Close Menu
    What's Hot

    இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் வடிவேலு, கவிஞர் வைரமுத்து கண்ணீர் அஞ்சலி!

    மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு இல்லை..!! கவலையில் டெல்டா விவசாயிகள்..!!

    பாலகிருஷ்ணாவின் ‘NBK 111’: மிரட்டலான ‘Entry of an Era’ க்ளிம்ஸ் வீடியோ!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சேலத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ஜெலட்டின் பறிமுதல்
    தமிழ்நாடு

    சேலத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ஜெலட்டின் பறிமுதல்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    salem to kerala
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சேலத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட அதிக வீரியதன்மை கொண்ட இரண்டு டன் ஜெலட்டின் குச்சிகளை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து மதுக்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

     

    சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை வழியாக உரிய ஆவணங்கள் இன்றி வெடி பொருள்கள் கடத்தப்படுவதாக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கேரளாவில் உள்ள கல்குவாரிகளில் பயன்படுத்துவதற்காக வெடிபொருள்கள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தமிழக கேரள எல்லை பகுதியில் சோதனையில் ஈடுபட்டு இருந்த போது , அந்த வழியாக வந்த பொலீரோ வாகனத்தை சோதனையிட்டனர்.
    அதில் அதிக வீரியதன்மை கொண்ட 2 டன் ஜெலட்டின் குச்சிகள் உட்பட வெடிமருத்துகள் உரிய அனுமதி இல்லாமல் கேரளா கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது
    தீவிரவாத தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் தலைமையிலான குழு அதிகாலை 4 மணியளவில் அந்த வாகனத்தைப் பிடித்து மதுக்கரை காவல் நிலையத்தில்
    ஒப்படைத்தனர்.
    தீவிரவாத தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ஜோசப் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மதுக்கரை போலீசார் ஜெலட்டின் குச்சிகளுடன் வந்த வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கேரள மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க பணிகளுக்காக வெடிபொருட்களை கொண்டு சென்று சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாகனத்தை ஓட்டி வந்த கேரளாவைச் சேர்ந்த ஓட்டுனர் சுபேர் என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிபொருள்கள் எங்கு இருந்து கொண்டு வரப்படுகிறது, கேரளாவில் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பன உள்ளிட்ட தகவல்களை அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    இதனிடையே வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மதுக்கரை காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு , வெடிமருத்து கொண்டு வரப்பட்ட வாகனத்தில் இருந்த வெடிபொருட்களை காவல்துறையினர் பரிசோதனைக்கு உட்படுத்தினர். தமிழக கேரள எல்லைப் பகுதியில் இரண்டு டன் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு் வெடிகுண்டு மிரட்டல்
    Next Article முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்- அறிவுரைகள் வெளியீடு
    Editor TN Talks

    Related Posts

    இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் வடிவேலு, கவிஞர் வைரமுத்து கண்ணீர் அஞ்சலி!

    June 11, 2026

    மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு இல்லை..!! கவலையில் டெல்டா விவசாயிகள்..!!

    June 11, 2026

    பரோல் வழங்க அதிகாரம் யாருக்கு? – உயர் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் நியமனம்

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் வடிவேலு, கவிஞர் வைரமுத்து கண்ணீர் அஞ்சலி!

    மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு இல்லை..!! கவலையில் டெல்டா விவசாயிகள்..!!

    பாலகிருஷ்ணாவின் ‘NBK 111’: மிரட்டலான ‘Entry of an Era’ க்ளிம்ஸ் வீடியோ!

    16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை!. கனடா அதிரடி!

    FIFA World Cup 2026: இன்று கோலாகல தொடக்கம்..!! அடேங்கப்பா..!! பரிசுத்தொகை இத்தனை கோடியா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.