சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு வருகை புரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று ரோபோ ஒன்று கை கொடுத்து அசத்தியது.
நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது, முதலமைச்சர் அறிவுறுத்தல் படியும் வழிக்காட்டுதல் படியும் பள்ளிக்கல்விதுறை முன்னேறி வருகிறது. பெரியாரின் திருவுருவமாக முதல்வர் திகழ்கிறார். பள்ளிக்கல்விதுறைக்கு பல திட்டங்களை மாணவர்கள் நலனுக்காக கொடுத்து வருகிறார்.
கல்வியும் சுகாதாரமும் தனது இரு கண்கண் என முதல்வர் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்.
நிகழ்ச்சிக்கு வந்த அனதை்து குடும்ப உறுப்பினர்களையும் நான் வரவேற்கிேறேன் என தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கிய இலக்கை தாண்டி நாங்கள் சென்று கொண்டு உள்ளோம். தமிழ் தேர்வில் 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு உதவிதொகையாக 10 ஆயிரமாக வழங்க உள்ளோம் என கூறினார். அதனால் இது முப்பெரும் விழா அல்ல ஐம்பெரும் விழாவாக நடைபெற உள்ளது.
1996 ஆம் ஆண்டு தொடக்கபள்ளியின் எண்ணிக்கை தமிழகத்தில் 7 ஆயிரமாக இருந்தது அப்போது முதல்வராக கலைஞர் அவர்கள் இருந்தார். இது வரை 9024 வகுப்பறைகளை காட்டியுள்ளோம், 2027 க்குள் 17,000 வகுப்பறைகளை கட்டி முடிப்போம்,இதர கட்டிடங்களை நான் குறிப்பிடவில்லை என கூறினார். அரசு விழாவில் அரசியல் பேசுகிறேன் என நினைக்க வேண்டாம் என கூறி ஏற்கனவே தமிழகத்தில் இருந்த அரசு ஒன்றிய அரசிடம் சென்று உரிமை குரல்களை இழந்து, நாக்குகளை இழந்து, அரணாக இருக்க வேண்டிய கைகளை இழந்து இருக்கிறார்கள் எனவும் இனிமேல் தமிழ்நாட்டிற்கு பிரயோஜனம் பட மாட்டார்கள் என்பதை ஒட்டுமொத்த தமிழக மக்களும் உணர்ந்து உள்ளதாக பார்கிறேன் என தெரிவித்தார்.
அறிவு சார்ந்த மக்கள் இடம் அரசியல் சென்று சேர்ந்ததால் தான் நாட்டு மக்களுக்கு அரசன் என்ன செய்கிறார் என தெரியும் கூறினார். பட்டதாரி ஆசிரியர்களே உங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கும் ஆறு மாதத்தில் பொது தேர்வு வந்துவிடும் எனவும் எங்களுக்கும் பொது தேர்தல் வந்துவிடும் எனவும் நீங்களும் வெற்றி பெற வேண்டும் நாங்களும் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 புதிய ஆசிரியர்களுக்கு நுழைவு நிலைப்பயிற்சியை வழங்க இருந்த நிலையில் இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி வரும் வழியில் விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு இந்த நிகழ்ச்சியில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
