Close Menu
    What's Hot

    சிங்கப்பெண் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்? பெண் பாதுகாப்பில் அரசு தோல்வி: டிடிவி தினகரன் சாடல்..!!

    டெல்லி ராஜ்யசபா எம்.பி. தேர்தல்: 255வது முறையாக சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்..!!

    6 மாசம்னு சொன்னாங்க.. ஆனா 6 நாள் கூட அமைதியா இல்ல..!! திருச்சியில் முதல்வர் விஜய் ‘தெறி’ பேச்சு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நேற்று திருவள்ளூர்…. இன்று திருத்தணி: அச்சத்தில் பெண் குழந்தைகள்..
    தமிழ்நாடு

    நேற்று திருவள்ளூர்…. இன்று திருத்தணி: அச்சத்தில் பெண் குழந்தைகள்..

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tntalksthiruthaninews
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த விஜிகே புரம் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி இயற்கையின் அழைப்புக்காக இரவில் வீட்டை விட்டு வெளியே வந்த போது, அச்சிறுமியை ஒரு மனித மிருகம் முள்புதருக்குள்  தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன.

    இரு வாரங்களுக்கு முன் திருவள்ளூரை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால்  ஏற்பட்ட அதிர்ச்சியும், பதட்டமும் குறைவதற்கு முன்பாகவே இப்படி ஒரு கொடூரம் நடந்திருப்பதைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் பெண்களும், குழந்தைகளும்  அச்சமின்றி, சுதந்திரமாக நடமாடவே முடியாதா? என்ற ஐயம் தான் எழுகிறது.

    இந்த கொடிய நிகழ்வு தொடர்பாக அப்பகுதியில்  சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எரோமல் அலி என்ற இளைஞரை ஊர்மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களால் பாலியல் குற்றங்கள் உள்பட பல்வேறு குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தால் சிறுமி மீதான பாலியல் தாக்குதல் முயற்சியை தடுத்திருக்க முடியும். ஆனால், அதை தமிழக காவல்துறை செய்யவில்லை.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  வீண் விளம்பரங்கள், வெற்று நாடகங்களை நடத்துவதை விடுத்து  குழந்தைகளும், பெண்களும் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதாக பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
    Next Article காவலர்களால் தள்ளிவிடப்பட்டதால் மூதாட்டி உயிரிழந்த வழக்கு
    Editor TN Talks

    Related Posts

    சிங்கப்பெண் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்? பெண் பாதுகாப்பில் அரசு தோல்வி: டிடிவி தினகரன் சாடல்..!!

    June 1, 2026

    டெல்லி ராஜ்யசபா எம்.பி. தேர்தல்: 255வது முறையாக சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்..!!

    June 1, 2026

    6 மாசம்னு சொன்னாங்க.. ஆனா 6 நாள் கூட அமைதியா இல்ல..!! திருச்சியில் முதல்வர் விஜய் ‘தெறி’ பேச்சு..!!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிங்கப்பெண் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்? பெண் பாதுகாப்பில் அரசு தோல்வி: டிடிவி தினகரன் சாடல்..!!

    டெல்லி ராஜ்யசபா எம்.பி. தேர்தல்: 255வது முறையாக சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்..!!

    6 மாசம்னு சொன்னாங்க.. ஆனா 6 நாள் கூட அமைதியா இல்ல..!! திருச்சியில் முதல்வர் விஜய் ‘தெறி’ பேச்சு..!!

    முழு டிஜிட்டல் மயம்.. தொடங்கியாச்சு மக்கள்தொகை கணக்கெடுப்பு..!! தமிழ்நாட்டில் எப்போ தெரியுமா..??

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

    June 1, 2026

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.