Close Menu
    What's Hot

    குடிநீர் தேவைக்காக… அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!.

    உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»இளையராஜாவால் சோனி நிறுவனத்துக்கு வந்த சிக்கல்
    தமிழ்நாடு

    இளையராஜாவால் சோனி நிறுவனத்துக்கு வந்த சிக்கல்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ilayaraja
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய சோனி நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதி பெறாமல் சோனி நிறுவனம் பயன்படுத்தி வருவதோடு பாடல்களை மாற்றியமைப்பதாகவும் மனுவில் கூறியுள்ளார். மேலும், யூடியூப் உள்ளிட்ட தளங்களில் பயன்படுத்தியதன் மூலம் சோனி நிறுவனம் வணிக ரீதியாக பலனடைந்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சோனி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை காப்புரிமை சட்டத்தை மீறும் செயல் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது பாடல்களை பயன்படுத்தியதன் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தில் 50 சதவீத தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

    சோனி நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எக்கோ நிறுவனத்திடம் இருந்து தாங்கள் பாடல்களை உரிமையை பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்பட்டது.

    இதனையடுத்து, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய சோனி நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    High Court ilayaraja sony entertainment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக கட்சிக்கு சிக்கல் – விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவு
    Next Article நாமக்கல், கரூரில் விஜய் பிரச்சாரம்
    Editor TN Talks

    Related Posts

    குடிநீர் தேவைக்காக… அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!.

    June 19, 2026

    உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!

    June 19, 2026

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குடிநீர் தேவைக்காக… அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!.

    உலக யோகா தினம்..!! பல்வேறு ஆசனங்கள் செய்து மாணவிகள் அசத்தல்..!!

    டிஜிபி சந்தீப் மிட்டல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    தவெகவில் இணைவா..?? ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க..!! பங்கம் செய்த செல்லூர் ராஜு..!!

    ராகுல் காந்தி பிறந்தநாள்!. மணக்குள விநாயகர் கோயிலில் தங்க தேர் இழுத்து காங். கட்சியினர் கொண்டாட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.