Close Menu
    What's Hot

    ஐபிஎல் 2026!. கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – க்ருணால் பாண்டியா!. வைரல் வீடியோ!.

    திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய்..! வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்..!

    IPL 2026 சாதனை பட்டியல்!. CSK அணிக்கு பெருமை சேர்த்த சஞ்சு சாம்சன்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தொழிலபதிர் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
    தமிழ்நாடு

    தொழிலபதிர் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 20, 2025Updated:September 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    43851432 raid
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டவிரோத பண பரிமாற்றம் செய்த விவகாரத்தில் தொழிலதிபர், நகைக்கடை உரிமையாளரின் வீடுகளில் இரண்டாவது நாளாக சோதனை: பல நிறுவனங்களில் முதலீடு செய்த ஆவணங்கள் சிக்கின.

    சென்னை சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக கட்டுமான நிறுவன தொழிலதிபர் ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் நகைக்கடை உரிமையாளருக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்த ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா ரெட்டி. தொழிலதிபரான இவர் மார்க் குழுமம் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனங்களில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அதில் பல கோடி ரூபாய் பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்தது தெரியவந்தது.

    அதை தொடர்ந்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக தனியாக ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் அவரது கட்டுமான நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தொழிலதிபர் ராமகிருஷ்ணா ரெட்டிக்கு சொந்தமான சைதாப்பேட்டையில் உள்ள வீடு, திருவான்மியூரில் உள்ள கட்டுமான அலுவலகம், செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சீக்கினாங்குப்பம் என்ற பகுதியில் உள்ள மார்க் ஸ்வர்ணபூமி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    தொழிலதிபர் ராமகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் முதல்வரின் தோழியின் பினாமியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில், தொழிலதிபர் கடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட காலக்கட்டத்தில் பல கோடி ரூபாய் பணத்தை இவரது கட்டுமான நிறுவனத்தின் மூலம் மாற்றி கொடுத்ததற்கான ஆவணங்கள் பல சிக்கியதாக கூறப்படுகிறது. அது தொடர்பான வங்கி பணப்பரிமாற்றம் செய்த ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழிலதிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல், சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த தங்க நகை மொத்த வியாபாரியான மோகன்லால் காத்ரி என்பவருக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள வீடு, அவரது ஜூவல்லரி கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக நேற்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article6 மாதத்தில் மாணவர்களுக்கும், எங்களுக்கும் பொதுத்தேர்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு…
    Next Article மூளைச்சாவு அடைந்த மீனவர் உடலுறுப்புகள் தானம் – அரசு சார்பில் எம்.எல்.ஏ. மரியாதை
    Editor TN Talks

    Related Posts

    ஐபிஎல் 2026!. கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – க்ருணால் பாண்டியா!. வைரல் வீடியோ!.

    June 1, 2026

    திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய்..! வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்..!

    June 1, 2026

    IPL 2026 சாதனை பட்டியல்!. CSK அணிக்கு பெருமை சேர்த்த சஞ்சு சாம்சன்!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐபிஎல் 2026!. கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – க்ருணால் பாண்டியா!. வைரல் வீடியோ!.

    திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய்..! வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்..!

    IPL 2026 சாதனை பட்டியல்!. CSK அணிக்கு பெருமை சேர்த்த சஞ்சு சாம்சன்!

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    Trending Posts

    ஐபிஎல் 2026!. கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – க்ருணால் பாண்டியா!. வைரல் வீடியோ!.

    June 1, 2026

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    June 1, 2026

    மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை; ரூ.3,283க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை

    June 1, 2026

    திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய்..! வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்..!

    June 1, 2026

    IPL 2026 சாதனை பட்டியல்!. CSK அணிக்கு பெருமை சேர்த்த சஞ்சு சாம்சன்!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.