Close Menu
    What's Hot

    FIRST NIGHT ரூமாக மாறிய AC கோச்..!! சிக்கிய டிக்கெட் செக்கர்.. அதிரடி சஸ்பெண்ட்..!!

    பிரதமர்கள் மோடி – அல்பனீஸ் வரலாற்றுச் செல்ஃபி – இந்தியா-ஆஸ்திரேலியா உறவின் புதிய அத்தியாயம்  

    அயோத்தி ராமர் கோவில் காணிக்கை விவகாரம்: காங்கிரஸை வசைபாடிய கங்கனா ரணாவத்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழகத்தில் பால் விலை உயர்வு அமல்..!! டீ, காபி விலையில் தாக்கம் ஏற்படுமா?
    Featured

    தமிழகத்தில் பால் விலை உயர்வு அமல்..!! டீ, காபி விலையில் தாக்கம் ஏற்படுமா?

    editor5By editor5July 9, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 19 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகம் முழுவதும் தனியார் பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ஆரோக்யா பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்குப் பின்னர் பிற தனியார் நிறுவனங்களும் விலையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பால் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட டீ மற்றும் காபி விலையும் விரைவில் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பால் கொள்முதல் விலை உயர்வு, விநியோகச் செலவு அதிகரிப்பு மற்றும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றன. புதிய விலை அமலுக்கு வந்துள்ள நிலையில், சமன்படுத்தப்பட்ட பால் 500 மில்லி ரூ.29-ல் இருந்து ரூ.31-ஆகவும், நிலப்படுத்தப்பட்ட பால் 500 மில்லி ரூ.35-ல் இருந்து ரூ.37-ஆகவும், கொழுப்புச் சத்து செறிவூட்டப்பட்ட பால் 500 மில்லி ரூ.39-ல் இருந்து ரூ.41-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேபோல், 1 லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.66-ல் இருந்து ரூ.69-ஆகவும், கொழுப்புச் சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.73-ல் இருந்து ரூ.76-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று முதல் இந்தப் புதிய விலை அமலுக்கு வந்துள்ளது.

    இந்த விலை உயர்வு ஏழை, நடுத்தர வர்க்க மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பால் பயன்பாடு அதிகம் உள்ள குடும்பங்கள், தினசரி தேநீர், காபி பழக்கம் உள்ளவர்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இதனால் கடுமையான பொருளாதார அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    “பால் விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும். குறிப்பாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்” என சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையைச் சரிசெய்ய, அரசு நிறுவனமான ஆவின் பாலின் விற்பனையை தமிழகம் முழுவதும், குறிப்பாக கிராமப்பகுதிகளில் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது பல கிராமங்களில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விலை உயர்வு தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    'milk Price Hike tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரஷிய ஒலிம்பிக் கமிட்டி மீதான தடை நீக்கம்..!! உக்ரைன் அதிருப்தி..!!
    Next Article ஒரே நைட்.. 80 இடங்கள் மொத்தமா காலி!! அமெரிக்காவின் மின்னல் தாக்குதல்.. ஈரான் ஆவேசம்!
    editor5

    Related Posts

    FIRST NIGHT ரூமாக மாறிய AC கோச்..!! சிக்கிய டிக்கெட் செக்கர்.. அதிரடி சஸ்பெண்ட்..!!

    July 9, 2026

    பிரதமர்கள் மோடி – அல்பனீஸ் வரலாற்றுச் செல்ஃபி – இந்தியா-ஆஸ்திரேலியா உறவின் புதிய அத்தியாயம்  

    July 9, 2026

    அயோத்தி ராமர் கோவில் காணிக்கை விவகாரம்: காங்கிரஸை வசைபாடிய கங்கனா ரணாவத்..!!

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    FIRST NIGHT ரூமாக மாறிய AC கோச்..!! சிக்கிய டிக்கெட் செக்கர்.. அதிரடி சஸ்பெண்ட்..!!

    பிரதமர்கள் மோடி – அல்பனீஸ் வரலாற்றுச் செல்ஃபி – இந்தியா-ஆஸ்திரேலியா உறவின் புதிய அத்தியாயம்  

    அயோத்தி ராமர் கோவில் காணிக்கை விவகாரம்: காங்கிரஸை வசைபாடிய கங்கனா ரணாவத்..!!

    ரூ.440 கோடி வங்கிப் பணம் முடக்கம்..!! திரிணாமுல் காங்கிரசை சிக்கவைத்த ED நடவடிக்கை..!!

    ஒரே நைட்.. 80 இடங்கள் மொத்தமா காலி!! அமெரிக்காவின் மின்னல் தாக்குதல்.. ஈரான் ஆவேசம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.