Close Menu
    What's Hot

    பரந்தூர் விமான நிலையத் திட்டம்..!! விஜய் அரசுக்கு சவால்..!! நடக்கப்போவது என்ன..??

    குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை நீட்டிப்பு!

    திமுக பாதையில் பயணிப்பதா..?? தவெக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»மாவட்டம்»இன்ஸ்டாவில் தொடங்கிய காதல்… 25சவரன் நகை பணம் சுருட்டல்… காதலன் கைது…
    மாவட்டம்

    இன்ஸ்டாவில் தொடங்கிய காதல்… 25சவரன் நகை பணம் சுருட்டல்… காதலன் கைது…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விருதுநகரில் இன்ஸ்டாவில் தொடங்கிய காதலில் காதலியிடம் இருந்து நகை, பணத்தை சுருட்டி ஏமாற்றிய காதலன் கைது செய்யப்பட்டார்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விசைத்தறி அதிபர் நாகசெந்தில். இவரது மகள் நாக அட்சயா, சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் நாக அட்சயாவுக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த லிவின் என்ற இளைஞருடன் அறிமுகமாகியுள்ளார். அவர் நாக அட்சயாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாக காதல் வலையை வீசியுள்ளார். அதில் அட்சயாவும் விழுந்து, காதல் மற்றும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

    இதனை பயன்படுத்திக் கொண்ட லிவின், நீ இங்கு வந்தால் நாம் உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம், அதற்காக வீடு பார்க்க பணம் தருமாறு நாக அட்சயாவிடம் கேட்டுள்ளார். இதை நம்பிய நாக அட்சயா, காதலன் லிவினை கர்நாடகாவில் இருந்து ராஜபாளையத்துக்கு வரவழைத்து தனக்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 25 பவுன் நகையை எடுத்து கொடுத்துள்ளார்.

    அதை பெற்றுக்கொண்டு கர்நாடகா திரும்பிய லிவின், தனக்கு பணம் போதவில்லை. எனவே மேலும் ரூ.50 ஆயிரம் பணம் வேண்டும் என நாக அட்சயாவிடம் கேட்டுள்ளார். இதற்கிடையே லிவினின் பேச்சு, நடவடிக்கையில் சந்தேகமடைந்த நாக அட்சயா ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பின்னர் லிவினிடம் மீண்டும் ராஜபாளையம் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இந்த நிலையில் லிவினின் வருகைக்காக காத்திருந்த போலீசார் திட்டமிட்டபடி அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் நாக அட்சயாவிடம் இருந்து பெற்ற 25 பவுன் நகை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக பறிக்கப் போகிறது… அன்புமணி ராமதாஸ் கண்டனம்…
    Next Article தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவை… கார்கே விமர்சனம்…
    Editor TN Talks

    Related Posts

    இவ்வளவு பக்கத்துல யானையா? ; அலறி அடித்து ஓடிய பெண் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    June 1, 2026

    சிப்காட்டில் பற்றி எரிந்த தொழிற்சாலை கழிவுகள் – தீயை அணைப்பதில் வீரர்கள் மும்முரம்

    May 31, 2026

    கோவையில் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக் கூட்டம் – பங்கேற்காத தவெக அமைச்சர்கள்

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பரந்தூர் விமான நிலையத் திட்டம்..!! விஜய் அரசுக்கு சவால்..!! நடக்கப்போவது என்ன..??

    குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை நீட்டிப்பு!

    திமுக பாதையில் பயணிப்பதா..?? தவெக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

    அமித்ஷாவுடன் சந்திப்பு..!! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை அடுக்கிய அண்ணாமலை..!!

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.