Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»விமான விபத்து செய்திகளுக்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது
    இந்தியா

    விமான விபத்து செய்திகளுக்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது

    Editor TN TalksBy Editor TN TalksJuly 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    41c94de0 55a2 11f0 a13f c72f3e976a79.jpg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விமான விபத்து தொடர்பான செய்திகளை வெளியிடுவது தொடர்பாக ஊடகங்களுக்கு விதிகளை வகுக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    குஜராத்தில் மாநிலம் அகமதபாத்தில் இருந்து கடந்த ஜூன் 12 ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழந்து மருத்துவக் கல்லூரியின் விடுதி வளாகத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில் விமானத்தில் பயணித்தவர்களில் 240 நபர்களும், மருத்துவ வளாகத்தில் இருந்த 19 நபர்களும் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு விமான பைலட் தான் காரணம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் இவ்வாறு ஊடகங்கள் சரிபார்க்கப்படாத, யூகமான, அவதூறான கருத்துகளை பரப்பி வருதாக கூறி கோவையை சேர்ந்த வழக்கறிஞர் பிரவீன் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில் விமான விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஊடகங்கள் ஆதாரமற்ற வகையில் செய்தி வெளியிடுவது விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
    விமான விபத்திற்கு பைலட் தான் காரணம் என அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது அந்த விபத்தில் இறந்த பைலட்டுகளை களங்கப்படுத்தும் செயல் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

    அதனால் விமான விபத்து தொடர்பான செய்திகளை வெளியிடுவது தொடர்பாக ஊடகங்களுக்கு விதிகளை வகுக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வத்ஸவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, மனுதாரர் கோரியதைப் போல உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமோடி ஏன் பதிலளிக்க மறுக்கிறார்- செல்வபெருந்தகை கேள்வி
    Next Article ரிதன்யா தற்கொலை வழக்கு மந்தகதியில் நடக்கிறது – தந்தை கவலை
    Editor TN Talks

    Related Posts

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.