Close Menu
    What's Hot

    WEEK END வரப்போகுது.. தமிழகம் முழுவதும் நாளை முதல் 1,565 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

    திடீரென உடைந்து விழுந்த மதில் சுவர்; உயிர்தப்பிய மாணவர்கள் – பகீர் சிசிடிவி காட்சி

    FIRST NIGHT ரூமாக மாறிய AC கோச்..!! சிக்கிய டிக்கெட் செக்கர்.. அதிரடி சஸ்பெண்ட்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தேவநாதன் யாதவ்க்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
    தமிழ்நாடு

    தேவநாதன் யாதவ்க்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

    Editor TN TalksBy Editor TN TalksAugust 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1310972
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நிதி மோசடி வழக்கில் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் தேவநாதன் யாதவ்க்கு ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

    இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்த நிலையில், மூன்றாவது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மேலும், தேவநாதன் யாதவ் ஜாமீனில் வெளியில் வந்தால் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதற்கான நிதியை திரட்ட முடியும் எனவும் அவர் சாட்சிகளை கலைக்க மாட்டார். கடுமையான நிபந்தனைகளை விதித்தாலும் ஏற்றுக்கொள்ளகவதாகவும் எனவே ஜாமீன் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

    முதலீட்டாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேவநாதன் யாதவ் தாக்கல் சொத்துக்களில் பெரும்பாலானவை மூன்றாம் நபரின் பெயரிலும், நிறுவனங்களின் பெயரிலும் இருப்பதால் அதனை முடக்குவதில் சிக்கல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

    காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், தேவநாதன் யாதவ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு காகிதத்தில் மட்டுமே அதிகமாக இருப்பதாகவும், நிஜத்தில் அதன் மதிப்பு வெறும் 48 கோடி ரூபாய் என்று மட்டுமே கூறினார்.

    மேலும், தேவநாதன் யாதவ்க்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சொத்துக்களை முடக்குவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என உரிமையாளர்களிடமும், நிறுவனங்களிடமும் ஒப்புதல் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Dhevanathan Yadav தேவநாதன் யாதவ்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து மோசடி செய்கிறது – ராகுல் குற்றச்சாட்டு
    Next Article தற்கொலை செய்த ப்ரீத்தியின் உடல் தகனம்
    Editor TN Talks

    Related Posts

    WEEK END வரப்போகுது.. தமிழகம் முழுவதும் நாளை முதல் 1,565 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

    July 9, 2026

    திடீரென உடைந்து விழுந்த மதில் சுவர்; உயிர்தப்பிய மாணவர்கள் – பகீர் சிசிடிவி காட்சி

    July 9, 2026

    தமிழகத்தில் பால் விலை உயர்வு அமல்..!! டீ, காபி விலையில் தாக்கம் ஏற்படுமா?

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    WEEK END வரப்போகுது.. தமிழகம் முழுவதும் நாளை முதல் 1,565 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

    திடீரென உடைந்து விழுந்த மதில் சுவர்; உயிர்தப்பிய மாணவர்கள் – பகீர் சிசிடிவி காட்சி

    FIRST NIGHT ரூமாக மாறிய AC கோச்..!! சிக்கிய டிக்கெட் செக்கர்.. அதிரடி சஸ்பெண்ட்..!!

    பிரதமர்கள் மோடி – அல்பனீஸ் வரலாற்றுச் செல்ஃபி – இந்தியா-ஆஸ்திரேலியா உறவின் புதிய அத்தியாயம்  

    அயோத்தி ராமர் கோவில் காணிக்கை விவகாரம்: காங்கிரஸை வசைபாடிய கங்கனா ரணாவத்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.