அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அமைந்துள்ள அண்ணா சிலைக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஐ பெரியசாமி பேசும்போது,
* அண்ணா பிறந்தநாளுக்கு எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
* இந்தியாவில் தலைசிறந்த முதல்வராக ஸ்டாலின் உள்ளார். 2026 ஆம் ஆண்டு மீண்டும் 2வது முறையாக ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்.
* முதலமைச்சர் ஸ்டாலினை எந்த விமர்சனமும் தொட்டுப் பார்க்க முடியாது. கடந்த நான்காண்டு காலத்தில் எல்லா தரப்பும் மக்களுக்கும், வியாபாரிகள், தொழில் செய்பவர்களுக்கும், அனைத்துவருக்கும் எண்ணற்ற திட்டங்களை தந்து தொழில்துறையில் மட்டுமல்லாமல் எல்லா துறையிலும் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது.
* விஜய் தற்போது தான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.
* அதிமுகவை பொருத்தவரையில் எடப்பாடியார் 2வது இடத்திற்கு வரவேண்டும் என முயற்சி செய்கிறார்.
* 3வது இடத்திற்கு வர வேண்டுமென சீமானும், விஜயும் முயற்சி செய்கின்றனர்
* இவர்களால் ஒரு இடத்தில் கூட தமிழ்நாட்டில் பிடிக்க முடியாது.
* திமுக குறித்து விமர்சனம் செய்ய செய்ய மக்கள் மனதில் முதலமைச்சர் ஸ்டாலின் இடம் பிடித்துள்ளார் 200 எனக் முதல்வர் கூறினார். கூடுதல் தொகுதி கிடைக்கும்.
* விஜய் தேர்தல் களத்தை சந்திக்கவில்லை.
* மூன்று தேர்தல் களத்தை சீமான் சந்தித்துள்ளார். ஆனால் ஆட்சி மாற்றம் வர வேண்டும் எனக் கூறுகிறார்
* இந்த தேர்தலை பொருத்தவரையில் சீமானுக்கும் – விஜய்க்கும் தான் போட்டி. எங்களுடன் போட்டி இல்லை.
* முதலமைச்சருக்கு போட்டி யாரும் இல்லை. முதலமைச்சர் நட்சத்திரம் உள்ளார்.
* வேண்டுமானாலும் பேசலாம். மக்கள் வாக்குச்சாவடிக்கு சென்றால் வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் பயன் பெறும் எண்ணற்ற திட்டங்களை திமுக கொடுத்துள்ளது. அனைத்து தரப்பு வாக்குகளும் மொத்தமாக திமுகவிற்கு குவியம்.
* யாரும் 20000 முதல் 25,000 ஓட்டுகளை தாண்ட மாட்டார்கள்
* அதிமுக 5000 ஓட்டு அதிகமாக வாங்குவார்கள் திமுக பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
* விஜய் பற்றி கவலைப்படவில்லை, சிந்திக்கப்படவில்லை.
* சினிமா பார்க்கப் போகிறார்கள் வெளியில் சென்றால் மக்கள் மறந்து விடுவார்கள். பொழுது போர்க்கிற்காக மட்டுமே விஜயை பார்க்கிறார்கள்
* விஜயை சினிமாவில் பார்த்தோம் தற்போது நேரில் பார்ப்போம் என மக்கள் செல்கின்றனர்
* கொடுத்த திட்டங்கள் குறித்து நேற்று முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார். எத்தனை திட்டங்கள் செய்துள்ளோம், சொல்லாமல் செய்த திட்டங்கள் அனைத்தையும் வெளியிட்டுள்ளார்.
* 10 நாட்களில் விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை கொடுக்க உள்ளோம். திட்டங்களைப் பற்றி பேசினால் எங்களிடம் எல்லோரும் டெபாசிட் இழந்து விடுவார்கள்.
* சொல்வது எளிது செய்வது அரிது சொல்வதை மற்றும் சொல்லாததையும் முதல்வர் ஸ்டாலின் செய்துள்ளார்.
* விஜய்க்கு 9 தொகுதியில் கூட்டங்கள் வந்துள்ளது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் வரும்பொழுது அதைவிட அதிக கூட்டம் வரும்.
* யாரோ கூறி விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார்.
* 77இல் கம்யூனிஸ்ட் கட்சி எங்களை விட்டு சென்றதால், திமுக 50 இடங்கள் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமைந்தது.
* கம்யூனிஸ்டு கட்சி எங்களை விட்டு சென்றதால் எம்ஜிஆர் ஆட்சி வந்தது. இல்லை என்றால் எம்ஜிஆர் ஆட்சி வந்திருக்காது.
* விஜய் அரசியல் அரிச்சுவடி தெரியாது. ஊருக்கு சென்றால் எல்லோரும் வருவார்கள். ஆயிரம் பேர் வாக்களித்தால் பெட்டி நிறையுமா?
* விஜயை பார்க்க வருபவர்கள் எல்லாம் ஓட்டாக மாறாது.
* திமுக தொண்டன் டீ குடிக்காமல் வேலை பார்ப்பார்கள் 2026 தேர்தலில் அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழக்கும்.
* 200 தொகுதி கிடையாது கண்டிப்பாக 234 தொகுதிகளும் திமுக வெற்றி பெறும்
* விஜய் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்ல சொல்லுங்கள். குறை சொல்வதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். குறை சொல்வது எளிது செயலாற்றுவதுதான் கடினம்.
* ஒரு நிமிடம் ஓய்வு எடுக்காமல் முதல்வர் பணி செய்கிறார். கருணாநிதி கூட பணி செய்யவில்லை. கருணாநிதியை போன்று 3 மடங்கு உழைப்பை கொடுக்கிறார் ஸ்டாலின்.
* தேர்தல் களத்தில் நாங்கள் ஆற்றுகின்ற பணி நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். மிகப்பெரிய வெற்றி இதுவரை பெறாத வெற்றி திமுகவிற்கு கிடைக்கும்” என தெரிவித்தார்.