Close Menu
    What's Hot

    ஆள் தூக்கும் அரசியல்… தவெகவுக்கு எதிராக கைகோர்க்கும் அதிமுக – திமுக!

    ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»கரூர் சென்றது எதற்காக?… 8 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழு விளக்கம்…
    அரசியல்

    கரூர் சென்றது எதற்காக?… 8 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழு விளக்கம்…

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 30, 2025Updated:September 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Hema Malini
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து பேசி அறிக்கை அளிப்போம் என்று கோவை விமான நிலையத்தில் ஒருங்கிணைப்பாளர் ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.

    கரூர் வேலாயுதம்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உள்ளது. மேலும், 51 பேர் கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஒருங்கிணைந்த விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பின் பேரில் ஒருங்கிணைப்பாளர் ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு கரூரில் நிலைமையை ஆய்வு செய்ய சென்றுள்ளது.

    குழுவில் பாஜக எம்.பி.க்கள் ஹேமமாலினி, அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால் (முன்னாள் டிஜிபி), ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவ சேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா, புட்ட மகேஷ் குமார் (தெலுங்கு தேசம் கட்சி) ஆகிய 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    கோவை விமான நிலையம் வந்தடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமமாலினி, “கரூரில் நடந்த துயரமான விபத்து குறித்து கேட்டறியவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்து உள்ளோம். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க உள்ளோம். பின்னர், நடந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்படும்” என்றார்.

    நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தது குறித்து கேள்விக்கு, “நாங்கள் இதுவரை அவரைச் சந்திக்கவில்லை. 8 பேர் கொண்ட எங்கள் குழு நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்திக்க இருக்கிறது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்திப்போம்” என்று குழு உறுப்பினர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

    accident BJP Karur Stampede Study TVK Vijay ஆய்வு கரூர் கூட்ட நெரிசல் தவெக பாஜக விபத்து விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுண்டர்கள் கற்கள், செருப்புகளை வீசினர்; நான் நிரபராதி – முன்ஜாமின் மனுவில் புஸ்ஸி ஆனந்த் தகவல்
    Next Article ஆயுதபூஜை சிறப்பு பேருந்து – அமைச்சர் ஆய்வு
    Editor TN Talks

    Related Posts

    ஆள் தூக்கும் அரசியல்… தவெகவுக்கு எதிராக கைகோர்க்கும் அதிமுக – திமுக!

    May 31, 2026

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    May 31, 2026

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆள் தூக்கும் அரசியல்… தவெகவுக்கு எதிராக கைகோர்க்கும் அதிமுக – திமுக!

    ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.