Close Menu
    What's Hot

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    விக்ரம்- ஆனந்த் சங்கர் கூட்டணியில் ‘சீயான் 63’: பிரம்மாண்டமாக தொடங்கியது படப்பிடிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அன்புமணி கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்
    அரசியல்

    அன்புமணி கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbu 1740389137
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூங்குபவர்களை எழுப்பி விடலாம் தூங்குவது போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது என அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி தந்துள்ளார். தமிழகத்தில் ஓடாமல் இருந்த பல திருத்தேர்களை ஓட வைத்த பெருமை திமுக அரசை சேரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலில் புதிதாக கட்டப்பட உள்ள அன்னதான கூடம் அடிக்கல் நாட்டும் விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கோயில் வளாகத்தை சுற்றி வந்த அமைச்சர் சேகர்பாபு, வளாகத்தில் பல பணிகள் நடைபெறாமல் இருப்பது கண்டு கோபமடைந்த அவர் அதிகாரிகளை கடிந்து கொண்டார். மேலும் கோயில் வளாகத்தை சுற்றி குப்பைகள் அதிக அளவில் இருந்ததால் தனக்கு திருப்தி இல்லை என்றும் முறையாக பணிகளை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, 900 ஆண்டுகளுக்கு மேல் அருள்தரும் கங்காதேஸ்வரன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடந்தேறியது. இந்த திருக்கோவிலை பொறுத்தவரை இதுவரை 19 கோடி ரூபாய் அளவிற்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைக்கு நாள்தோறும் 100 பக்தர்கள் உணவு அருந்த வகையில் அன்னதான கூடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    அந்த வகையில் அன்னதான கூடம் 94 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளது. மூன்று மாத காலத்தில் பக்தர்களுடைய பயன்பாட்டிற்கு வரும் என கூறிய அவர், திராவிட மாடல் ஆட்சியில் தான் பல்வேறு கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடைபெற்றது. தற்போது வரை மூவாயிரத்து நானூற்றி முப்பத்தி இரண்டு திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இன்றைய தினம் மட்டும் 32 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. வருகின்ற தை மாதத்திற்கு உள்ளாக நான்காயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு காணப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    ஓடாமல் இருந்த பல திருக்கோயில் திருத்தேர்கள் திமுக ஆட்சியில் தான் ஓடியது. அந்த பெருமை திமுகவையே சேரும், 18 ஆண்டுகளுக்கு மேலாக போடாமல் இருந்த சிவகங்கை மாவட்டம் கண்டம்தேவி திருக்கோயில் திருத்துறை ஓட வைத்த பெருமையும் திமுகவையே சேரும் என்றார். அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழி நடத்துவதில் எந்த தவறும் இல்லை என முருகன் கூறுகிறாரே என்ற கேள்விக்கு, இந்தக் கேள்வியை எடப்பாடி பழனிச்சாமிடம் சென்று தான் கேட்க வேண்டும்.

    திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என அன்புமணி கூறுகிறாரே என்ற கேள்விக்கு, தூங்குபவர்களை எழுப்பி விடலாம் தூங்குபவர்கள் போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது. இது தொடர்பாக பதில் அளிப்பதற்காக மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் பதில் அளிப்பார்கள் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகல்குவாரி கத்திகுத்து – 5 பேர் கைது
    Next Article நீதிமன்றத்தில் ஆஜரான கே.டி.ராஜேந்திர பாலாஜி
    Editor TN Talks

    Related Posts

    நயினாருக்கு ‘கல்தா’?… அமித்ஷா முடிவின் பின்னணி… புதிய தலைவர் யார்?

    June 12, 2026

    ராஜினாமா செய்தது ஏன்? 4 எம்.எல்.ஏ-க்கள் 7 நாளில் விளக்கமளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

    June 12, 2026

    பெண்களுக்கு எதிரான கொடுமைகள்.. அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது..!! தவெக அதிரடி..!!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    விக்ரம்- ஆனந்த் சங்கர் கூட்டணியில் ‘சீயான் 63’: பிரம்மாண்டமாக தொடங்கியது படப்பிடிப்பு!

    பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!

    பிஃபா தொடக்க நாளில் சர்ச்சை!. காலி இருக்கைகளும், மெக்ஸிகோ வீதிகளில் வெடித்த போராட்டங்களும்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.