத்தில் செயல்படும் 2 ஹைட்ரஜன் டிஸ்பென்சர்கள், ஹைட்ரஜன் சுருக்கம், சேமிப்பு மற்றும் விநியோகத்தை முழுமையாக தானியங்கி முறையில் ஒருங்கிணைக்கும் மேலாண்மை அமைப்பு,  ஒவ்வொரு நிரப்பும் செயல்பாட்டிலும் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணிக்கும் தொழில்நுட்பம் உள்ளனர்.

    ஃப்ளூட்ரான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாம் ஜோசப் இதுதொடர்பாக கூறுகையில், “இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் நாட்டின் பசுமை ஆற்றல் பயணத்தில் முக்கிய மைல்கல். மக்கள் ரயிலைப் பார்க்கலாம்; ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் ஹைட்ரஜன் நிரப்பும் உள்கட்டமைப்புதான் இந்த சாதனையை சாத்தியமாக்கியுள்ளது. கொச்சியில் வடிவமைக்கப்பட்டு, கோயம்புத்தூரில் தயாரிக்கப்பட்ட எங்கள் தொழில்நுட்பம் இந்தியாவிலேயே உலகத் தரமான ஹைட்ரஜன் உள்கட்டமைப்பை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது,” என்றார்.

    ஃப்ளூட்ரான் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை இயக்குநர் மோட்டி தாமஸ் கூறுகையில், “மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (MNRE) தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் பல ஹைட்ரஜன் நிரப்பும் நிலையங்களை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும், தார்ஜிலிங், கல்கா–ஷிம்லா மற்றும் நீலகிரி மலை ரயில் பாதைகள் போன்ற பாரம்பரிய வழித்தடங்களிலும் இதேபோன்ற அமைப்புகளை உருவாக்க இந்திய ரயில்வேயுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்,” என்றார்.

    Hydrogen Fuel Hydrogen Fuel Cell Train hydrogen train Indian Railways ndia First Hydrogen Train
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில்.. கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!
    Next Article ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அத்தியாயம் முடிவு; சர்வதேச அரங்கிலிருந்தும் விடை?
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.